நிதானமாக
வடியும் கண்ணீருக்கெல்லாம்
வயதை விட
வறுமையின் முதிர்ச்சியே
அடையாளம்..
-SunMuga-
11-12-2017 00:56 AM
December 13, 2017
வறுமை
இந்த இரவு
உன்னை மேய வேண்டிய
இந்த இரவில்
கீரையை ஆய
விடுகிறாயே
இது என்ன நியாயம்!!!
-SunMuga-
13-12-2017 22:00 PM
December 11, 2017
நிழற்படம்
உன் நிழற்படம்
பார்த்த மறுநொடியில்
வரும் கண்ணீரெல்லாம்
வாழ்வின்
ஒரு வரமும் கூட...
-SunMuga-
11-12-2017 00:40 AM
கடற்கரை
எண்ணற்ற பாதச்சுவடுகளின்
நடுவே
நம் இருவரின்
பாதச்சுவடையும் பதித்து
வந்த நாள் இது...
கரைகளில் ஒதுங்கும்
நுரைகளை போல,
அதன் பாதைகளை கடக்கும்
போதெல்லாம்
உன் நினைவுகளும்
என் மனதில் ஒதுங்கும்,
ஒதுங்கும் நினைவுகளை
கொண்டு
ஓராயிரம் அல்ல
ஒரு கவிதையாவது
மணல் மேட்டில்
எழுதி வைக்க
ஒரே ஒரு ஆசை...
-SunMuga-
11-12-2017 00:45 AM
December 1, 2017
சில கண்ணீர்
சில கண்ணீர் நினைவுகளை
தழுவியது
சில கண்ணீர் நியாங்களை
தழுவியது
நினைவுகள் பெருகுவது ஏனோ
எந்த விதத்தில்
நியாயம் என்ற குழப்பமே
சில கண்ணீரை வரவழைக்கிறது...
-SunMuga-
01-12-2017 22:05 PM
March 18, 2017
2017 கவிதைகள் 21 to 30
முதுகிலே
முத்தமிட்டு தொடங்கிய
இரவு
முகத்திலே முத்தமிட்டு
முடிந்து விடிய
வேண்டும்.... 21
விரயம் செய்யாத இரவு
வேர்வை தந்தாலும்
வாழ்வின்
வேதனை குறைக்க
நாம் வேண்டிய மழலையை
அதுவும் கொடுக்கும்.... 22
பெருமுச்சு
பெரிதாய் நீ விடும்
இரவில்
பெருமழை பெய்த சுவடு
உன் முதுகில் இருக்கும்... 23
எவை வேண்டும்
என்றும்
எது வேண்டும்
என்றும்
எனக்கான அனைத்தும்
எனக்கே கொடுத்து
உனக்கான
சிறு முத்தம் மட்டுமே
பெற்றுக் கொள்வாய்
நம் சிறு மழலைப் போல... 24
உன் முத்தத்திலிருந்து
மீள்வது கடினம்
அதைவிட கடினம்
அதன் நினைவிலிருந்து... 25
அச்சம் பிறந்த போது
அடுப்படியில் புகுந்தாய்
மச்சம் பார்த்த போது
மாடிப்படியில்
என்னோடு கழித்தாய்
மனம் தானே
மச்சம் பார்த்து
அச்சம் போக்கி கொண்டது.... 26
காலம் சிறிதென
நானும் கண்டேன்
உன் காலடியில் கிடக்கும் போது
காலம் பெரிதென
நானும் உணர்ந்தேன்
உன் கவிதையில்
தொலைந்த போது... 27
சுகம் என்று சொல்ல
துடித்தேன்
உன்னோடு சுற்றித் திரிந்த
காலம்
சுகம் என்று சொல்ல
கேட்டேன்
என்னோடு
நீ கழித்த காலம்.... 28
கண்ணில் விழும்
கனவொன்றில்
காதல் இருக்கும்
காதலில்
உன் கண்களின்
கண்ணீரே நிறைந்திருக்கும்... 29
உன் பார்வைகள் பதியும்
இடத்தை பத்திரப் படுத்திக்
கொள்கிறேன்
உணர்ச்சிகள் உயிர்த்தெழும்பாமல்
இருந்துக் கொள்ள.... 30
-SunMuga-
19-03-2017 00:16 PM
March 17, 2017
2017 கவிதைகள் 11 to 20
எல்லாம் அறிந்த
கடவுள்
என்னை அறிய
மறந்தான்
இப்பிறவி என்னும்
மனித உருவில்
என்னையும் வதைத்தான்,
வதை கொண்ட உள்ளம்
உயிருக்காக ஏங்க
உறக்கம் என்ன
உலகம் உரைத்த வரிகளில்
உள்ளம் வதைகிறது... 11
விழிகள் ஏந்திய
கண்ணீர்
விதியால் வடிகிறது
விதி என்று முடியும்
