August 31, 2013

பிறந்த நாள் 30-08

இன்று எனக்கு பிறந்த நாள்.
ஏன் பிறந்தேன் எதற்காக பிறந்தேன் என்ற கேள்வி இப்போது வரை கேட்டுக் கொண்டே இருக்கிறது மனது. ஆனால் எப்போதும் நான் நன்றி சொல்லிக் கொண்டே இருப்பது என் பெற்றோர் சண்முகம்,பேச்சியம்மாள் இருவருக்கும் தான்.
ஒவ்வொரு நாளும் பிறக்கின்றன. இறக்கின்றன. ஏதோ ஒரு கவலையோடு முடிகிறது எனக்கு. இன்று ஏனோ கண்ணீர் வடிகிறது. யாரும் இல்லா இந்த தனிமை அறையில் தானாக முன் வந்து என் கவலைகளை குறைக்கிறது இந்த கண்ணீர். ஏன்? எதற்கு? அறிமுகம் இல்லாதவர்களிடம் தானே கேட்க வேண்டும் ஏன் வந்தாய் என்று திருப்பி என் மனம் என்னிடம் கேட்கிறது.
யாருமே இல்லாத இந்த தனிமை அறையில் ஒரு மனித உருவம் (3 படத்துல வர்ர மாறி ) ஏதோ கேட்க முற்படுகிறது. பயம் இல்லை அதை பார்க்கும் போது. என்னை போல் என்ன சிந்தனையில் இந்த உலகத்தை சுத்தி வருகிறதோ பாவம்.
இன்று என் அறையில் நான் மட்டும் தான் இருக்கிறேன். அது என்னிடம் பேசுவது எனக்கு புரியவில்லை. அதனிடம் என்ன சொல்லவதென்றும் எனக்கு தெரியவில்லை.
கடவுளே என் கண்களுக்கு தெரியும் இந்த உருவங்கள் உனக்கு தெரியவில்லையா? தயவுசெய்து அவர்கள் சோகத்தையாது தீர்த்து வை.
-Sun Muga-
31-08-2013 21.39

August 26, 2013

மரம் தேடிய பறவை

தாகமும் இல்லை
எந்த ஒரு மோகமும்
இல்லை...
இவள் இளைப்பாற ஒரு
மரமும் இல்லை...
இவள் ஒரு பிஞ்சு
உள்ளம் கொண்ட
ஒரு பறவை இவள்
பெயர் சந்தியா..
இவள் கண்ணோடு வாழ்ந்தாலும்
இவள் மனம் தேடுகிறது
காதல்
என்ற ஒரு மரத்தை.
கண்ணீர் விட்டுபார்க்கிறாள்
கண்களை திறந்து நாளும்
உற்றுப் பார்க்கிறாள்.
ஆனால்
காதல் என்ற மரம்
தெரியவில்லை
இந்த பறவைக்கு..
கூடி கட்டி வாழ
விருப்பமில்லை -  ஆனாலும்
கூடவே இருக்க வேண்டும்
அசைந்து ஆடினாலும்
இலைகள் உதிர்ந்து
கிளைகள் விழுந்தாலும்
இந்த மரத்தின்
நிழலில் உயிர்
போக வேண்டுமாம்...
-Sun Muga-
26-08-2013 20.43 PM

August 25, 2013

என் உரை

நான் பிறந்த போது
என் தாயின் மடி
என்னை
தாங்கிபிடித்து இருக்கலாம்,
ஆனால்
என் இறப்பின் பின்
என்னை - என்
எழுத்துக்கள்
தூக்கிச் சுமக்கவேண்டும்,
என்பது எனது விருப்பம்.
காதலும், காதல் மீது உள்ள
காதலும் என் கவிதைகள்
வளர ஒரு காரணம்.
இனிமையுடன் இளமை கூட
உள்ளே இருக்கும்
எழுத்துக்கள் உதவும்
என்று நம்புகிறேன்.
நன்றி,
இப்படிக்கு,
சண்முகா.....

பொழுது போகவில்லை

இன்று 25-08-2013 ஏனோ பொழுதே போகவில்லை. பொழுது போகவில்லையே என்று நினைத்து ஒரு புத்தகத்தை படிக்க எண்ணமும் வரவில்லை. மனதுக்குள் ஒரு சோர்வு. சோறு உண்ண கூட ஒரு சோம்பேறி தனம். வாழ்க்கையில் என்ன ? எப்போது? நடக்கும் என்ற எண்ணம்வேறு அவ்வப்போது பயமுறுத்துகிறது. நடந்து சென்றால் கால்கள் வலிக்கிறது. அறையில் இருந்தால் அறையே அறைந்துவிடுவது போல இருக்கிறது. என்ன தான் செய்வது நான். காதலர்கள் குவிந்து இருக்கும் மெரினா பீச்சு கூட எனக்கு பாலைவனம் தான். அங்கு திரியும் குதிரைகள் கூட ஒட்டகம் போல் தெரிகிறது என் கண்களுக்கு.
ஒரு கப் டீ பருகிவிட்டு என்ன செய்வது என்று யோசித்த பின்பு தான் இதை எழுதி முடித்தேன்.
தயது செய்து உங்களுக்கு எப்படி பொழுது போகுது சொன்ன நானும் பாலோ பண்ணுவேன் ப்ளீஸ் ....
-Sun Muga-
25-08-2013 23.32 PM

பேனா

மூளைக்குள் ஒரே
போராட்டம் அவள்
அழகை கண்ட பின்.

