June 30, 2013

உயிர்

காதலியே!!
என்னையும் கொஞ்சம் பார்!!
பாசத்தில் உன்னையும்
மிஞ்சும் என் காதல்..
இரவுகள் முடிந்து பகல்
வந்தாலும் நீ என்னுள்
இறுக்கமாக தான்
இறுக்கிறாய்..
என் காதலியே!!
ஏதோ ஒரு எதார்த்தம்
உன்னையே உற்று
நோக்குகிறது என் மனம்.
நீ ஒருமுறை இல்லை முதல் முறை பார்த்தாய் நானோ உன்னை முரைத்து பார்த்ததாகவே நினைவு. ஆனால் அதன் பின் தான் உன்னையே பார்த்தேன் நான். உன்னை கானாமல் நான் தவித்த கனம் என்னவென்று சொல்ல நீ பார்த்த நொடி என்னுள் கரைய முடியாமல் திணறுகிறது. திமிரான உன் பார்வை என் மீது படரும் போது மட்டும் எப்படி மென்மையாக மாறுகிறது.இந்த மாற்றம் எதனால்? என் மீது உள்ள காதல் தான் வேறு என்ன இருக்க முடியும். சமுத்திரத்தின் நீளத்தை கானும் போது தான் சிரிப்புவருகிறது, இதை விட சரித்திரம் படைத்தது  என்னவள்
அன்பு என்று. எத்தனை முறை எழுதிப் பார்த்தேன் உனக்காக காதல் கடிதம் இன்றும் என்னால் ஒரு வரி  கூட அமைக்க முடியவில்லை. மன்னித்துவிடு என்னை!!!
- Sun Muga-
30-06-2013 22.07 PM

கடிதம் 2 காதலி

அன்புள்ள என் காதலிக்கு,
உன் முகா எழுதிக்கொள்வது. நலம் என்று சொல்லும் அளவிற்கு நலம் இல்லை, இருந்தும் நலம் உன் நினைவு போல. வெகு நாட்களுக்கு பிறகு உனக்கொரு கடிதம் எழுதுகிறேன், ஆனால் கடிதத்தில் என்ன எழுதுவது என்று தான் தெரியவில்லை. கரைந்த கண்ணீர் துளியை பற்றி நான் இதில் எழுதினால் காகிதத்தோடு உன் கன்னங்குளியும் நனையும். நான் இன்றும் உன்னோடு தான் இருக்கிறேன் கவலை கொள்ளாதே, காலத்தின் தீர்மானம் என்ன? என்று எனக்கும் தெரியவில்லை. என்னால் இன்று உன்னிடம் அதிகம் பேச முடியவில்லை, பேச வேண்டும் என்று நீ துடிப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஏதோ ஏதோ நடக்கிறது. அதில் மனம் திணறுகிறது ஒவ்வொரு நாளும். முடிந்து போன நாளில் ஒவ்வொரு மூட்டையாக நம் நினைவுகளை மட்டுமே சேகரித்து வைத்துக் கொள்கிறேன். நான் கிழித்து எரிந்த தேதி, நானே அந்த நாளை கொன்றுவிட்டது போல ஒரு குற்ற உணர்ச்சி. உன்னை போல் எனக்கு ஒன்றும் உணர்ச்சிகள் அதிகம் இல்லை என்றாலும் ஏதோ ஒரு நடுக்கம் அந்த நாளின் இறுதியில். இறுதிச் சடங்கு போல் தான் தீர்மானிக்கிறேன் இறுதில் சேராத நாளில்.
இப்படிக்கு,
உன் முகா...
-Sun Muga-
29-06-2013 21.30 PM

