கடவுளை கான
முற்படும் போதெல்லாம்
கடவுளின் எதிரொளியாய்
கண்ணீர் மட்டுமே கசிகிறது
கண்ணீரின் அர்த்தம்
என்னவோ நீ தானே!
ஆம்
எனது கடவுள்
நீ தானே
காதல் கருவறையில்....
-SunMuga-
15-04-2016 20:30 PM
April 15, 2016
கடவுள்
April 5, 2016
இரவின் பசி
இந்த
இரவின் பசியில்
உன் உடலே
எனது உணவு
உன்னை
என்னை மறந்து
உண்ணும் போது
உண்மையில்
எனது உணர்வுகள்
உயிர்த்தெழும்பிய போதும்
உனக்கொர்
பாவம் செய்ததாய்
எண்ணிக் கொள்ளும்
எனது குறி.....
-SunMuga-
05-04-2016 20:40
மெளனம்
என் மெளனம்
களைத்து விட
உன் மெளனம் போதும்
மெளனத்தில்
நாம் இருவரும் கலந்து விடும்
ஒரு அதிகாலையில்...
அதிகரிக்கும்
மெளனத்தின் இசையில்
இதயத்தின் பாடல்
வரியாக ஒலிக்கும்
ஒரு மெல்லிய
பறவையின் குரலில்....
உன் குரலெங்கும்
நிறைந்திருக்கும்
மெளனத்தின்
முடிவில்
நானும்
மெளனமாக இருப்பேன்
உனது மடியில்
ஒவ்வொரு
அதிகாலையிலும்...
-SunMuga-
05-04-2016
04:10 AM
Subscribe to:
Posts (Atom)