எங்கோ எங்கோ பார்க்கிறது
விழிகள் - எதையோ
தேடுகிறது மனது.

அரைக் கிறக்கத்தில்
அரை குறையாக
வார்த்தைகள் இருக்கிறது
கைவிரல்களில்.

தேடி தேடிப் பார்த்தேன்
என் அறை முழுதும்
என் பேனாவை
ஒரு கவிதை
எழுத..

கிடைத்துவிடும் என்று
தேடிப்பார்க்கிறேன்..

கிடைத்துவிட்டது..

இப்போது கவிதை வேண்டும்
அல்லவா!!!

என் அழகு பேனாவே!!!

எத்தனை ஆசையை
நிறைவேற்றி
இருக்கிறாய்  நீ -

இன்னும் எத்தனை
ஆசையை நிறைவேற்ற
போகிறாய் நீ..

சந்தோஷத்தில் மழைச்
சாரலாக வார்த்தைகளை
எழுதுகிறாய் -

சோகத்தில் கண்ணீராய்
கரைகிறாய் காகிதத்தில்..

என் காதலை வெளிப்படையாக
நான் வெளிப்படுத்த வெள்ளை
காகிதம் கூட என் காதலின் வெள்ளப்பெருக்கு
போல இருக்கிறது
உன் உதவியால்..

உருகி உருகி நான்
காதலித்தாலும் காகிதத்தில்
என் காதலின் உயிருக்காக
நீ உன் உதிரத்தை
விடுகிறாய்..

என்றோ ஒரு நாள்
உன் உயிரையும் என்
காதலுக்காக விடுகிறாய்..

உன் இறப்பின் பின்
உனக்காக நான் ஒரு
சொட்டு கண்ணீர் கூட
விட்டதில்லை..

என் தோழன் இல்லை,
என் தோழியும் இல்லை,
ஆனால் தினம் தினம்
என்னால் உன் ஒரு
சொட்டு உதிரத்தையாது
இழந்து கொண்டு
இருக்கிறாய்...

உனக்கு என்ன?
என் மனதை விட
தைரியம் அதிகமோ
எப்படி வலிகளை
பொறுத்துக் கொள்கிறாய்
நான் பிடித்து எழுதும் போது..

உன்னால் என் பாரம்
தினமும் குறைகிறது
அது உண்மை.

ஒரு பாவமும் செய்யாத
நீ என்னால் துயரம்
கொள்கிறாய்..

என்றோ ஒரு நாள்
உன்னால் நிச்சயமாக
நான் துயரப்படுவேன்
என்று எனக்கும்
தெரியும்..

தெரிந்தே தவறு
செய்பவன் நான்
என்பதும் எனக்கு தெரியும்
அதனால் பயப்பட தேவையில்லை
இப்போதைக்கு...

நான் இறக்கும் நாள்
வரை நான் எழுத
முற்படுவேன் உன் இறப்புகள்
எண்ணிக்கை கூடினாலும்..

இந்த உலகில் நானும் ஒரு
சுயநலவாதி தான் போல..

ஓ!!!
மன்னித்துவிடு,
என் அழகுப் பேனாவே!

-Sun Muga-
25-08-2013 22.58 PM

உறக்கம்

உறங்க மறுக்கும்
விழியே,
அப்படி என்ன வேதனை
உனக்கு.
என்னிடம் மட்டுமாவது
சொல்.
கண்ணே!!!
என் கண்களிடம் நானே
கேட்டுப் பார்த்துவிட்டேன்
கண்ணீர் மட்டும்
தான் வருகிறது.
நீ ஒருமுறை
கேட்டுப்பார் என்ன
சொல்கிறது என்று
நானும் கேட்கிறேன்.
-Sun Muga-
25-08-2013 22.17 PM

August 22, 2013

சின்னக் குயில்

சின்னக் குயில் சித்ரா பாடிய பாடல்.

சொல்லப் போனால் நான் இந்தப் படத்தை என் அம்மாவோடு சாந்தி திரையரங்கில் தான் பார்த்தேன். அத்தனை பெரிய அந்த திரையிலே என் கண்களுக்கு இந்த பாடல் தெரியவும் இல்லை, கேட்கவும் இல்லை.

இந்தப் பாடலுக்கு வடிவம் கொடுத்தவள் யார் என்று எனக்கு தெரியாது அன்று. ஆனால் உயிர் கொடுத்தவள் இவள் தான். ஏன் இந்த பாட்டை(போயும் போயும் ) வேரப் பாட்டே கிடைக்கலயா இவளுக்கு என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே இருந்தேன் Stage-ல் இவள் பாடும் போது. ஆம் அன்று எனது கல்லூரியில் Singing competition. எத்தனையோ முறை நான் பாடி கேலி செய்து இருக்கிறேன் என் நண்பர்களிடம்.  ஆனால் பாடலின் வரிகளை உணர்ந்தபோது தான் மதிக்கிறேன் இவள் உணர்வுகளை.