June 26, 2013

வாழ்க்கை

மனங்களில் இனைந்தாலும், விரல்கள் இனையாத "வாழ்க்கை" நம் வாழ்க்கை. என் இதழ்களில் இருந்து புலப்படும் வார்த்தைகள் அனைத்தும் உன் காதுகளை மட்டுமே வருடிருக்கும் மிகவும் ரகசியமாகவே நம்முள். இன்றும் அவ்வாறு தான் உள்ளது. ஆனால் மிகவும் கொடுமையான நொடிகளில். நொடியில் மாறும் வாழ்க்கை, ஏன் நம் வாழ்க்கைக்கு கை கொடுக்க மறுக்கிறது என் உயிரே!! என்று இனைவோம் என்று காத்திருக்கிறோம் அந்த நொடியின் விளிம்பில் வாழ. வாழும் வாழ்க்கை உன்னோடு இருந்தாலும் அதற்க்கும் உயிர் வேண்டும் என்று தான் உயிர் வாழ்கிறோம். உண்ணும் உணவை கூட உண்ணும் போது உன்னோடு உண்டால் எவ்வாறு இருக்கும் என்றே யோசிக்க தோன்றுகிறது. என் உடல் முழுவதும் தொலைக்காட்சியை நோக்கி அமர்ந்திருந்தாலும் கருவிழிகள் உற்று நோக்குவது உன் விழிகளை மட்டுமே. ஒவ்வொரு நொடியும் யோசிக்கிறேன் நம்மை பற்றி அப்போதவது அந்த நொடியின் இறுதியில் நாம் இணைவோம் என்று. ஒருவருக்கொருவர் மாறி மாறி யோசிக்கிறோம் நாம் தாம் கஷ்டப்படுத்துகிறோம் என்று. உண்மை அதுவல்ல. நம்மை நாமே கஷ்டப்படுத்துகிறோம் முடிவெடுக்க தைரியம் இல்லாததால்....
-Sun Muga-
26-06-2013 21.51 PM

June 24, 2013

நீ இல்லாமல்

ஒரளவு உழைத்து
அந்த உழைப்பின்
ஒரு மனக்கசப்போடு,
மிகுந்த கனத்தோடு,
முடியபோகும் அந்த
ஒரு நாளின்
இறுதியில்,
மணித்துளிகள் நகர,
உணவகம் நோக்கி
நானும் நகர,
எத்தனை ரகம்
இருந்தாலும் அப்படி
ஒரு வெறுப்பு,
வேதனைகள் பல
எண்ணும்போது,
தலையணை கொண்டு
அமுக்கினாலும்,
அமுங்காதுபோல
இந்த தீராத் தலைவலி.
சிறு வெப்பம் குறைந்தாலும்
நிம்மதி இல்லை.
நீ இல்லாமல் என்னால்
அந்த இரவை கடக்கவும்
முடியவில்லை----
ஒரு கப் "டீ"
-Sun Muga -
24-06-2013 21.25 PM

குலதெய்வம்

குறுகி போன என்
வாழ்க்கையில்
என் குலதெய்வத்திற்க்கும்
பங்கு உண்டோ என்று
ஒரு சில நேரம்
எண்ணிப் பார்ப்பேன்
சோகம் என்னை
கொல்லும் போது..
சோதனை பல தந்தாலும்
பக்க பலமாக அவன்
இருக்கிறான் என்று
எண்ணிக் கொள்வேன்.
காடுகளையும் தாண்டவில்லை,
கரைகளையும் கடக்கவில்லை,
கண் திறந்து எனக்காக
நீ காத்திருக்க;
என் குலதெய்வமே!!!
உனக்காக நான் என்ன செய்ய
வேண்டும்?
உதவி செய் எனக்காக..
Sun Muga
24-06-2013 21.14 PM

கடிதம்

என் இனிய காதலிக்கு,
உன் முகா எழுதிக்கொள்வது. முகம் பார்த்து யுகம் தாண்டிவிட்டது. என்னுள் கண்ணீர் நீரோடை பெருக்கெடுத்து ஒடுகிறது உன் காதல் கடலில் கலக்க. நிம்மதி கொள்கிறேன் நான் உன் நினைவின் முத்தங்கள் என்னை மித்தமிடும் போது. மீட்டு எடுக்க வேண்டும் அந்த பொன்னான காலத்தை மீண்டும். மின்மினி பூச்சிகள் உடலுறவு கொள்வது போல் மீண்டும் மீண்டும் மோதிக் கொண்ட கண்கள் இன்னும் என் கண்களில். இன்னும் என்னால் மீளமுடியவில்லை உன் முதல் முத்தத்தின் ஆழம் பார்த்த நொடியை!!!
-Sun Muga-
24-06-2013 21.06 PM

