உலகில் ஒருவனின் பிறப்பு என்பது யாரோ இருவரால் உறவு கொள்ள பட்டு, பாசம் ஊட்டப்பட்டு தான் பிறக்கிறது. அப்படி பட்ட பிறப்பின் அருமை பெருமைகளை உணர ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலம் எடுக்கிறது. அந்த யாரோ இருவருக்கு பிள்ளையாக பிறந்து பின் இந்த சமுதாயத்தில் பல்வேறு முக பாவனையில் வலம்வரும் இந்த பிள்ளைகளின் பாவனை என்றும் அவர்களுக்கு புதிதே. ஒருவனின் வாழ்வியல் மாற்றம் என்பது அவன் சிந்திக்கும் ஒவ்வொரு செயல்களில் இருந்து தான் வருகிறது. பிள்ளைகளின் மனப்பான்மை ஒவ்வோர்
காலகட்டத்திலும் மாறுபடுகிறது. மாற்றப்படுகிறது. பெற்றோர் என்பவர்கள் எப்படியாவது தம்
பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். இது ஒரு இயல்பான விஷயம் தான்.
இன்றும் ஒரு சில பெற்றோர்களுக்கு தன் பிள்ளைகள் என்ன? செய்கிறார்கள் அவர்களது விருப்பம் தான் என்ன? என்று கூட அவர்களால் யூகிக்க முடியவில்லை. பெற்றோர்க்கும் பிள்ளைகளுக்கும்மான உறவுகள் அவர்கள் உயிர் நீத்த பின்னும் நீடிக்கிறது. ஆனால் மன ஒற்றுமை என்பது வேறுபட தான் செய்கிறது. பிள்ளைகள் செய்யும் செயல்கள் ஒரு சில பெற்றோர்களுக்கு செரிமானம் ஆக தாமதம் ஆகிறது.
உறவுகள் வளர்கின்ற அளவிற்கு இருவருக்கும்மான புரிதல் வளர்வதில்லை.
-Sun Muga-
10-11-2013 00.28 AM