June 5, 2013

பிறந்த நாள் (06-06)


கண்கள் இனைந்து காதல்
கருவில் பிறந்த என்
முத்தத்திற்க்கு இன்று 
பிறந்த நாள்...


முழுமதி முகத்தையே
வருடிய முத்தம்,

இன்று நீ பிறந்தாய்...

பிறக்கும் போதே
முத்தம் என்ற பெயரில்
நீ பிறந்தாய்!!!


முத்தமாகவே மேனி
எங்கும் தவழ்ந்தாய்!!


மதி மயங்கி ,
விழி மயங்கி,
விடிந்த பொழுதிலும்
நீ மயங்கி,

என்னுள் நீ புதைந்தாய்!!

இதழில் மென்மை கூட,
மென்மையில் மெளனம் கூட,


இடர் இல்லாமல் நீயும்
நானும் கூட,

இது என்ன? புது உலகம்

மூச்சு முட்டினாலும்
உயிர் பெறுகிறோம் 
மறு முத்தத்தால்,


இந்த காதல் கருவில்
இத்தனை பிள்ளைகளா?
பிறக்கிறது.. முத்தமாக!!!


எத்தனை முறை
நீ பிறந்தாலும்
நான் உனக்கு
வைத்த பெயர்
முத்தம் தான் - நித்தம்...

நீயும் பிறந்தாய்,
என் காதலாய் வளர்ந்தாய்,
சூரியனைப் போல் எழுந்தாய்,
நதிநீராய் நகர்ந்தாய்,
மழையாக பொழிந்தாய்,
நிலவாக ஒளிர்ந்தாய்,
என் முத்தமே!!
இன்று உனக்கு பிறந்த நாள்!!

உனக்கு பரிசாக உன்னையே
கொடுக்கவா?


இல்லை என்னையே
கொடுக்கவா?

ஒரே குழப்பம்!!!

பேசமல் இரண்டையுமே
கொடுத்துவிடவா?


ஊடலால் நீ பிறக்கவில்லை
என்றாலும்,


ஊடலுக்காக நீ என்னுள்
பிறந்தாய்!!!

தேடித் தேடிப் பிறந்தாய்!!

தேடியதும் நீ கிடைத்தாய்
முத்தமாகவே!!


இதழ் முட்டிக் கொள்ளவில்லை,
கைவிரலும் கோர்த்துக் கொள்ளவில்லை,


ஆனாலும் நீ முத்தமிடுகிறாய்
இமை வழி...


பரிதவித்த இதழ்,
பாதை மாறிப் போன
பிறகும் நினைவுகளில்
வந்து சேருகிறது-இதழில்.

நீயும் பிறந்தாய்!!
நீயும் வளர்ந்தாய்!!

என்னுள் எழுந்த ஆசையைப்
போல,


என்னுள் கலந்த பேராசைப்
போல...


இப்படிக்கு,
உன் தாயை பிரிந்து வாழும்
உன் தகப்பன்..



-Sun Muga-
05-06-2013 23.18 PM

No comments:

Post a Comment