June 14, 2013

உதிரம்

திலகத்தால் உதிர்ந்த
உதிரம் இது;
என் உயிரையும் மீறி
வழிந்தது இது;
உயிர்கள் ஒரு சேர
உதிர்ந்தது இது;
உலகத்தை மறக்க
உடைந்தது இது;
என் காதல் இவ்வளவு
கொலை வெறி கொண்டதா?
உதிரத்தை குடித்து ,
உயிரையும் பறிக்க
துடித்தது...
கோலைத்தனமான வாழ்க்கையால்
சிந்திய உதிரம் இது..
காதலை மெய்ப்பிக்க;
இல்லை,
உயிர்ப்பிக்க  உதிரம்
கொடுத்தாய்..
அது உனக்கு இன்று
வரை கொடுமையைத் தானே
கொடுக்கிறது..
கொன்றுவிட்ட ஆசையால்
வழியும் உதிரம்,
நாம் இந்த உலகை
விட்டு சென்ற பிறகும்
வடியும் போல,
உயிரே!! உயிராய் உருகி,
உதிரமாய் என்னுள்
பெருக்கெடுத்து ஒட
நீ சிந்தியது ஒரு துளி
கண்ணீர்; அதில் வடிகிறது
பல துளி உதிரம்..
உயிரே!! எனக்கும் சிறு
ஆசை தான்,
உதிரத்தில் உரைய,
உன்னை சேரத நாளில்...
-Sun Muga-
14-06-2013 23.29 PM

நீ

நடந்தது நீ தான்,
உன் நடையின் சத்தம்
தான் அது..
மேலோட்ட பார்வை,
பனியை போர்த்திய உடை,
மெதுவாக நடக்கும் குதிரையின் நடை.
இவை அனைத்தும் உனக்கான எடை..
நீண்டகால பார்வை அது..
நினைவில் நீந்தும் விழி அது..
நீயே பார்த்தாய் நீ மட்டுமே
பார்த்தாய் என் பார்வையை
அதற்க்கான அர்த்தமும்
நீ மட்டுமே உணர்ந்தாய்..
நீல வானம் கூட என்னோடு
நீந்தியது..
நீ இல்லாமல் ஒரு கனம்
கூட இல்லை என் நாளில்.
-Sun Muga-
30-06-2013 22.25 PM

June 12, 2013

உறவு

உனக்கும் எனக்குமான உறவை ஒரு வரியில் என்னால்  முடித்துக் கொள்ள முடியவில்லை. நீ என் தாயும் இல்லை, தகப்பனும் இல்லை, ஆனால் ஏனோ என் மனம் உன்னைப் பற்றியே சிந்திக்கிறது. சிறிது நேரம் ஒய்வு கிடைத்தாலும் அது உன் நினைவைத்தான் ஞாபகப்படுத்துகிறது.உன்னதமான உறவு தான் போல உனக்கும் எனக்கும்.

தனிமையில் மனம் தேடுவது உன் நிழலை தான். நிறமற்ற, உருவமற்ற உருவத்தில் என்னோடு உறவாடி உயிராய் வருகிறது இந்த உயிர்.
நீயும் என்னோடு கண்ணீர் சிந்துகிறாய் என்று என் மனதிற்கு தெரிகிறது, இருந்தாலும் ஏன் இந்த துயரம் என்று தான் புரியவில்லை.

காலத்தின் கணக்கு என்னவென்று தீர்மானிப்பதற்குள் நம் காலம் முடிந்துவிடும் போல..

காதல் என்ற ஒரு புழுவால் தூண்டிலில் சிக்கிவிட்ட இந்த இரு மீன்கள் கண்ணீரை சிந்தினாலும், கடலில் கரைந்தாலும் கண்டு கொள்ள யாரும் இல்லை. வேதனை பல சுமந்து வரும், வாழும் இந்த காலமும் இனிமையான காலம் தான் கண்ணீல் காதல் பெருகும் போது..

நீ இல்லாமல் நானும் வாழ்ந்துவிடுவேன். நான் இல்லாமல் நீயும் வாழ்ந்துவிடுவாய். ஆனால் நம் வாழ்வுக்கான அர்த்தம் தான் இங்கு வாழ முடியாது.

