முதுகிலே
முத்தமிட்டு தொடங்கிய
இரவு
முகத்திலே முத்தமிட்டு
முடிந்து விடிய
வேண்டும்.... 21
விரயம் செய்யாத இரவு
வேர்வை தந்தாலும்
வாழ்வின்
வேதனை குறைக்க
நாம் வேண்டிய மழலையை
அதுவும் கொடுக்கும்.... 22
பெருமுச்சு
பெரிதாய் நீ விடும்
இரவில்
பெருமழை பெய்த சுவடு
உன் முதுகில் இருக்கும்... 23
எவை வேண்டும்
என்றும்
எது வேண்டும்
என்றும்
எனக்கான அனைத்தும்
எனக்கே கொடுத்து
உனக்கான
சிறு முத்தம் மட்டுமே
பெற்றுக் கொள்வாய்
நம் சிறு மழலைப் போல... 24
உன் முத்தத்திலிருந்து
மீள்வது கடினம்
அதைவிட கடினம்
அதன் நினைவிலிருந்து... 25
அச்சம் பிறந்த போது
அடுப்படியில் புகுந்தாய்
மச்சம் பார்த்த போது
மாடிப்படியில்
என்னோடு கழித்தாய்
மனம் தானே
மச்சம் பார்த்து
அச்சம் போக்கி கொண்டது.... 26
காலம் சிறிதென
நானும் கண்டேன்
உன் காலடியில் கிடக்கும் போது
காலம் பெரிதென
நானும் உணர்ந்தேன்
உன் கவிதையில்
தொலைந்த போது... 27
சுகம் என்று சொல்ல
துடித்தேன்
உன்னோடு சுற்றித் திரிந்த
காலம்
சுகம் என்று சொல்ல
கேட்டேன்
என்னோடு
நீ கழித்த காலம்.... 28
கண்ணில் விழும்
கனவொன்றில்
காதல் இருக்கும்
காதலில்
உன் கண்களின்
கண்ணீரே நிறைந்திருக்கும்... 29
உன் பார்வைகள் பதியும்
இடத்தை பத்திரப் படுத்திக்
கொள்கிறேன்
உணர்ச்சிகள் உயிர்த்தெழும்பாமல்
இருந்துக் கொள்ள.... 30
-SunMuga-
19-03-2017 00:16 PM