March 17, 2017

2017 கவிதைகள் 11 to 20

எல்லாம் அறிந்த
கடவுள்
என்னை அறிய
மறந்தான்
இப்பிறவி என்னும்
மனித உருவில்
என்னையும் வதைத்தான்,
வதை கொண்ட உள்ளம்
உயிருக்காக ஏங்க
உறக்கம் என்ன
உலகம் உரைத்த வரிகளில்
உள்ளம் வதைகிறது...           11

விழிகள் ஏந்திய
கண்ணீர்
விதியால் வடிகிறது
விதி என்று முடியும்
என்ற சிந்தனையில்
விடியலும் விடிகிறது...     12

விதி என்று நினைத்து
விலகி நடந்தோம்
வீதி எல்லாம்
நம்மை சேர்த்து
விதிகள் ஆகிறது...   13

நீ இல்லாமல்
இருந்து பழகிய நெஞ்சம்
என்ற போதிலும்
உன் நினைவுகளுக்கு
இல்லை ஒரு நாளும் பஞ்சம்...   14

கதை சொல்லும்
பிள்ளைக்கு
நம் கதை அறியுமோ
உன் காதை நீ கொடுத்தால்
இரவின் கதையை
நானும் சொல்லுவேன்....     15

இதழ் கெஞ்சும்
இதம் அறிவாயோ
இரவெல்லாம் இனி
என் இமைகளும்
உன்னை கொஞ்சும்....    16

பார்த்துக் கொள்ள
இடம் தேடி
பழகிக் கொள்ள
கரம் தேடி
கோர்த்துக் கொள்ள
விரல் தேடி
கோடை கால நிழல்
தேடி கோதையையும்
மனம் தேடுகிறது....      17

வியர்த்து கொட்டிய
இரவில் விலகி
நின்றால்
வியர்வை எப்படி
குறையும்?            18

உறவைப் பற்றி
உள்ளம் என்ன நினைக்க
இருக்கிறது
உயிருக்கு உயிராய்
உறங்காமல்
உலகம் நீ என்று
நினைத்த பிறகு.... 19

தாய்மை தந்த
தாரம் நீ
உன் சேலையில்
தொட்டில் கட்டி
என்னை அமர்த்தி
ஆட்டிவிடும் போது...    20
-SunMuga-
17-03-2017 23:00 PM

No comments:

Post a Comment