இயற்கையின் கையில் நம் வாழ்க்கை. எனக்காக எத்தனை தியாகம் செய்தாய் நீ. உனக்காக ஒரு நன்மை கூட இந்த இயற்கை செய்ய முன் வரவில்லை என்றால் என்ன சொல்வது, செயற்க்கையாக கூட ஒரு வார்த்தைக் கிடைக்க மறுக்கிறது.


இப்போதும் சொல்கிறேன் உனக்கும் எனக்குமான  உறவு 
ஒரு உன்னதமான உறவு.


-Sun Muga-
19-06-2013 20:00 PM

June 5, 2013

பிறந்த நாள் (06-06)


கண்கள் இனைந்து காதல்
கருவில் பிறந்த என்
முத்தத்திற்க்கு இன்று 
பிறந்த நாள்...


முழுமதி முகத்தையே
வருடிய முத்தம்,

இன்று நீ பிறந்தாய்...

பிறக்கும் போதே
முத்தம் என்ற பெயரில்
நீ பிறந்தாய்!!!


முத்தமாகவே மேனி
எங்கும் தவழ்ந்தாய்!!


மதி மயங்கி ,
விழி மயங்கி,
விடிந்த பொழுதிலும்
நீ மயங்கி,

என்னுள் நீ புதைந்தாய்!!

இதழில் மென்மை கூட,
மென்மையில் மெளனம் கூட,


இடர் இல்லாமல் நீயும்
நானும் கூட,

இது என்ன? புது உலகம்

மூச்சு முட்டினாலும்
உயிர் பெறுகிறோம் 
மறு முத்தத்தால்,


இந்த காதல் கருவில்
இத்தனை பிள்ளைகளா?
பிறக்கிறது.. முத்தமாக!!!


எத்தனை முறை
நீ பிறந்தாலும்
நான் உனக்கு
வைத்த பெயர்
முத்தம் தான் - நித்தம்...

நீயும் பிறந்தாய்,
என் காதலாய் வளர்ந்தாய்,
சூரியனைப் போல் எழுந்தாய்,
நதிநீராய் நகர்ந்தாய்,
மழையாக பொழிந்தாய்,
நிலவாக ஒளிர்ந்தாய்,
என் முத்தமே!!
இன்று உனக்கு பிறந்த நாள்!!

உனக்கு பரிசாக உன்னையே
கொடுக்கவா?


இல்லை என்னையே
கொடுக்கவா?

ஒரே குழப்பம்!!!

பேசமல் இரண்டையுமே
கொடுத்துவிடவா?


ஊடலால் நீ பிறக்கவில்லை
என்றாலும்,


ஊடலுக்காக நீ என்னுள்
பிறந்தாய்!!!

தேடித் தேடிப் பிறந்தாய்!!

தேடியதும் நீ கிடைத்தாய்
முத்தமாகவே!!


இதழ் முட்டிக் கொள்ளவில்லை,
கைவிரலும் கோர்த்துக் கொள்ளவில்லை,


ஆனாலும் நீ முத்தமிடுகிறாய்
இமை வழி...


பரிதவித்த இதழ்,
பாதை மாறிப் போன
பிறகும் நினைவுகளில்
வந்து சேருகிறது-இதழில்.

நீயும் பிறந்தாய்!!
நீயும் வளர்ந்தாய்!!

என்னுள் எழுந்த ஆசையைப்
போல,


என்னுள் கலந்த பேராசைப்
போல...


இப்படிக்கு,
உன் தாயை பிரிந்து வாழும்
உன் தகப்பன்..



-Sun Muga-
05-06-2013 23.18 PM

June 4, 2013

மெளனம்

மெளனம் கொண்டாய்!
மெளனத்தால் காதலும் கொண்டாய்!
காதலால் என்னையும் வென்றாய்!
என் உயிரே!
கண்ணீர் வடிகிறது!

காரணம் உன் காதல் ,
ஏன் என்னை இவ்வளவு 
ஆழமாக காதலிக்கிறாய் நீ?

கண்ணீர் வடிகிறது!

என் காதலே காலை முதல்
காத்திருக்கிறாய் என்
குரலைக் கேட்க,


கேட்டவுடன் காத்திருக்கிறாய்
முத்தத்தை பரிசாக தர..
போதும் என் உயிரே!


