January 29, 2014

அம்மா

தனிமையான வாழ்க்கை எனக்கு எத்தனையோ சுகங்களையும், சுதந்திரத்தையும் கொடுத்து இருக்கிறது. வெண்பனி சூழ, நதிநீரில் நீந்திப் போகும் ஒரு நூலிழை போல நானும் சென்னை மக்களோடு பயணிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான ஒரு இலக்குகள் இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள்  இறந்துவிடும் என் உயிருக்கு ஒரு இலக்கும் இல்லாமல் பயணிக்கிறது.
இன்று உடல்நலம் சரியில்லை. சாதாரண காய்ச்சல் தான். உடம்பில்  ஆண்டு முழுதும் வேலை செய்த களைப்பு போன்ற ஒரு உணர்வு. எழ முடியவில்லை. இருந்தும் நேற்று வாங்கி வைத்த மாத்திரையை உன்ன சொல்லி தெய்வத்தின் உத்தரவு. எழுந்தேன். நழுவும் கைலியை கூட பிடிக்க திடம் இல்லை. ஹோட்டலுக்கு நடந்து செல்லும் போது வேகமாக SMS செய்யும்  பெண்களை போல பல் ஆடுகிறது. 60வதை கடந்தவன் போல் கை, கால்கள் நடுங்குகிறது. அப்படியே போய் ஹோட்டலில் அமர்ந்து 4 இட்லி ஆர்டர் செய்தேன்.  சுவை இல்லாத ஒரு இட்லி. காரமான சாம்பர். நம்மை காலி செய்யும் ஒரு சட்னி. சாப்பிட ஆரம்பித்தேன்.
ஒரு நிமிடத்தில் என் மனம் என் வீட்டை நோக்கி பயணித்தது பைசா செலவில்லாமல். ஆம் இந்நேரம் வீட்டில் இருந்து இருந்தால் நிச்சயமாக கடை இட்லி தான். ஆனால் என் அம்மாவின் கையால் ஒரு டம்ளர் வெண்ணி காய வைத்து குடித்து இருப்பேன். அதை தவிர அவளுக்கு வேறு ஏதும் செய்ய முடியாது.
ஒரு கனம் அந்த வெண்ணியை  நினைக்கும்போது கண்ணில் கட்டுப்பாடு இழந்து கண்ணீர் பெருகுகின்றன. வாங்கிய 4 இட்லியில் 3  தான் உன்ன முடிந்தது மீதம் சுவை சரியில்லை என்பதினால் இல்லை, வழிந்தோடிய கண்ணீரால் தொண்டைக்குள் இறங்கவில்லை.
என்னைப்போல எத்தனையோ  மனிதர்கள் இப்படி தான் வாழ்கின்றனர். வாழ்க்கையில் வாழ்வது என்பது மிக கடினம். ஆனாலும் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயம் ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு கோணங்களில்.
-Sun Muga-
29-01-2014 21.50 PM

January 28, 2014

அம்மாவின் சுற்றுலா நினைவுகள்

புதன்கிழமை:

காசியில்.
1. பிர்லா மந்திர்
2. திரிசா தேவி கோவில்
3. துர்கா கோவில்
4. ஹனுமான் கோவில்
5. துளசி மாசை மந்திர்
6. காளி கோவில்
7. காலபைரவர் கோவில்

வியாழன்:

ஹனுமான் காட்
போட் மூலம் சென்று
காசிவிஸ்வநாதர் கோவில்,
அன்ன பூரணி கோவில்,
விசாலாட்சி கோவில்.

வெள்ளி:
புத்தகயா
விஷ்ணு பாதம்
புத்தர் கோவில்

சனிக்கிழமை :
அலகாபாத்
த்ரிவேணிசங்கமம்
ஆனந்த Bhavan

ஞாயிறு :

ரிஷிகேஷ் ராமர் மந்திர்
லஷ்மன ஜ்வாலா
ஹனுமான் மந்திர் கோவில்கள்
ஹரித்வார் மானஸா தேவி கோவில்(ரோப்கார்)

திங்கள் :

சண்டிகர்
ராக் கார்டன் (lack ஏரி)

செவ்வாய் :

சிம்லா ரூஃபி பார்டர்

புதன்:

குருகேஷ்த்ரா
மியூசியம் நிறைய கோவில்கள்

வியாழன் :

அமிர்தசரஸ்
பொற்கோயில், ஜாலியன் வாலாபாக் கோட்டை
வாகா பார்டர்

வெள்ளி: 
கடைகளில் சாமான் வாங்குதல்

சனிக்கிழமை :

குதுப்பினார்
ராஜகாட் ( காந்தி சமாதி )
இண்டியா கேட்,
இந்திரா காந்தி வீடு,
தீன் மூர்த்தி பவன்,
பிர்லா மந்திர் பின்,
அம்பேத்கர் பவன்

ஞாயிறு :

காலை 2 மணிக்கு குளித்துவிட்டு 4 மணிக்கு ஆக்ரா செல்லுதல்.

தாஜ்மகால் பார்த்துவிட்டு ஆக்ரா கோட்டை பின். மதுரா சென்று கிருஷ்ணன் பிறந்த இடம் பார்த்து பொருள்களை வாங்கி பின் ஆக்ரா ரயில் நிலையம் வந்து இரவு 3 மணிக்கு திரும்புதல்.

January 27, 2014

அப்பத்தா

அன்புள்ள அப்பாவுக்கு,

உங்களின் இளைய மகனின் ஒரு கடிதம். எத்தனையோ இரவுகளில் எழுத முற்பட்டு இப்பொழுது நான் எழுதி முடித்த ஒரு சில வார்த்தைகள்.

உலக உருண்டையை உற்றுப் பார்த்தால் சுழற்றி அடிக்கும் ஆழிப்பேரலை கூட நம் கண்களுக்கு தெரிவதில்லை. அப்படிப் பட்ட இந்த உலக இருப்பிடத்தில் என் கண்களில் இருந்து அகல மறுக்கிறது அந்த சின்னஞ்சிறு வீடு.

சாணம் மெழுகிய மண் தரை. வீட்டிற்கு வெளியே இரண்டு திண்ணைகள். மழை பொழிந்தால் வீட்டை நனைக்கும் சரிந்த ஓடுகள். பரன் மேலே அடுக்கி வைத்த விறகு கட்டைகள். ஆங்காங்கே பண ஒலைகள். சொல்லும் படியான பொருள் ஏதும் இல்லாத ஒரு வீடு. ஆனால் மிகப்பெரிய பொக்கிஷம் வாழ்ந்த வீடு தான் அது. அந்த பொக்கிஷம் வேறு யாரும் இல்லை என் அப்பாவின் தாய் தான்.

தன் ரத்தத்தை வேர்வையாக சிந்தி தன் இரண்டு ஆண் பிள்ளைகளை வளர்த்து கொண்டு இருந்தாள். காட்டு வேலை தான் தன் பிரதான தொழில். தொலை தூரம் நடந்தே சென்று வேலைகள் செய்து வந்தாள்.

எனக்கு விவரம் தெரிந்த வரை இரண்டு சம்பவங்கள் தான் நினைவில் இருக்கிறது.

அடமழையில் ஊரோடு எங்கள் ஓட்டு வீடும் நனைந்து கொண்டு இருக்க. வீட்டுக்குள் எனக்காக சுட சுட களிக் கிண்டி, கத்தரிக்காய் தொக்கு வைத்து கொடுத்தாள் என் அப்பத்தா. வெளியில் இருந்த குளிர் காற்றுக்கு சுகம் தருவது போல் ஒரு சூடு அந்த களியில். அதன் பிறகு எத்தனையோ மழைத்துளிகள் ஈரப்படுத்திவிட்டது அந்த மண்ணை. அப்போது அந்த களி எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் இப்போது மனம் ஏங்கித் தவிக்கிறது. ஒரு முறை காட்டு வேலைக்கு சென்றவள் வீடு திரும்ப தாமதம் ஆகிவிட்டது. நான் அந்த திண்ணையில் தனிமையில் அமர்ந்து அவளுக்காக காத்துக் கொண்டு இருந்ததாக ஒரு நினைவு.

