April 5, 2016

மெளனம்

என் மெளனம்
களைத்து விட
உன் மெளனம் போதும்
மெளனத்தில்
நாம் இருவரும் கலந்து விடும்
ஒரு அதிகாலையில்...

அதிகரிக்கும்
மெளனத்தின் இசையில்
இதயத்தின் பாடல்
வரியாக ஒலிக்கும்
ஒரு மெல்லிய
பறவையின் குரலில்....

உன் குரலெங்கும்
நிறைந்திருக்கும்
மெளனத்தின்
முடிவில்
நானும்
மெளனமாக இருப்பேன்
உனது மடியில்
ஒவ்வொரு
அதிகாலையிலும்...

-SunMuga-
05-04-2016
04:10 AM

No comments:

Post a Comment