உன் காதலின் ஆழம்
நான் அறிவேன்.


வீழவும் வழி இல்லை,
வாழவும் தைரியம் இல்லை,


என் தகுதியை நானே அறிவேன் 
உணர்ந்த நொடி கண்ணீரும்
விடுவேன்..


விட்டு விட்டேன் என் மனதில்
ஆசை என்ற ஒன்றை
ஒரு முறை உன் விழியை
பார்க்க வழியைத் தான் தேடுகிறேன்..


தேடிய பொழுதுகள் 
எல்லாம் தேம்பியே!
கண்ணீர் வடிகிறது!!!



-Sun Muga-
04-06-2013 22.19 PM

June 3, 2013

நம் கவிதை

எழுதி முடித்த கவிதையே
உன்னை முதலில் படித்த
பெருமை  எனக்கு
மட்டும்...
எழுத்துப் பிழை இல்லை,
எழுதியவன் நான் என்பதால்,
இதில் வார்த்தைகளும் இல்லை,
மெளனத்தில் கலந்ததால்,
இதில் அர்த்தமும் இல்லை
எதார்த்தம் நிறைந்ததால்..
கவிதைக்கே விழி
இருப்பதை என் விழி
காண்கிறது...
எத்தனை வரிகள்
அமைக்கிறது உன் விழி,
என்னையும் மறந்து சிரிக்கிறேன்
கவிதையாக நீ சிரிக்கும் போது..
படிக்கும் போது மழலை
தனம் கூடுகிறது.
அடி மேல் அடி வைத்து
விளையாடுகிறது என் கவிதை..
கீச்சு குரலில் குதிக்கிறது
என் கவிதை செவிகளில்,
செலவிட தான் நேரம்
இல்லை கவிதையோடு
ஒரு வரியாக நான் கலக்க....

-Sun Muga-
03-06-2013 22.25 PM

இரவின் இறப்பு


இரவின் நீளம் எத்தகைய 
கொடுமை நீ இல்லாமல்,


மிக நீளமான ஒரு
தேடல்,


மிக நீளமான ஒரு
வலியோடு,


மிக நீளமான ஒரு
கனவு ,


மிக நீளமான ஒரு
கண்ணீர் துளியோடு,


மிக நீளமான ஒரு
ஏக்கம்,


மிக நீளமான ஒரு
கண் விழிப்போடு,


மிக நீளமான ஒரு
எதிர்பார்ப்பு,


மிக நீளமான ஒரு
இரவின் இறப்பு..


ஓர் இரவின் இறப்பில்
என் சந்தோசம் என்றால்
நான் எங்கு போய்
சிரிப்பது?

எதை பார்த்து சிரிப்பது?

தானே நான் சிரித்தால்-
பைத்தியம் தானே?


ஆனால் என் தேடல்
உண்மை..


சிரித்தும் பழகிவிட்டேன்,
சிந்தியும் பழகிவிட்டேன்,


சிரமம் உனக்கு இருந்தும்
சிதறாமல் என்
காதலை பாதுகாக்கிறாய்.


உனக்காக இந்த ஒரு
இரவு என்ன
எத்தனை இரவு
இறந்தாலும் வருத்தம்
கொள்ள மாட்டேன்..


வானத்தின் வண்ணம் தானே
நிறம் மாறுகிறது..
நம் காதல் இல்லையே?


வண்ணம் என்ன ஆனால்
எனக்கென்ன? என்
எண்ணம் நீயாக
இருக்கும் போது..


ஏந்தி பிடிக்கிறேன் -
எண்ணையில் எரிந்த 
தீபத்தை..


என்னையே எரிக்கிறான்
இறைவன் என்ன 
சொல்வது..
என் காதலுக்கு சோதனை...


இரவுகள் இறந்து போனாலும்
உன்னால் என் கனவுகள் 
வளர்ந்து கொண்டே தான்
இருக்கிறது..

கவலை கொள்ளாதே!!
காத்திருக்கிறேன்...

கதிரவனாக காலையில்
உன் முகத்தில் நான்
முழிக்க.....



-Sun Muga-
03-06-2013 21.26 PM