March 1, 2023

நெகிழி

பூமியின் அழகு மரம்
மரத்தின் அழகு  பூக்கள்
பூக்கள் போல
இப்பூமியில்
நம் தலைமுறை 
வளர பொறுப்பேற்போம்

நெகிழியை தீயிட்டு
எரித்தாலும் தீமை தான்
மையிட்டு அழகு 
பார்த்தாலும் தீமை தான்..

தீமை என்று
தெரிந்தே நாம் தீண்டினால்
எதிர்காலத்தில்
எத்தனை தீபம் 
ஏற்றினாலும் தீராது 
நம் துயரம்...

மரம் மண்னோடு 
பேசினால் உரம்,
அதுவே நாளைய
தலைமுறைக்கு வரம்...

நதிகள் மட்டும்
கடலில் கலக்கவில்லை
நம் தலைமுறையின்
தலையெழுத்தும் கலக்கிறது

தூக்கி எறிவதால்
ஒரு துயரமும் இல்லை
இன்றே தூக்கி எறிவோம்
நெகிழியை குப்பையில் இல்லை
நம் மனதில் இருந்து..

மானம் காப்பது
நாம் உடுத்தும் துணிகள் (உடைகள்)
நம் தலைமுறையை
காப்பது
துணியால் நெய்த பைகள்..

தீமை என்று
தெரிந்த பிறகு 
தீண்டாமல் இருப்பது
தான் நலம்
அதுவே
நம் தலைமுறைக்கு வளம்...

வளம் சேர்ப்போம்!!
நெகிழியை தவிர்ப்போம்!!
-Sun-
01-03-2023 07:00 AM


February 19, 2023

அறிவை வளர்போம்

அழகை விட
அறிவை வளர்போம்!
அயராது உழைப்போம்!

கல்வியே நேசிப்போம்
நல்ல புத்தம் வாசிப்போம்

பெண்கள் உயர
அறிவு வளர வேண்டும்

அறிவு வளர 
கல்வி உயர வேண்டும்!

கல்வி வளர
நமது கல்லூரி உயர வேண்டும்!

நம் கல்லூரியின்
நூலகத்தில் நூலளவு
படித்தால் போதும்
அடுப்பாங்கரை வாழ்க்கைக்கு
விடுதலை கொடுக்கலாம்

படி! படி! இதுவே
வாழ்க்கையே உயர்த்தும்
ஒரு படி..

"சில்வியா பிளாத்"
பற்றி படியுங்கள்
சிந்தனை வளரும்

"சித்திரம் பற்றி 
படியுங்கள்
கற்பனை வளரும்

" கடவுளை பற்றி
படியுங்கள
மன அமைதி வளரும்

படித்தால் பெண்கள்
மட்டும் அல்ல
இந்த உலகமே வளரும்..