தனிமையான வாழ்க்கை எனக்கு எத்தனையோ சுகங்களையும், சுதந்திரத்தையும் கொடுத்து இருக்கிறது. வெண்பனி சூழ, நதிநீரில் நீந்திப் போகும் ஒரு நூலிழை போல நானும் சென்னை மக்களோடு பயணிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான ஒரு இலக்குகள் இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள் இறந்துவிடும் என் உயிருக்கு ஒரு இலக்கும் இல்லாமல் பயணிக்கிறது.
இன்று உடல்நலம் சரியில்லை. சாதாரண காய்ச்சல் தான். உடம்பில் ஆண்டு முழுதும் வேலை செய்த களைப்பு போன்ற ஒரு உணர்வு. எழ முடியவில்லை. இருந்தும் நேற்று வாங்கி வைத்த மாத்திரையை உன்ன சொல்லி தெய்வத்தின் உத்தரவு. எழுந்தேன். நழுவும் கைலியை கூட பிடிக்க திடம் இல்லை. ஹோட்டலுக்கு நடந்து செல்லும் போது வேகமாக SMS செய்யும் பெண்களை போல பல் ஆடுகிறது. 60வதை கடந்தவன் போல் கை, கால்கள் நடுங்குகிறது. அப்படியே போய் ஹோட்டலில் அமர்ந்து 4 இட்லி ஆர்டர் செய்தேன். சுவை இல்லாத ஒரு இட்லி. காரமான சாம்பர். நம்மை காலி செய்யும் ஒரு சட்னி. சாப்பிட ஆரம்பித்தேன்.
ஒரு நிமிடத்தில் என் மனம் என் வீட்டை நோக்கி பயணித்தது பைசா செலவில்லாமல். ஆம் இந்நேரம் வீட்டில் இருந்து இருந்தால் நிச்சயமாக கடை இட்லி தான். ஆனால் என் அம்மாவின் கையால் ஒரு டம்ளர் வெண்ணி காய வைத்து குடித்து இருப்பேன். அதை தவிர அவளுக்கு வேறு ஏதும் செய்ய முடியாது.
ஒரு கனம் அந்த வெண்ணியை நினைக்கும்போது கண்ணில் கட்டுப்பாடு இழந்து கண்ணீர் பெருகுகின்றன. வாங்கிய 4 இட்லியில் 3 தான் உன்ன முடிந்தது மீதம் சுவை சரியில்லை என்பதினால் இல்லை, வழிந்தோடிய கண்ணீரால் தொண்டைக்குள் இறங்கவில்லை.
என்னைப்போல எத்தனையோ மனிதர்கள் இப்படி தான் வாழ்கின்றனர். வாழ்க்கையில் வாழ்வது என்பது மிக கடினம். ஆனாலும் வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயம் ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு கோணங்களில்.
-Sun Muga-
29-01-2014 21.50 PM
29-01-2014 21.50 PM
No comments:
Post a Comment