February 5, 2014

கதை சொல்லும் கடல்

வீசும் காற்றில் விழுந்த
மர இழைக்கும் கிளைக்குமான
காதல் பிரியும் முன்
அவைகள் எப்படி
காதலித்து இருக்கும்?
காதல் ஒன்றும் அத்தனை எளிதான
விஷயம் இல்லை. யாரும் சட்டென்று புரிந்து கொள்ள. காதல் என்பது இதயத்தின் ஓசை. அது கேட்கும் போது நான் என்னை மறந்து இருக்கிறேன். அதை உணரும் போது எல்லைகள் கடந்து இருக்கிறேன். காதலனாக காதலியை வலம் வரும் போது எத்தனை ஆனந்தம். காதலியை கரம் பிடிக்கும் போது எவ்வளவு பொறுப்பு. அவசர உலகில் மிக அவசரமாக காதலில் விழுந்தாலும் காதலுக்கு பின் மிகப்பெரிய பொறுப்பு இருவருக்குமே இருக்கிறது.

No comments:

Post a Comment