November 22, 2014

முகா

மூச்சு முட்டும் போது கூட
நீ உச்சரித்த வார்த்தை
முகா!!!!
முகா!
என்று என்னை முதல் முதலில்
அழைத்தது நீயாக மட்டுமே
இருக்க முடியும் இந்த
உலகத்தில்..
முகா!
உன் முகம் பார்த்த நொடிகள்
ஏனோ நான் மடிய நினைத்த
நொடிக்கு முன் கூட கடந்து
வந்தது!!

November 16, 2014

கவிதை

உன் மீதான என் காதலுக்கு என்னில் எப்போதும் ஆதாரமாக இருப்பது என் கண்ணில் ஒரு துளி கண்ணீர் மட்டும் தான். பெண்ணே! உன்னைப் பற்றி நான் எழுதிய கவிதை உனக்கே பிடித்தும் பிடிக்கவில்லை என்றால், நான் யாரிடம் காட்டிக் கொள்ள முடியும், இது நான் எழுதிய கவிதை என்று. அதனாலேயே பல கவிதைகளை என் மனதின் அடி ஆழத்தில் புதைத்து விடுகிறேன் பல நேரங்களில்..
உன்னைப் புரிந்து தான் பிரிந்து வாழ்கிறேன். உன்னை பிரிந்து நான் வாழவில்லை. எதோ ஒரு இரவில் உன் பிரிவை நினைத்து மூச்சு முட்டும் போது மட்டும் உன் முதல் முத்தத்தின் மூச்சுக் காற்றின் வெப்பம் தேவைப்படுகிறது..
இப்போது பெரும் பாரமாக நீளும் இந்த இரவுகள், மிக நீண்ட வரமாக மாற வேண்டும் உன்னோடு நான் கழிக்கும் போது. உன் கண்ணோடு மட்டுமே பேசிப் பழகிய என் கண்கள் இன்று ஏனோ கலங்குகிறது. கல்யாணத்திற்கு பிறகான இரவாகவே என் கனவுகள் விரிகிறது. விரிந்த கனவில் நான் ஏனோ உன் காதலின்  தடம் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

November 10, 2014

கண்ணீர் கவிதைகள்

என்னுள் " நீ" இருந்தும்
கண்ணில் "கண்ணீர்"!!
இதயம் துடிக்கிறது - உன்
நினைவில்,
கண்ணீர் கசிகிறது - உன்
பிரிவில்..
" காதல்" என்ற என் கேள்விக்கு
"காலம்" தந்த பதில்
"கண்ணீர்"!!
மண்ணில் விழாமல்
வீதி எங்கும் என்
கண்ணீர் மழை!!
கண்ணீர் விடவும் மனமில்லை
கண்ணில் " நீ" என்பதால்,
விடாமலும் இருக்க
முடியவில்லை மனதில்
"நீ" என்பதால்!!
-SunMuga-
  2011

கவிதை வரிகள்

மண்ணில் புதைவதற்கு முன்னால்
அவள் மனதில் புதைந்து விட்டேன்,
ஆஹா! கவிதை வரிகளாக!!
என்னுள் "நீ" என்பதால்,
கண்ணில் "நீ",
கண்ணில் "நீ" என்பதால்,
நம்மில் " காதல்"..
"காதல்" என்றால் என்ன?
கண் - பார்க்கும் போது
              பேசிக்கொள்வது
கண் - காணாத போது
              கண்ணீர் விடுவது..
என் காதலின் பிறப்பிடம்
அவள் " விழி" என்றால்,
அவளின் இருப்பிடம் என்
"இதயம்" தானே?
பிழையுள்ள என் கவிதையை
காதலிக்கிறாள்,
என்னையோ வெறுக்கிறாள்!
வரிகள் ஒவ்வொன்றும்
உன்னை தழுவியது,
அது உன்னை தழுவியதாலோ!
என் கவிதை வரிகளோடு
பின் தொடரும் உன்
விழி எப்போது என்னை
பின் தொடரும் என் உயிரே!!
பட்டம் நானாக,
கவிதை வரி என்ற
நூலாக நீயாக,
எங்கோ பறக்கிறதடி
என் மனம்....
-SunMuga-
  2011

