August 5, 2018

தேடுதல்

கண்கள் உன்னை
தேடும் போது
உன் மீதான கற்பனைகள்
என் நெஞ்சை வாட்டுகிறது..

வானம் பார்த்த ஊரில்
வனமாய் நீ
என் நெஞ்சில்...

என் வீட்டு படியிலிருந்து
பார்த்தால் பாதி ஊர் தெரியும்
வாழ்க்கையின் பாதியாய்
இருக்கும் நீ
எப்போது தெரிவாய்...

உன்னை தேடும் போது
வார்த்தைகளை விட
மெளனமே மிக அழகு...

-SunMuga-
05-08-2018 21:29 PM