May 29, 2016

2016 கவிதைகள் 101 to 110

இளமை பொங்கும்
உன் இடையில்
என் இதழை
பதிக்க காத்திருக்கிறது
என் காதலும்
அதன் கண்களும்...   101

நீண்ட நேரங்
காத்திருந்து
நிலை இல்லாத
மனதால்
உன் மனதை
காயப்படுத்தியதாய்
எண்ணுகிறது
என் இதயம்....      102

நீ இன்றி
இருக்க பழகிய போதும்
நீ வேண்டும் என்ற
எண்ணம்
என்னையே மாற்றிவிட்டது
அந்நொடி....    103

தேடும் கண்களுக்கு
தேவை தேவதை
என்ற போதும்
இந்த இரவில்
வார்த்தைகள் மட்டுமே
ஆறுதல் அளிக்கிறது...    104

வான் நிறையும்
நட்சத்திரம் போல்
காகிதத்தில் நிரம்புகிறது
உன் நினைவுகள்...   105

தீராத கண்ணீர்
இருந்த போதும்
இரவு தீர்வதற்கான
அனைத்து நிகழ்வையும்
நிகழ்த்தி விடுகிறது
உன் நினைவு ...      106

உன் ஆடையில்
அனைத்தும் அழகு
அதிலும் அழகு
இந்த சிகப்பு நிறம்
என் இதழ் போல...    107

கனவைப் பற்றி கேட்டால்
வெட்கம் கொள்கிறாய்
கனவை நினவாக்க
கேட்டால்
கோபம் கொள்கிறாயே
இது என்ன நியாயம்....  108

முதல் கனவை பற்றி
கேட்டால்
அது முதல் இரவு
என்று சிரிக்கிறாள்....   109

மூச்சுக் காற்றும்
முத்தக் காற்றாய்
என்னை சுழல செய்கிறது
உன்னையே....          110

கண்ணின் ஏக்கம்

நிறைவேறாத கனவுகள்
நிம்மதியை குறைத்த போதும்
நிறைவேறும் என்ற
எண்ணங்கள் தான்
எனது எளிமையை கூட்டுகிறது

எனது இரவுகள் அனைத்தையும்
கனவுகள் பிழிந்து எடுத்த போதும்
அதன் உருவங்கள் அனைத்தும்
வெறும் இருளாக
இரவாகவே மாறி
என் கருவிழிகளில்
கனவாய்
கரைந்து விடுகிறது,

கடவுள் ஒரு பக்கம்
காமம் மறுபக்கம்
கடல் தெரியும்
கரைகள் இன்னொரு பக்கம்
காட்டு மிராண்டித்தனமான
பேய்களும் எனது பக்கமென
வெவ்வேறு கனவுகள்,

காண்பது வெறும் கனவாக
இருந்த போதும்
காலம் வெறும் கனவாகவே
கரைந்து
கண்ணின் ஏக்கமாக
வளர்கிறது!!

-SunMuga-
05-05-2016 23.13 PM

May 6, 2016

எனது பிணம்

எங்கோ!
பார்த்த பாதைகள்
பயணம் மட்டுமே புதிது
காடுகள் நிறைந்த போதும்
கவலை தோய்ந்த முகத்தோடு
கால்கள் போகின்றன!

தூரத்தில் ஒரு நெடுஞ்சாலை,
துக்கத்தில் மனம்
பயணம் போனாலும்
அருகிலே
ஒரு பிணத்தின் வாடை!
இன்னும்
எரியூட்டப் படாத
ஒரு பிணத்தின் வாடை!!

வழியை மறந்த
பட்டாம்பூச்சி
வழியிலே பறக்கிறது,

அதையும் கடந்து
இன்னும் போகிறது
எனது கனவின் பயணம்!

முடிவுறும் பாதையின்
முடிவில்
குளத்தின் அருகே
எரிந்து கொண்டு இருக்கிறது
எனது பிணம்!!

-SunMuga-
05-05-2016 23.19 PM