June 25, 2014

சட்டை

என் அருமை மகளே!

நீ செய்யும் சேட்டையை
உணர்ந்து
சட்டை பிணைந்து இருக்கிறேன்,
என் கால் வலியை
சட்-டே பண்ணாமல்.

நூல்களை பாராமல்
பல நூல்களை கோர்த்துருக்கிறேன்.

நூறாண்டு நீ வாழ
இந்நூலும்,
எந்நூலும்
நிச்சயம் வாழ்த்தும்.

பித்தான் தேர்வு செய்வதற்குள்
பித்தாகவே நான் ஆனேன்.

உன் குளிருக்கு என் மார்பு
போதும் அது என் உயிருக்கும்
மனதுக்கும் போதவில்லை.

உனக்கு சேரும் என்றே
நினைக்கிறேன் - நீயே
உன்னுள் சேர்த்துக் கொள்வாய்
என்றும் நினைக்கிறேன்.

நீயும் வளர - என்
காலில் வலியும் வளர
நானும் வளர்கிறேன்
நல்ல தாயாக!

உடனுக்குடன் என்னோடு
பேசிக் கொள்கிறாய்!!
சில நேரம் என்னை
உதைத்து - பல நேரம் தொப்புள் கொடியை
அணைத்து!

என்னுள் வாழும் உயிரே!
நீயே எனக்கு உயிர்!
நீயும் எனக்கு உயிர்!

என் சிந்தனையை சீர்படுத்துகிறாய்,
என்னுள் நீ இருக்கிறாய் என்று!

அமைதியாகவே போய் இருக்க
வேண்டியவள் -
அமைதி-யாகவே போய்
இருக்கிறாள்.

நீ பிறந்து நான் உயிரோடு
இருந்தால் - அது எனக்கு
மூன்றாவது மறுஜென்மம்
நீ என்னுள் வாழப்போகும்
மூன்றாவது ஜெனனம்..

-SunMuga-
25-06-2014 22.09 PM

No comments:

Post a Comment