April 28, 2014

Mobile Update

கட்டெறும்பு கடித்தாலும்
காதிலே உன் குரல்

காலை முதல் காத்திருக்கிறேன்
முழுஇரவு வரை பேசிக்கொள்ள

குளிக்காமல் குடி இருக்கிறேன்
நான் குடித்ததையும் மறைக்கிறேன்

பேசி பேசி நீ தொலைகிறாய்
நான் என்ற என்னையும்
நான் தொலைக்கிறேன்..
கைவிரல் வலிக்கிறது
கைப்பேசியை நான் பிடித்து பிடித்து
மின்கலம் குறையும் போது
என் ஆயுளும் குறைகிறது
மெளனம் நான் கொண்டால்
கோபம் நீ கொள்கிறாய்
கோபம் நான் கொண்டால்
மெளனம் நீ கொள்கிறாய்..

நானும் ஆடிப் போய்விட்டேன்
ஆடிக்கு முன் கல்யாணமாம்..

April 13, 2014

பிறப்பு

இன்று மூடி இருக்கும் இந்த கதவின் ஒரு மூலையில் தான் என் வாழ்க்கை பிறந்தது. இது நான் பிறந்த மருத்துவமனையின் நுழைவு வாயில். என் அன்னை எத்தனையோ வலிகளை சுமந்து என்னை ஈன்று எடுத்தது இங்கு தான். என் அண்ணனின் குழந்தை (சஞ்சனா) பிறந்த போது நானும் என் அம்மாவும் இதே மருத்துவமனைக்குள் நுழையும் போது கேட்டேன். நான் பிறந்தது இங்க தானமா என்று. அவள் ஒரு பழைய கட்டிடத்தை கை காட்டி அந்த ரூமில் தான் பிரசவம் பார்த்தாங்கன்னு சொன்னா.. நானும் பார்த்தேன். யாருமே இல்லாத ஒரு கட்டிடம். என் அழு குரல் ஒலித்த இடம். என் தாயின் வேதனையை தாங்கிய இடம். எத்தனை நாள் இருக்க போகிறேன் என்று எனக்கு தெரியாத இந்த உலகத்தில். நான் இருக்கும் வரை என் நினைவில் இருக்கும் இடம் இது.

April 5, 2014

05-04-2014

இன்று ஏனோ ஒரு பாரம் மனதில். ஏன் என்று தெரியுமா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவேளை ரூம் மாறியது ஒரு காரணமாக இருக்குமோ? என்னிடம் நிச்சியமாக பதில் இல்லை. கடற்கரையில் அமர்ந்து இருக்கிறேன். கண்ணீர்விட்டு அழ வேண்டும் போல தோன்றி மறைகிறது.