November 9, 2014

திருமண வாழ்க்கை

காலைச் சூரியன் கண்
திறந்து பார்க்கிறான்;
சந்தோஷமாக பலர்
பாதங்கள் நடை போட
ஆரம்பிக்கிறது;
தலை குனிந்து வணக்கம்
சொல்லும் வாழை மரம்;
செவ்விதழ் ரோஜாவும்,
மனம் மயக்கும் சந்தனமும்,
அதற்கு அழகு சேர்க்கும்
குங்குமமும்,
சிறு துளி பன்னீர் மழை
தூவும் குவளையும்,
காதுக்கு இனிமை சேர்க்கும்
மத்தளமும் முழங்க;
அரங்கம் முழுதும் மூத்தோர்,
பெற்றோர், இளையோர்,
தோழர்கள், தோழிகள்
மற்றும் வாழ்த்த வயதில்லை
என்று தன் பெற்றோரை விட
அழகா! என்று மெய் மறந்து
தன் அம்மாவின் மடியில்
அமர்ந்திருந்த மழலைச்
செல்வமும்,
எங்கள் திருமணத்தின் போது..
அவளின் வளையல் ஒளி
ஒளிரும் ஒளியை மிஞ்சும்,
அவள் கொலுசின் ஒலி
மத்தள ஒலியை தோற்கடிக்கும்;
வண்ண மீன் போன்ற
தன் கண்களுக்கு
கரு மையினால்
வலை போட்டு;
கண்ணிலே ஜடை செய்து
ஒரு வித நமட்டுச் சிரிப்புடன்
மணமேடையில் என் அருகே
வந்து அமர்ந்தாள் என்னவள்;
வாழ்த்துக்கள் தூவ
கட்டினேன் மூன்று முடுச்சு;
அன்பில் என் அன்னையாக
என்றும் நீ இருக்க வேண்டும்
என்று முதல் முடுச்சு;
பாசத்தில் உன் தந்தையாக
என்றும் நான் இருப்பேன்
என்று இரண்டாவது முடுச்சு;
உன் குழந்தையாக என்றும்
உன் மடியில் தவழ வேண்டும்
என்று மூன்றாவது முடுச்சு;
மலிந்த ஒளியில் புரட்டி
படித்தேன் - என் கவிதையை
ஆஹா! என்ன அழகு,
படித்ததும், படிக்காததும்;
என் கவிதையில்
மச்சம் என்னும் கரும் புள்ளியோ,
மேற்குறியீடாக தோன்றுகிறது,
மற்றொரு மேற்குறியீடு எங்கே
என்று தேடித் தேடி படிக்கிறேன்..
வார்த்தை வரிகளை விட
என் கை ரேகையே அதிகம்
தென்படுகிறது- என் கவிதையில்
நான் கொஞ்சம் தொட்டுப்
படித்ததால் என்னவோ!!
காற்புள்ளிக்கோ வெகுமதி
என் கவிதையில்,
கிடையாத ஒன்றை கிடைக்கும்
என்ற அரை மனதில்
தேடிப் பார்க்கிறேன்
முற்றும் முற்றுப் பெறாத
முற்றுப் புள்ளியை;
என் கவிதையின் ஒரு
கேள்வி; நமக்கு ஓர்
உயிர் உருவானால்
என்னை எப்படி
கவனிப்பாய் என்று?
என் குழந்தைக்கும்
குழந்தையாம்!!
உன் விளையாட்டு
பொருளாகவே மாறி விட
ஆசையடி;
மயங்கும் மாலைப் பொழுதில்
குழந்தை போல,
உன் விரல் பிடித்து
நடப்பேன் என்றேன்;
மறுகனம் அவளோ கால்
வலித்தால் என்றால்?
என் கண்ணீரை காய்ச்சி
ஒத்தனம் கொடுப்பேன்
என்றேன்;
அவளும் சொல்கிறாள்
I Lv U என்று கண்ணீரோடு ;
நீ குனிந்து உன்
உடை மாற்ற விட மாட்டேன்;
உன் உடையையும் நானே
துவைப்பேன்;
சமைப்பது உன் விரலாக
இருந்தாலும், ஒரு சில
வேலைகளை சமாளிப்பது
என் விரலாக இருக்கும்..
வீட்டை நீ துடைத்தாலும்
என் மனம் விட்டுக் கொடுக்காது;
நீ தூங்கும் போது
நீ திரும்பிய பக்கமெல்லாம்
நான் இருப்பேன் உன் கை
என் மேல் படவே;
நம் இரு உயிரும்
கண்ணீர் விடுகிறது நம்
உயிரின் பாதம் கழுவுவதற்காக..
உன் விழி போல்
அவன் விழி,
விழியின் கருவிழி போல் மேனி,
பிறந்தான் நம் மகன்...
வலியில் நீ துடித்தாலும்
நம் மகனின் விழியை
பார்த்து சிரிக்கிறாயே
என் உயிரே!
என் விரலில் முத்தமிட்டபடி;
-SunMuga-

November 6, 2014

பிறை நிலா

நிலவே!
உன் முகம் பார்த்தே
பல இரவை கடந்து விட்டேன்
இப்போது காத்திருக்கிறேன்
நான் இறப்பதற்கு!!!
பகல் பொழுதில் கூட
இந்த சூரியன் தேடும்
நிலவு நீ!!
நீ இல்லமால் ஒரு
நாளும் நான் ரசித்தது இல்லை
அந்த நிலவை!!
நிலவே!!
இரவில்
கரையில் அமரும்போதெல்லாம் உன் கரம் தேவைப்படுகிறது..
இரவில் பொங்கி எழும்
அலைகள் கடலின் உள்ளே
அடங்குவது போல
உன் மீதான ஆசைகளும்
என்னுள்ளே அடங்கிவிடுகிறது..
நிலவொளியில்
கடல் காற்றை விட
உன் மூச்சுக் காற்றே
என்னை முத்தமிட வைக்கிறது..
நிலவொளியில்
நீ அமர்ந்து ஆடிய
ஊஞ்சல் என்னவோ
இன்னும் ஆடிக் கொண்டே
இருக்கிறது என் கண்களில்..
உன் கன்னத்தோடு
என் கன்னம்
சேர்த்து ஒரு நாளவது
நான் கான வேண்டும்
அந்த நிலவை!!!
நீ இல்லாத போது
நிலவோடு பேசிக் கொள்கிறேன்,
நீ இருக்கும் போது
நிலவோடு பேசிக் கொள்வதாய் எண்ணிக் கொள்கிறேன்..
இருளில் தானே
நிலவு இருக்கும்,
நீ உன் உடைக்குள்
அடங்கி இருப்பதை போல..
கொளுத்தும் வெயிலை விட, கொட்டும் பனியின்
கொடுமை அதிகம்
நீ இல்லாத போது...
இரவில்!
நடுங்குவது போலவே
நடித்து கொள்கிறாய்
நான் உன்னை அனைத்துக்
கொள்ள...