இன்று காலையில் FM-ல் இந்த பாடலை கேட்டபோது அப்படி ஒரு ஆனந்தம். எங்கோ ஒழிந்து கிடந்த நினைவுகளை மீண்டும் இழுத்து வந்து காதுகளின் வழியே இதயத்தில் அடைந்தது இந்த அலைவரிசை பாடலின் வழியே. ஆத்மாவின் ஆழம் அறிந்தேன். கணவன் மனைவி யின் அன்பை அறிந்தேன். உண்மை. உன்னதம். இந்த பாடலை கேட்கும் போது இழப்பார ஒரு மரம் கிடைத்தது போல ஒரு ஆனந்தம். அடைமழையில் தானே முன் வந்து நனைந்தது போல் ஒரு ஆனந்தம் இன்றும் கூட..

என் சக தோழி முத்துச் செல்வி இந்த பாடலை பாடினாள் அந்த கல்லூரி மேடையில். இன்றுஅதே மேடையில்  மறுமுறை அவள் பாடி கேட்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தால் நிச்சயம் இவளும் சின்னக் குயில் தான்.

பாடல்; இது தானா இது தானா மனம் எதிர் பார்த்த அந்நாளும் இது தானா, இவன் தானா இவன் தானா மலர் சூட்டும் மனவாளன் இவன் தானா...

படம் - சாமி
நடிகர் - விக்ரம்
நடிகை - த்ரிஷா
பாடலாசிரியர் -தாமரை
இசை-ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர் - ஹரி

-Sun Muga-
22-08-2013 21.55 PM

August 18, 2013

மழைத்துளி

என்றைக்கும் இல்லாமல் இன்று வெகுவிரைவில் விழித்துக் கொண்டன என் விழிகள். அதிகாலை வேலைகளை அரக்க பறக்க செய்து முடித்து அழகாக தலை வாரிக் கொண்டபடி வாசலில் வந்து பார்த்தேன், மழை பொழிந்து கொண்டு இருந்தது. ஒரு கனம் யோசித்து பார்த்தேன், இன்று மழையில் நனைந்தால் என்னவென்று. சட்டென்று அறைக்குள் ஓடி ஒரு பச்சை வண்ண சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டேன், அலுவலக யூனிஃபார்ம் மீது. என் செல்(ல)ப் போனுக்கும் ஒரு பாலித்தீன் கவரால் சட்டையொன்றை போர்த்தி என் பை-க்குள் அடைத்தபடி நடக்க தொடங்கினேன்.
நடக்கும் போதே ஒரு புத்துணர்வு என் மனதில். உடல் மழைத்துளியில் நனைய, மனமோ சந்தோசத்தில் குளிர்கிறது. குளிர்ச்சிக்கு இதமாக அங்கும் இங்கும் ஒழிந்து இருக்கும் பெண்களை கண்கள் பார்க்கிறது.இத்தனை சந்தோசத்திற்கும் ஒரு முக்கியமான காரணம் உண்டு. அது என்னவென்றால் நான் எத்தனையோ முறை மழையில் நனைந்து இருந்தாலும், மழையும் என்னை நனைத்து இருந்தாலும் அந்த விருதுநகர் மழைத்துளி போல என்னை இந்நாள் வரை நனைக்கவும் இல்லை, குளிர்விக்கவும் இல்லை. அப்படி ஒரு ஆனந்தம். என் நண்பர்களோடு ஒரு வினோத பயணம். இடியை கண்டு பயம் இல்லை, நனைவதை தடுக்க ஆட்களும் இல்லை. ஒரு சின்னஞ்சிறு பட்டாம் பூச்சி போல அத்தனை பேரும் ஒன்றாக நனைந்தோம். மழைப் பேச்சுக்கு நடுவே எங்களின் பேச்சுகள் போட்டியிட அங்கு ஒரு மினி பட்டிமன்றம் போல காட்டியளித்தது. தேங்கிய தண்ணீரில் அன்று தெரிந்த முகம் மிகவும் புதிது. அழகாக வாரிக்கொண்ட தலைமுடிகளில் வழியே வழிந்த மழைத்துளியின் காட்சி இன்னும் என் கண்களில். கானக் கிடைக்காத நாள் அது. நான் மழையின் அழகை கண்டு மிரண்ட தினம் அன்று. இன்று இந்த உலகதில் எங்கு மழை பெய்தாலும் எனக்கு நினைவூட்டுவது அந்த விருதுநகர் மழைத்துளியையும், அதில் குளிர்ந்த என் நண்பர்களின் முகமும் தான். ஆம் ஒவ்வோரு துளியிலும் ஒவ்வொருத்தர் முகம் தெரிகிறது என் கண்களுக்கு.அன்று அந்த மழைத்துளிடம் இருந்து மறைத்து வைக்க எங்களிடம் ஒன்றுமே இல்லை. இன்று போல என் செல்(ல)ப் போனும், புத்தகமும் கூட இல்லை.  ஆனால் அதன் நினைவுகள் இன்றும் என் கைகளில். தேர்வு முடிந்த சந்தோஷம், தோழன், தோழிகளோடு நான் பயனித்த போது வந்த இரைச்சல் ஒலி இன்றும் என் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
நாங்கள் அன்று நடந்து போன பாதைகள் கூட நினைவில் இல்லை, ஆனால் எங்கள் பாதம் பூமியைத் தொட்டு, கண்கள் மழைத்துளியை உள்வாங்கியபடி பயணித்த அந்த ஒரு சில மணித் துளிகள் எங்கள் அனைவர் வாழ்விலும் ஒரு பொக்கிஷம்.
அந்த மழைத்துளிகள் இன்னும் தேங்கி தான் இருக்கிறது இதயத்தில்.
அன்று என்னோடு பயணித்த நண்பர்கள் ;
அழிசோடை, சுரேந்தர் , கருப்பையா, ராஜ்குமார் , ராஜேஷ் குமார், மாரியப்பன்,இராமசுப்பிரமணியன்,ஜெயராம், முத்துசெல்வி,சரவண சுந்தரி,முபாரக் பாத்திமா, சுகந்தி ,மகேஷ்வரி.
-Sun Muga-
18-08-2013 19.38 PM

