June 25, 2014

தேவதாசி

விழி வழி நீ பேசி
காமத்தின் வழியே
அவனை வழியை
வைக்கிறாய்!!
இன்று ஒரு நாள்
நீ வாழ அவன்
வழியை மறித்து
உன் பித்தானை பிரித்து
உன் மடியை விரித்து
வைத்திருக்கிறாய்...
எவனோ ஒருவனின்
காமம் குறைய குறைய
உனக்கு சொந்தமான
பணமும்
கண்ணீரும் கூடுகிறது...
ஒரு வேலை உணவு தான்
டிபன் பாக்ஸ் போல
அதுவும் உடையிலும் உடலிலும்
அடங்கி இருக்கிறது...
அனைவரையும் நீ
பார்த்து
உன்னைப் பார்த்தும்
பார்க்காமல் தவிர்க்கிறார்கள்
ஒரு சிலர்...
மண்ணுக்குள் அடங்கும்
இந்த உயிர்
அடங்குவதற்கு முன்
அறிமுகம் ஆகுமா
சுகவாழ்வு...
-SunMuga -
25-06-2014 23.23 PM

சட்டை

என் அருமை மகளே!

நீ செய்யும் சேட்டையை
உணர்ந்து
சட்டை பிணைந்து இருக்கிறேன்,
என் கால் வலியை
சட்-டே பண்ணாமல்.

நூல்களை பாராமல்
பல நூல்களை கோர்த்துருக்கிறேன்.

நூறாண்டு நீ வாழ
இந்நூலும்,
எந்நூலும்
நிச்சயம் வாழ்த்தும்.

பித்தான் தேர்வு செய்வதற்குள்
பித்தாகவே நான் ஆனேன்.

உன் குளிருக்கு என் மார்பு
போதும் அது என் உயிருக்கும்
மனதுக்கும் போதவில்லை.

உனக்கு சேரும் என்றே
நினைக்கிறேன் - நீயே
உன்னுள் சேர்த்துக் கொள்வாய்
என்றும் நினைக்கிறேன்.

நீயும் வளர - என்
காலில் வலியும் வளர
நானும் வளர்கிறேன்
நல்ல தாயாக!

உடனுக்குடன் என்னோடு
பேசிக் கொள்கிறாய்!!
சில நேரம் என்னை
உதைத்து - பல நேரம் தொப்புள் கொடியை
அணைத்து!

என்னுள் வாழும் உயிரே!
நீயே எனக்கு உயிர்!
நீயும் எனக்கு உயிர்!

என் சிந்தனையை சீர்படுத்துகிறாய்,
என்னுள் நீ இருக்கிறாய் என்று!

அமைதியாகவே போய் இருக்க
வேண்டியவள் -
அமைதி-யாகவே போய்
இருக்கிறாள்.

நீ பிறந்து நான் உயிரோடு
இருந்தால் - அது எனக்கு
மூன்றாவது மறுஜென்மம்
நீ என்னுள் வாழப்போகும்
மூன்றாவது ஜெனனம்..

-SunMuga-
25-06-2014 22.09 PM

June 6, 2014

இன்று

யாரும் இல்லாத தனிமை அறை என்றாலும் சட்டென்று என்னுள் எப்படி புகுந்தது அத்தனை தைரியம். முதல் பார்வையில் மூச்சற்று நான் உன்னில் பார்த்தது உன் அழகா? இதழா? எந்தவொரு பிரமாண்டம் இல்லாத ஒரு நிகழ்வு இந்நாளில் தான் உனக்கும் நினைவிருக்கும் என்று தான் நானும் நினைக்கிறேன். ஆம் நம் முதல் முத்ததின் பிறந்தநாள். என் விழிகளை பார்த்து பேசிக் கொண்டு இருந்தாய் நீ. மறுகனம் தரையை உன் விழி கானும் போது திடீரென உன் இதழில் இதழ் பதித்தேன்.
இது தான் முத்தம் என்று நாமே யூகித்து முத்தமிட்டு கொண்ட தினம் இன்று.
என் குறிப்புகளில் இருந்து.
-SunMuga-
06-06-2014 07.25 PM