March 1, 2023

நெகிழி

பூமியின் அழகு மரம்
மரத்தின் அழகு  பூக்கள்
பூக்கள் போல
இப்பூமியில்
நம் தலைமுறை 
வளர பொறுப்பேற்போம்

நெகிழியை தீயிட்டு
எரித்தாலும் தீமை தான்
மையிட்டு அழகு 
பார்த்தாலும் தீமை தான்..

தீமை என்று
தெரிந்தே நாம் தீண்டினால்
எதிர்காலத்தில்
எத்தனை தீபம் 
ஏற்றினாலும் தீராது 
நம் துயரம்...

மரம் மண்னோடு 
பேசினால் உரம்,
அதுவே நாளைய
தலைமுறைக்கு வரம்...

நதிகள் மட்டும்
கடலில் கலக்கவில்லை
நம் தலைமுறையின்
தலையெழுத்தும் கலக்கிறது

தூக்கி எறிவதால்
ஒரு துயரமும் இல்லை
இன்றே தூக்கி எறிவோம்
நெகிழியை குப்பையில் இல்லை
நம் மனதில் இருந்து..

மானம் காப்பது
நாம் உடுத்தும் துணிகள் (உடைகள்)
நம் தலைமுறையை
காப்பது
துணியால் நெய்த பைகள்..

தீமை என்று
தெரிந்த பிறகு 
தீண்டாமல் இருப்பது
தான் நலம்
அதுவே
நம் தலைமுறைக்கு வளம்...

வளம் சேர்ப்போம்!!
நெகிழியை தவிர்ப்போம்!!
-Sun-
01-03-2023 07:00 AM