தீபா(வளி)

ஊரெல்லாம் வெடியின்
சத்தம் - அதிகாலைக்கு
முன்னரே,
நம் வீட்டில்
உன் முத்தச் சத்தம்,
வானத்தில் வெடித்து
சிதறிய பட்டாசு
வெளிச்சத்தில்
உன் முகத்தை
பார்த்தேன்,
சங்குச் சக்கரம்
போல உன் அழகில்
சுருண்டு விழுந்தேன்
உன் மடியில்
உன் கை விரல்
பட்டு என் முகம்
தூக்கி பார்த்தபோது
சோளப்பொரி போல
பொங்கி எழுந்தேன்.
சரவெடி போல
சாதித்தேன் உன்
முத்தம் வேண்டுமென்று.
இந்நேரமா?என்று
கேட்டு நீ ஒரு
அணுகுண்டு போட்டுவிடாதே
பின் நான் அந்த ராக்கெட்
போல மேலே சென்று
காணாமல் போய்விடுவேன்.
என்று சொல்லி
முடித்தேன்.
அதிகாலை பிறந்தது.
மனமே இல்லாமல்
மாடிக்கு சென்று
நல்லெண்ணெய் தேய்த்தாய்
நீ- எனக்கு பிசுபிசுத்தது,
குளித்தது நீ.
துவட்டியது எனக்கு.
துவங்கியது நமக்கான
தீபாவளி அன்று.
புத்தாடை உடுத்தி
நீ என்னைப் பார்த்த
போது புன்னகை
உன் முகத்தில்.
இரவின் வெட்கத்தில்
என்று எனக்கு தெரியும்.
வீடு முழுதும் கறிக்
கொழம்பின் வாசம்,
நான் உணர்ந்ததோ
உன் இதழின் வாசம்,
என்ன?
என்று நீ கேட்கிறாய்.
என்ன?
என்று நானும் கேட்டேன்.
ஒன்னும் இல்லையே
என்று நீ சிரித்தாய்.
வெடிப் பெட்டியோடு
உன் அண்ணன் வர,
ஒதுங்கி சென்றாய் நீ..
வெடி போடலாம்
என்று உன் அண்ணன்
சொல்ல,
அதான் வெடி வைத்து
விட்டாயே என்று உன்
பிரிவால்  முனங்கினேன்.
போ!!
என்று என்னை பிடித்து
தள்ளினாய் நீ,
உன் அண்ணன் மீது
உள்ள கோபத்தில்
வெடியின் சத்தம்
சற்று அதிகஒலியுடனே
எனக்கு கேட்டது.
வீட்டில் தீபம் ஏற்றி
விட்டு என்னைப்
பார்த்தாய்.
உன் விழியின் பிரகாசம்
நம்  வீட்டு பூஜை அறையை
அலங்கரித்து கொண்டது.
மல்லிகையின் வாசத்தோடு
என் அருகே நீ
அமர்ந்து மொட்டை மாடியில்
வானத்தில் வெடித்து
சிதறிய பட்டாசு
வெளிச்சத்தை
ஒரு சேர கண்டோம்.
(என்று காண்போம்??)
-Sun Muga-
18-08-2013 00.30 AM

காதலின் வாசம்

மெல்ல தீண்டிய
மேனியால்,
கொல்லத் தூண்டிய
ஆசைகள்.
தாகம் தீர்த்த
பார்வைகள்.
மெல்ல மூடிய
விரல்கள்,
ஓடுவது போல
ஓட முயற்சித்த
கால்கள்.
சரிந்த தாவணியில்
சரிதம் மூட,
கண்களும் மூட,
மெல்ல உளவியது
நம் காதல்,
ஊர்ந்து சென்ற
உணர்ச்சி,
உறவிடம் தேடி
என்னையே அடைய,
அறைகள் முழுதும்
காதலின் வாசம்,
நீயோ என் வசம்,
நானோ உன் வசம்,
உதறித்தள்ளிய
வெட்கத்தை வேகமாக
நீ எடுத்து
போர்த்திய போது
விடிந்தது- அதிகாலை..
-Sun Muga -
18-08-2013 00.10 AM

