நான் இதுவரை எந்தவொரு புத்தகம் பற்றி விமர்சனம் எழுத முற்படவில்லை. ஆனால் என்னவோ இந்த புத்தகம் பற்றி ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
#மரணம்
38 வயதுமிக்க ஒரு குடும்ப பெண் வழக்கமான தன் அதிகாலை வேலைகளை முடிக்காமலே இறந்துவிடுகிறாள். துக்கம் நிறைந்த வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரை பற்றியும், இறந்தவளுக்கும் அவர்களுக்குமான தொடர்பை விவரிக்கிறது இந்த நாவல்.

என்னால் ஒரே மூச்சாக படித்து முடிக்க முடியவில்லை. ஏனோ ஒரு பாரம் ஒவ்வொரு பகுதியும் படிக்கும்போது. வெறும் 120 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை மிகுந்த மன பாரத்தில் தான் என்னால் படிக்க முடிந்தது.
மலையாள மொழிப்பெயர்ப்பு மிகச் சிறந்த முறையில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
மரணம் என்றோ ஒரு நாள் எல்லாருக்கும் நிச்சயமாக நடைபெற கூடிய நிகழ்வு தான். ஆனால் மரணத்திற்கு முன் எத்தனை நிகழ்வுகள் ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது என்பதை மிக நேர்த்தியான அணுகுமுறையில் எழுத்தாளர் எழுதி இருக்கிறார்.
புத்தகம்; சுமித்ரா
மலையாள ஆசிரியர்; கல்பாட்டா நாராயணன்
தமிழில் ; கே.வி ஷைலஜா
மலையாள ஆசிரியர்; கல்பாட்டா நாராயணன்
தமிழில் ; கே.வி ஷைலஜா
No comments:
Post a Comment