என்ற சிந்தனையில்
விடியலும் விடிகிறது... 12
விதி என்று நினைத்து
விலகி நடந்தோம்
வீதி எல்லாம்
நம்மை சேர்த்து
விதிகள் ஆகிறது... 13
நீ இல்லாமல்
இருந்து பழகிய நெஞ்சம்
என்ற போதிலும்
உன் நினைவுகளுக்கு
இல்லை ஒரு நாளும் பஞ்சம்... 14
கதை சொல்லும்
பிள்ளைக்கு
நம் கதை அறியுமோ
உன் காதை நீ கொடுத்தால்
இரவின் கதையை
நானும் சொல்லுவேன்.... 15
இதழ் கெஞ்சும்
இதம் அறிவாயோ
இரவெல்லாம் இனி
என் இமைகளும்
உன்னை கொஞ்சும்.... 16
பார்த்துக் கொள்ள
இடம் தேடி
பழகிக் கொள்ள
கரம் தேடி
கோர்த்துக் கொள்ள
விரல் தேடி
கோடை கால நிழல்
தேடி கோதையையும்
மனம் தேடுகிறது.... 17
வியர்த்து கொட்டிய
இரவில் விலகி
நின்றால்
வியர்வை எப்படி
குறையும்? 18
உறவைப் பற்றி
உள்ளம் என்ன நினைக்க
இருக்கிறது
உயிருக்கு உயிராய்
உறங்காமல்
உலகம் நீ என்று
நினைத்த பிறகு.... 19
தாய்மை தந்த
தாரம் நீ
உன் சேலையில்
தொட்டில் கட்டி
என்னை அமர்த்தி
ஆட்டிவிடும் போது... 20
-SunMuga-
17-03-2017 23:00 PM
March 16, 2017
2017 கவிதைகள் 01 to 10
தணியாக் கவலைகள்
தலைவியின் கண்களில்
தலைவிரித்து ஆடும் போது
தலைவனின் கண்களின்
திருக்கோலம் என்னவோ
வெறுமை தானே!! 01
வெறுமை சேர்த்த
இரவில்
பொறுமை இல்லை
என் கண்களுக்கு
கண்ணீர் விடும் போது... 02
என்னுள் நிரம்பிய
தாகம்
தேகம் இல்லாத
நிழல் போல
வேகமாய் கரைகிறது
காலத்தின் ஒளியை
வாங்கிக் கொண்டு... 03
வீதியும் விதியும்
என்ன சொல்லும்
என்ற சிந்தனையே
என்னை சிறை பிடித்துக்
கொள்கிறது
என்னை உன்னிடமிருந்து
பிரித்து... 04
நெடுங்கூந்தல் வாசம்
நெற்றி முத்தமிடச் செய்யும்,
நெஞ்சில் இட்ட மஞ்சள் போல
நேசத்தின் நிறம் கூடச் செய்யும்,
நிறைமாத நிலவு போல
நின்கனவு கூடச் செய்யும்,
நிலவு போன்ற பெண்ணே
என்னை தேய விடாதே!! 05
உளம் மயங்கி
உறங்கிக் கிடக்க
உமையவள்
உன் அருள் வேண்டும்
உடுத்திய உடையில்
உன் பெயரும் உயிரும்
அந்த விடியலில்
கலந்திருக்க வேண்டுமடி... 06
அளித்த முத்தம்
அன்பின் மிகுதி
குளித்த தேகம்
சோர்வின் தொகுதி
மீண்டும் முத்தம்
வாழ்வின் பகுதி.... 07
என் பெரும்பசி தீர்த்து
பெருமை கொள்
என் பெருமகளே
எனக்கொரு
உன்னைப் போல
பிள்ளை கொடுத்து..... 08
காமம் களைய
உடைகள் களைய வேண்டும்
உடைகள் களைய
உணர்ச்சிகள் களைய வேண்டும்
உணர்ச்சிகள் களைய
உதடுகள் உரச வேண்டும்
உதடுகள் உரச
உறக்கம் தவிர்க்க வேண்டும்.
உறக்கம் தவிர்க்க
காமத்தின் போர்வையை
போர்த்திக் கொள்ள வேண்டும்.. 09
இதழ் முத்தம்
இல்லாத இரவு
இல்லாமல் இருக்க
இருப்போம் இருவரும்
இரவோடு இரவாக
இதழ் திண்ணும்
இமையாக... 10
-SunMuga-
16-03-2017 11:32PM
January 8, 2017
கண்ணீர்
கண்ணீர் தருவித்த
கவிதை ஒன்றில்
காலத்தின் ஏக்கங்கள்
தாகமாக நிறைந்துள்ளது,
தண்ணீராக
எதை பருகுவது?
காலத்தின் கவிதையவா?
இல்லை
கவிதையில் கரைந்த
காலத்தையா?
இவை இரண்டையுமே
கடவுள் தந்த போது தான்
குழப்பம்...
-SunMuga-
08-01-2017 21:50 PM