August 16, 2013

பாதி கனவு


இன்று ;14-08-2013
யாரையோ தேடுகிறேன்.கையில் துப்பாக்கியுடன். தண்டவாளத்தின் அருகில், வேகமாக என்னை கிராஸ் ஆன இரயிலின் மீது இருந்து என்னைப் பார்த்து ஒருவன் சிரிக்கிறான், கையில் துப்பாக்கியுடன். என்னை நோக்கி சுடுகிறான், வேகமாக சீறிப்பாய்ந்த குண்டு எனக்கு முன்னர் விழுகிறது. அப்படியே கரைகின்றது. நான் ஒடி போகிறேன். நெடுந்தொலைவு கடந்து விட்டேன். ரயில் அப்போது நின்று கொண்டு இருந்தது. அருகில் போய் தேடிப் பார்த்தேன் அவனை. ஆனால் ரயில் வண்டியோ உருகுலைந்து இருந்தது. காரணம் குண்டு வெடிப்பு. கண் கலங்க கூட கண்கள் இல்லை அவர்களுக்கு. கை பிடித்து தூக்க கூட கை இல்லை அவர்களுக்கு. எழுந்து கொள்ள கூட கால்கள் இல்லை அவர்களுக்கு. இனி எந்த குண்டு வெடிப்புச் சத்தமும் அவரகள் உணர வாய்ப்பில்லை அவர்களுக்கு.அலைந்து திரிந்தேன் எங்கே அவன் என்று. விழித்துவிட்டேன். மணி 5. இன்று இரவு எப்படியும் பிடித்துவிடுவேன் அவனை.
இன்று ; 15-08-2013
நடைமேடையின் மீது நிறைய நபர்கள், அவர்கள் காதுகளில் விழுந்தும் விழாத படி வண்டியின் அறிவிப்புகள்மாற்று மொழியிலும், வண்டி எண் 44235 நடைமேடை எண் 3 ல் இன்னும் சற்று நேரத்தில் வந்து சேரும் என்று மெல்லிய குரலின் சொந்தக்காரி அங்காங்கே இருக்கும் ஒலிப் பெருக்கியில் உளரிக் கொண்டு இருந்தால். நானும் அதை உள்வாங்கிக் கொண்டு நடைமேடையில் நபர்களை பார்த்துவிட்டு தூரத்தில் தெரியும் வண்டியை பார்தேன். ஒரு சில நபர்கள் நடைமேடையின் இறுதிப்பகுதியில் அதாவது வண்டி நுழையும் பகுதியில் ஓடிக் கொண்டு இருந்தனர்.
சீட் பிடிப்பதற்காக. நானும் ஓடி சென்றேன். சென்றுவிட்டேன். அந்த இறுதிப் பகுதியில்.சட்டென்று பயந்து  விட்டேன். வண்டியின் சக்கரம் தண்டவாளம் இல்லாமல் நடைமேடை மீது மோத நெருங்கி விட்டது. ட்ரெவர் வண்டியை நிறுத்தி பின் ரிவர்ஸ்ல் வர அதாவது சரியாக 3வது நடைமேடைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார். இதற்கிடையில் நான் எப்படியோ கதவின் கம்பியை பிடித்து தொங்கிக்கொண்டுருந்தேன். வண்டி ரிவர்ஸ் லில் வர வர, இன்னொரு Sideல இருக்கிற வண்டிமேல உரச போகுது. பயத்தில் என் கையை தளர்த்திவிட்டு கீழே தொப் என்று விழுந்து எழுந்து பார்த்தேன். RPF போலிஸ் காரன் ஒருவன் முரைத்து பார்த்தான். வழிய நானே போய் ஒரு அடியை கன்னத்தில் வாங்கிக்கொண்டு, கன்னத்தை தடவிக்கொண்டே விழித்துப் பார்த்தேன் மணி 6.
-Sun Muga-
16.08.2013 21.32 PM

August 15, 2013

Office - சுடுகாடு

ஊரார் என் முகத்தை
பார்க்க இந்நாள் வரை
வெட்டிக் கதை பேசியவன்
ஏசுகிறான் என்னை
மிக வேகமாக,
தன் கோபத்தை எருவாக
மூடுகிறான் என்
முகத்தின் மீது,
என்னை கொல்லி
வைக்க இத்தனை பேரா?
என்ன பெயர் எடுத்தேன்
இவர்களிடம்,
வேண்டுமென்றா நான்
செய்கிறேன்?
இடுகாட்டில் இருப்பவனுக்கு
கூட இதயம் இருக்கும் போல,
இதயமே இல்லாத இவர்களை
என்னவென்று அழைப்பது?
அதிகாலையிலே அலைந்து
திரியும் இந்த பிணந்தின்னிக்
கழுகுகளை என்ன செய்வது.
நல்லவன் போல இருந்தே
நாளும் வெட்டியான்
வேலை தான்
பார்க்கிறார்கள் இவர்கள்.
நமக்கு வேதனை அளிக்கிற
விசயங்கள் தான் இவர்களுக்கு
காலம் வேகமாக அதாவாது
பொழுதுபோக்காக இருக்கிறது.
-Sun Muga-
15.08.2013 11.59 AM