நம் வாழ்வின் நினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது எத்தனை பெரிய நல்ல உள்ளம் படைத்த அந்த மனுஷியின் கையில் எத்தனை முறை நான் தவழ்ந்து இருப்பேன். எத்தனை முறை என்னை தூக்கி முத்தம் கொடுத்து இருப்பாள், எத்தனை முறை என்னை கான எத்தனித்திருப்பாள், எத்தனை முறை என்னை நினைத்து கண்ணீர் சிந்தி இருப்பாள் என்று இப்போது நினைத்து கொள்கிறேன்.

அவள் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் எப்படி கழிந்து இருக்கும் என்று அவளுக்கு மட்டுமே தெரிந்து இருக்கும். அவள் சோகத்தை யாரிடமும் வெளிப்படுத்தும் குணம் கொண்டவள் இல்லை.

உடல்நலக் குறைவுடன்  படுத்த படுக்கையில் ஆன போது நான் ஒரே ஒரு முறை பார்த்தேன். இப்போதும் அவள் பார்த்த பார்வைகள் என்னை பார்க்கிறது அவள் படுத்து இருந்த திண்ணையை நினைக்கும் போது. திண்ணை என்பது ஒரு வீட்டிற்கு இரண்டு சிறகுகள் போன்றது என்று நான் படித்த ஒரு வரி ஞாபகம் வருகிறது. 

ஆம் உண்மையில் திண்ணை என்பது எத்தனை சுக, துக்கங்களை தாங்கி இருக்கிறது. அவள் படுத்த படுக்கை ஆன போது அந்த திண்ணை தான் அவளை தாங்கிப் பிடித்து இருக்கிறது.

ஒரு நாள் அந்த ஓட்டு வீட்டுக்குள் மாரியம்மன் தெய்வம் ஊஞ்சல் ஆடுவது போல் கனா வந்ததாம் என் அம்மாவிற்கு. அது மாரியம்மா இல்லை, சுப்பம்மாள் என்று நான் சொல்லி இருக்க வேண்டும். நான் சொல்லவில்லை.

-Sun Muga-
27-01-2014 20.00 PM

January 1, 2014

Pizza

வருடத் தொடக்கத்தில்
வாங்கியது என்னவோ
ஆசையோடு;

உண்டது என்னவோ
அளவோடு;

கையிலே எடுக்கும்
அளவு;
வாயிலே வைக்க
முடியவில்லை.

தட்டிலே இருப்பதையும்
அப்படியே வைக்கவும்
மனமில்லை;

ஆசையோடு Pizzaவும்
வாங்கியாச்சு,
வாந்தியும் எடுத்தாச்சு.

-Sun Muga-
01-01-2014 23.43 PM





2014 முதல் கவிதை

லவாப்பழ வண்ணத்தில்
கோலமிட்டு
வரவேற்றாய் புது
வருடத்தை;

நான் இங்கிருந்து
முத்தமிட்டு வரவேற்கிறேன்
உன் புன்னகையை;

உன் வண்ண கோலத்திற்கு
அழகை கூட்ட
நான் என்ன
செய்ய வேண்டும்?

அடைமழை பார்வையை
உன் இடையில்
பொழிய வேண்டுமா?

குடையை பிடித்து
உன்னோடு குளிர்
காய வேண்டுமா?

சொல். அழகே!
குறுக்கம் நெடுக்குமான
கோடுகளை உன் கை
விரல் தீண்டி நானும்
போட வேண்டுமா?

-Sun Muga-
01-01-2014 23.36 PM

2014

01-01-2014. என்னில் பல மாற்றங்கள் உருவாகலாம். இனி ஒவ்வோரு நாளும் எப்படி இருக்கும் என்ற நினைப்புகளும் நெஞ்சில் இடம் பெறலாம். எழுத்து உலகில் என்னை இன்னும் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள ஒரு விருப்பம்.

கவிதை என்றால் காதல். கட்டுரை என்றால் வாழ்க்கை. என் வாழ்க்கையில் கவிதையும், கட்டுரையும் எழுத நிறைய இருக்கிறது. முடிந்த அளவு எழுத முற்படுகிறேன்.

இதற்கு முந்தைய வருடத்தில் இருந்து தான் என் எழுத்து வேலைகளை என் உயிரின் உதவியோடு ஆரம்பித்தேன். இந்த வருடமும் என் உயிரின் உதவி தேவைப்படும் போது கிடைக்கும் நான் என்ன நிலைமையில் இருந்தாலும்.

-Sun Muga-
01-01-2014 23.18 PM