September 23, 2014

பழையது

காலம் முழுக்க உன்னை
ரசிக்கவும்,
உன்னால் ரசிக்கப் படவும்
யாசிக்கிறேன்...
அழைத்துச் செல்வது உன்
அன்னையாக இருந்தாலும்,
நீ அனைத்துக் கொள்கிறாய்
என்னையே உன்
புடவையின் வடிவில்...
நான் கற்பனையையும்
நேசிக்கிறேன்
உன்னை யாசிப்பதால்...
உன் இதழ் முத்தமிட்ட போது
சிறகுகள் இன்றி
வானில் பறந்தேன்,
மறுகனமோ என் விரல்களை  இறுக பிடித்து என்னை
விட்டு போகாதே என்றது
உன் இதழ்கள்...
நம் வாழ்க்கையை
யோசித்தால் மட்டும்,
கண்ணீருடன் சிரிப்பும்
வருகிறது ஏன் என் அன்பே?
எனக்கு புரிந்த கவியே
உன்னை படிக்கும் தருணம்
தான் எப்போது?
ஒவ்வொரு நொடியும்
உன் விழியில் ஊறும் நான்,
உன் விழிகளுக்கு விருந்தாக
அமையும் நாளை கான
காத்திருக்கிறேன் விழித்துக் கொண்டே!!!
துணி  துவைப்பதில் என்ன
சுவாரஸ்யம் என்று கேட்கிறாள்
என் சிநேகிதி - நானும்
சிரித்துக் கொண்டேன்
அவளுக்கு என்ன தெரியும்
உன் மூச்சுக் காற்றின் ஸ்பரிசம்.
வெளியே செல்ல புறப்படும்போது
எனக்கு நானே அழகூட்டினால்
போதும் போதும் என்று
நீ வெட்கப்படுவாய்
ஏன் என்று கேட்டால்
பின் வீட்டிலே இருக்க
வேண்டியது தான் என்பாய்!!

No comments:

Post a Comment