ஆசை

நிலவின் ஒளியில் உன்
மடியில் உறங்க ஆசையடி,
உன் விழி தொட்ட இடத்தை
என் விழியால் முத்தமிட ஆசையடி,
என் இதழ் ரேகையை
நூலாக கோர்த்து,
உனக்கு ஒரு புடவை
வடிக்க ஆசையடி,
நீ உபயோகித்த பாத்திரத்தை
பத்திரத்தில் எழுதி வைத்துக்
கொள்ள ஆசையடி - அதை
நம் பிள்ளைகளை பத்திரமாக
பாதுகாக்க சொல்லி..
ஒவ்வொரு முறையும்உன்
தோழில் சாய ஆசையடி,
ஒருமுறையாவது உன் மடியில்
சாய ஆசையடி,
உன்னதமான உன் அன்பை
ஒவ்வொரு நாளும்
உண்ண ஆசையடி,
உன் வேர்வைத் துளியை
குடிநீராக பருக ஆசையடி,
நம் நெஞ்சில் இப்போது பாரம் அதிகம் இருந்தாலும் நாம்
இணையும் போது பாசம்
அதிகமாக இருந்தால் போதும்..
-Sun Muga-
15-08-2013 11.36 AM

August 11, 2013

என்னவளைப் பற்றி

கருமை நிறம் ஆனாலும் வெண்மை சுடரை சுற்றி ஒளி வீசும் வைரம் போல் அழகு என்னவள் விழி.
சுவாசிக்கும் காற்று கூட நேசிக்கும் இரு துவாரங்கள்.
ரோஜா இதழ்கள் மட்டும் அல்ல; உலகத்தில் இதுவரை இல்லாத இதழ் எனக்கு மட்டுமே தெரிந்த இதழ்.
அவள் சிரிப்பையும் ரகசியமாக அலங்கரிக்கும் கன்னங்குழிகள்.
கவ்விப் பிடிக்கத் தூண்டும் நாடி.
என் இதழ்களை அணிகலனாக கோர்க்கத் தூண்டும் கழுத்து.
பின் இருக்கும் மல்லிகை கூட தவம் இருக்கும் முன்னே வர, அவள் மார்பின் அழகை கண்டு.
கொடி இடை கண்டதில்லை என் கண்கள்; இவள் இடையை கண்ட பின் தான் நினைத்துப் பார்த்தேன் அந்த கொடியின் இடையை.
ஆயிரம் ஜென்மம் கூட எடுக்கலாம் இவள் தொப்புள் குழியில் புதைந்தால்.
தாயின் மடியை விட இவளின் மடிக்கு மகிமை அதிகம்.
கொஞ்சும் கொலுசு ஒலி கூட அதிகம் நேசிக்கும் இவள் கால்களை.
எந்நேரமும் இவள் பாதத்தில் இருந்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.
-Sun Muga-
11-08-2013 21.50 PM

மன்னிப்பாயா?

உன் அன்பிற்கு நிகர்
நான் இல்லை,
விழியோடு வாழும் நம்
வாழ்க்கைக்கு ஒளி தேவை.
எந்நாளும் வலியோடு
வாழும் நம் ஜீவனும்
காத்திருக்கிறது,
என்று சேருவோம் என்றே!!
உன் விரலை பிடிக்க
துடிக்கிறது என் இதயம்.
உன் உணர்வோடு மட்டும்
அல்ல உயிரே உயிரோடும்
விளையாடிவிட்டேன்
என்னை மன்னித்துவிடு.
காலம் முழுக்க மன்னிப்பு
கேட்டாலும் கிடைக்குமா
என்பது சந்தேகம் தான்
ஏன் என்றால் நான்
தீண்டியது உன் உணர்வுகளை,
உணர்வுகளின் மதிப்பு
உன்னிடம் தான் கண்டேன்.
வலிகளையும் உணர்ந்தேன்
உன்னிடம் இருந்து தான்.
-Sun Muga-
11-08-2013 21.31 PM

