March 8, 2016

2016 கவிதைகள் 61 to 70

கான முடியாத
காதலின் உலகத்தில்
காதல் கொண்டு
கவிதை கொண்டு
நம் வாழ்க்கையை
கான முடியும்
என்ற நம்பிக்கை
பிறக்கிறது
எல்லா இரவிலும்
என் கண்ணில்
தென்படும் நட்சத்திரத்தில்...  61

ஒவ்வொரு நொடியும்
அழுத்தமாய்
உன்னை நினைத்த பிறகு
தான்
என் வாழ்வு
மிஞ்சி இருக்கிறது
இவ்வுலகில்....         62

உன்னோடு
பேசிக்கொள்ள கடலும்
இருக்கிறது
வருத்தங்களை
கரைத்துக் கொள்ள
கரையும் இருக்கிறது
கண்ணீரும்
நுரையாய் கரையவும்
செய்கிறது....     63

உன் கண்ணீரின்
ஒரு துளியைப் பற்றி
யோசித்தேன்
ஒவ்வொரு இரவிலும்
அது இரவாய்
என்னுள் இறுகிய போதும்...  64

உன் நினைவின்
சப்தங்கள்
பல நேரங்களில்
என்னை
மெளனம் மட்டுமே
அடையச் செய்கிறது...    65

எல்லையற்ற
உன் நினைவின் வழி
இவ்வாழ்வின்
எல்லைகளை கடந்து
வாழ்கிறேன்
எல்லா இரவிலும்...  66

மெதுவாக
நீ பேசும்போது
மெல்லிசையாக
என் விழியும் அதையே
ரசிக்கிறது....    67

கனவை கொண்டு
வாழ்க்கை போகிறது
கவிதை கொண்டு
காதலும் வளர்கிறது
கண்ணே!
கன நேரம்
உன்னை நினைத்து
கனவை வளர்க்கிறேன்
வாழ்க்கையும் நகர்த்துகிறேன்
நிறைவேறும் என்ற
நம்பிக்கையில் மட்டும் அல்ல
என் மனம் நிறையும்
என்ற நம்பிக்கையில்...      68

வாழ்வின் பல நிகழ்வுகளை
எதிர்கொள்ள
உன் நினைவுகள்
எனக்கு தேவைப்படுகிறது
அதைவிட
நீயே தேவைப்படுகிறாய்
ஒரு சில சூழ்நிலைகளில்..  69

சுடும் நெருப்பின்
சுகம் அறியும்
ஓர் குளிர் காலம்
உன்னுடனான
குளிர் காலம் மட்டுமே
சுகம் அளிக்கிறது
என் சுடு தேகத்திற்கு...    70

No comments:

Post a Comment