August 7, 2013

காகிதம்

காகிதத்தில் எழுதி மடித்த ஒரு  காதல் கடிதத்தின் உணர்வு தான் இது.
மனதிற்கும், உணர்வுக்கும் உயிர் கொடுத்த காதல் தான் இந்த கடிதத்தின் ஒரு தொடக்கம்.
மரங்கள் வீழ்ந்து காகிதமான கதை நான் அறிவேன், உணர்வுகள் வீழ்ந்து வரிகளான கதை தான் இது.
முதல் காதல் கடிதம்,
காற்றில் மிதந்து போன
கனவுகளை ட்டிப் பிடித்து
ஆரத் தழுவி உன்னிடம்
என்னை சேர்க்கத் தான்
இந்த காதல் கடிதம்.
இதழின் ஓரம் ஒரு
புன்னகையுடன் எழுத
ஆரம்பித்தாலும் ஒரு
வித பயம் வார்த்தைகளின்
அணிவகுப்பு அமையுமா?
என்று.
ஏறத்தாழ ஏழறை ஆண்டு
கடந்து விட்டது.
இந்த மரத்தை வெட்டி
சாய்க்க..
ஆம் பெண்ணே!!
உனக்காக இந்த ஏழறை
வருடமும் காகிதத்தை
தொட்டு தொட்டுப் பார்த்து
எழுதினேன் இந்த காதல்
கடிதம்.
அரை நொடியில் பார்த்து
படித்து விடுவாய் என்று
எனக்கும் தெரியும்.
ஆனால் ஆயுள் முழுதும்
நீ மறக்காமல் இருக்க
தான் இந்த கடிதம்.
என் முதல் காதல் கடிதத்தை என் உதிரத்தில் எழுத எனக்கும் ஆசை, ஆனால் அதை பார்த்து நீ உயிரை விட்டுவிடுவாயோ என்ற பதட்டத்தில் பேனாவை பிடித்து எழுதுகிறேன்.என் விழியே, வழியெங்கும் உன் நினைவு, நிதானமாக நீ சென்றுவிட்டாய் அந்த சிவப்பு நிற தாவணியில், ஆனால் என்னுள் தாண்டவம் அல்லவா ஆடிவிட்டது உன் அழகு. இதில் அதியம் என்ன வகையான நடனம் என்று எனக்கு மட்டுமே தெரியும். மறுநாள் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் சொல்ல முடியவில்லை என் காதலைப் போல. அன்று நீ தலையில் பூ வைத்து இருந்தாலும், அந்த பூவிற்கு உன் வாசத்தை கடனாக கொடுத்துவிட்டாய் என்று உணர்ந்து கொண்டேன், உன் தலையில் இருந்து உதிர்ந்த அந்த ஒற்றை பூவின் வழியாக. எட்டு எடுத்து நீ நடக்கும் போது, மெல்லிசை மன்னர் கூட தோற்றுபோய்விட்டார் உன் கொலுசின் ஒலியால். நீ இருக்கும் இடத்தை நான் அறியவே நீ அணிகிறாய் என்பதை நானும் உணர்ந்து விட்டேன். புகைப்படத்தில் நீ புதைந்துகொண்டு ஒவ்வொரு முறையும் என் இதயத்தை தோண்டி எடுக்கிறாய் உன் விழிகளில் வழியே நான் அதை காணும்போது. கைகள் நிறைய புத்தகங்களோடுநீ வருகிறாய் நானோ அத்தனையும் படித்து முடித்துவிடுகிறேன் உன் விழி வழி. எப்படி pass ஆன அப்படின்னு நீ கேட்டும் போது தான் நான் சொன்னேன் எப்பவும் பிட் அடிக்கிறவன் பாஸ் ஆயிருவான்னு. காரணமே இல்லமா நீ என்ன பார்க்கிறதும், காதலோடு நான் உன்னை பார்க்கிறதும் நமக்குள்ள எப்பவும் நடக்கிற ஒன்னு தான். ஒடி ஒழிந்து உன்னை பார்த்தேன். ஒயாத காதல் என்னில் மையமிட்ட போது உன்னையும் நோட்டம் பார்த்த கண்கள். உன் கண்களை பார்த்த போது அது என்னையே வாட்டி வதைத்துவிட்டது. எப்போதும் நான் உன்னை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தேன் எப்போதாவது நீ என்னைப் பார்பாய் என்ற நம்பிக்கையில். நாட்கள் வளர்ந்தன,நானும் என் காதலை வளர்த்துக் கொண்டே இருந்தேன். நேரமும் போதவில்லை, அசைந்து பேசிய அந்த தேன் இதழ்களை கான. தோழிகளோடு நீ பேசினாலும் உன் தோரணையும், உன் பேச்சின் வாசனையும் என்னை தொட்டுத் தொட்டுத் தான் சென்றது.
உண்மையாக சொல்கிறேன் என் அன்பே நான் உன் மேல் வைத்து இருக்கும் காதல்  உன் நெற்றிப் பொட்டின் அளவுதான், ஆனால் அழகானது.
-Sun Muga-
11-08-2013 11.53 AM

நிஜம்

உண்மையை சொல்கிறேன்.
நான் நல்லவன் இல்லை,
என்னிடம் நாணயமும் இல்லை,
நகமும் சதையும் போல
நீ என்னை எண்ண,
நீங்காத வலியோடு
நானும் தவிக்கிறேன்.
நீ என்னும் அளவு
என்னிடம் காதல்
அதிகம் இல்லை,
எனக்காக உயிரையும்
நீ விடுவாய்,
எனக்கு என் மீதே
சந்தேகம் இருக்கிறது
அந்த அளவு தைரியம்
இருக்கிறதா? என்று .
-Sun Muga-
07-08-2013 19.04 PM

August 6, 2013

ஒருவரிச் செய்திகள் - படித்தவை

1. அயல்நாட்டுத் துணியை எரித்த குற்றத்திற்காக (1929) கைது செய்யப்பட்ட மகாத்மா காந்திக்கு, கோர்ட் 1 ரூபாய் அபராதம் விதித்தது.

2. வைட்டமின்களில் கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்டது(1935) வைட்டமின் 'K'.

3. பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறக்கும் குட்டிதான் கோவேறு கழுதை.

4. கடல் வாழ் பிராணியான வால்ரஸீக்கு, யானைக்கு இருப்பது போன்ற தந்தம் உண்டு.

5. 'குமீஸ்' என்ற புதிய பானம் குதிரைப் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

6. எகிப்திய இதிகாசத்தில் 'இசிஸ்' என்ற பெயர் ராணியைக் குறிக்கிறது.

7. 17.09.1908 அன்று உலகின் முதல் விமான விபத்து நடந்தது.

8. வவ்வால்களில் சைவம், அசைவம் இரண்டும் உண்டு.

9. உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஓவியரான 'லியனார்-டோ-டாவின்சி' ஒரு விஞ்ஞானியும் கூட.

10. உலகில் 332 வகையான கிளிகள் உள்ளன.

11. அனகோண்டா (Anaconda) என்ற பாம்புதான், பாம்பு இனத்திலேயே மிகப்பெரியது.

12. பனிச்சறுக்கு விளையாட்டுக்கு 'ஸ்கையிங்' என்று பெயர்.

13. ஈசல் பூச்சியின் ஆயுள் இரண்டு நாட்கள் மட்டுமே.

14. கழுத்திலுள்ள துளை வழியாக முட்டையிடும் உயிரினம் நத்தை.

15. தென் அமெரிக்காவின் அமேசான் காட்டுப் பகுதி 800 கோடி ஏக்கர் பரப்பளவுடையது.

16. போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி ஆங்கிலேயர், (கி.பி. 1154) நான்காம் அட்ரியன்.

17. ஒரு துளி சென்ட்டை மூக்குக் கண்ணாடியில் விட்டுத் துணியால் துடைத்தால், கண்ணாடி பளிச்சென்று இருக்கும்.

18. மனித உடலில் 25 வாட்ஸ் பல்பை எரிய வைக்கக் கூடிய மின்சார சக்தி உள்ளது.

19. நன்கு வளர்ந்த ராஜநாகம் 18 அடி நீளம் இருக்கும்.

20. நெருப்புக் கோழியின் ஆயுள் 68 ஆண்டுகள்.

21. TENS என்ற மின்சார சிகிச்சையின் விரிவாக்கம் 'Transcutaneous Electrical Nerve Stimulation'.

22. கலப்படம் செய்ய முடியாத ஒரே உணவுப் பொருள், கோழி முட்டை.

23. தரையில் பதிந்த புலிகளின் கால் சுவடுகளைப் பார்த்துத் தான் எத்தனை புலிகள் வாழ்கின்றன என்று கணக்கெடுக்கப்படுகின்றது.

24. உணவில் கடலை எண்ணையை அதிகம் சேர்த்துக் கொண்டால், இதய நோய் வர வாய்ப்பு அதிகம்.

25. இமயமலையில் வசிக்கும் 'யாக்' (Yak) எருமையின் பால் பழுப்பு நிறமுடையது.

26. ஒரு பூனை அதிகபட்சம் 14 குட்டிகள் போடும்.

27. 15.09.1830 அன்று, உலகின் முதல் ரயில் விபத்து இங்கிலாந்தில் நடந்தது.

28. நெருப்புக் கோழி கனமான இரும்புத் துண்டையும் விழுங்க வல்லது.

29. 1996- ஆம் ஆண்டு நிலவரப்படி, சந்திரனில் 14 பேர் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

30. உலகில் 200 வகையான நாய்கள் உள்ளன.

31. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA (நாசா) வின் விரிவாக்கம் National Aeronautics And Space Administration என்பதாகும்.

32. இந்தியாவில் பெங்களூர் ரயில் நிலையத்தில் மட்டுமே, பிராட்கேஜ், நேரோ கேஜ், மீட்டர் கேஜ் ஆகிய மூன்று வகை இருப்புப் பாதைகளும் உள்ளன.

33. ' சொப்பியஹ்' என்றால் நரிக் குறவர் பாஷையில் வரதட்சணை என்று பொருள்.

34. டி.வி. ஆண்டெனா, இடிதாங்கியாகவும் பயன்படுகிறது.

35. உப்பளங்களில் வேலை செய்பவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, ஜலதோஷம் போன்ற நோய்கள் வருவதில்லை.

36. இந்தியாவில் ஹாக்கி மற்றும் கிரிக்கெட் விளையாட்டிற்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் 2000 உள்ளன.

37. ஒரு குதிரை பூட்டிய வண்டிதான், உலகின் முதல் ஆம்புலன்ஸ் வண்டி.

38. 'பிளாடா' என்ற ஸ்பானிஷ் சொல்லில் இருந்து ' பிளாட்டினம்' என்ற சொல் தோன்றியது.

39. சென்னையில் 1795-லேயே லாட்டரிச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டு விற்கப்பட்டுள்ளன.

40. முதல் முதலில் அமெரிக்காவில் தான் குதிரைப் பந்தயம் தோன்றியது.

41. போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் இருந்து கசிந்து, பல ஆயிரம் உயிர்களைப் பலி வாங்கிய விஷவாயுவின் பெயர் 'ஐசோ சயனைட் '.

42. உலகின் முதல் டூத்பிரஷ், வேப்பங்குச்சிதான்.

43. பள்ளிக் கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர் ரோமானியர்களே.

44. வைடூரியத்தின் ஆங்கிலப் பெயர் Cats Eye (தமிழில் பூனைக் கண்).

45. 'நீர்ச் சிலந்தி ' என்ற சிலந்தி, நீருக்கு அடியில் கூடுகட்டி வாழ்கிறது.

46. வேலை செய்யப் பயப்படுவதற்கு 'எர்கோ போபியா' என்று பெயர்.

47. மூங்கில், புல் இனத்தைச் சேர்ந்தது.

48. ' பணம்தான் மனிதனுக்கு ஆறாவது அறிவு' என்கிறார் சாமர்செட்மாம்.

49. 'டிப்பர்' என்ற பறவை நீரின் அடி ஆழத்திற்கு நீந்திச் சென்று, இரையைப் பிடிக்கும்.

50. சிகரெட், 808 டிகிரி செண்டிகிரேடில் எரிந்து புகைகிறது.