இரவின் நீளம் எத்தகைய
கொடுமை நீ இல்லாமல்,
மிக நீளமான ஒரு
தேடல்,
மிக நீளமான ஒரு
வலியோடு,
மிக நீளமான ஒரு
கனவு ,
மிக நீளமான ஒரு
கண்ணீர் துளியோடு,
மிக நீளமான ஒரு
ஏக்கம்,
மிக நீளமான ஒரு
கண் விழிப்போடு,
மிக நீளமான ஒரு
எதிர்பார்ப்பு,
மிக நீளமான ஒரு
இரவின் இறப்பு..
ஓர் இரவின் இறப்பில்
என் சந்தோசம் என்றால்
நான் எங்கு போய்
சிரிப்பது?
எதை பார்த்து சிரிப்பது?
தானே நான் சிரித்தால்-
பைத்தியம் தானே?
ஆனால் என் தேடல்
உண்மை..
சிரித்தும் பழகிவிட்டேன்,
சிந்தியும் பழகிவிட்டேன்,
சிரமம் உனக்கு இருந்தும்
சிதறாமல் என்
காதலை பாதுகாக்கிறாய்.
உனக்காக இந்த ஒரு
இரவு என்ன
எத்தனை இரவு
இறந்தாலும் வருத்தம்
கொள்ள மாட்டேன்..
வானத்தின் வண்ணம் தானே
நிறம் மாறுகிறது..
நம் காதல் இல்லையே?
வண்ணம் என்ன ஆனால்
எனக்கென்ன? என்
எண்ணம் நீயாக
இருக்கும் போது..
ஏந்தி பிடிக்கிறேன் -
எண்ணையில் எரிந்த
தீபத்தை..
என்னையே எரிக்கிறான்
இறைவன் என்ன
சொல்வது..
என் காதலுக்கு சோதனை...
இரவுகள் இறந்து போனாலும்
உன்னால் என் கனவுகள்
வளர்ந்து கொண்டே தான்
இருக்கிறது..
கவலை கொள்ளாதே!!
காத்திருக்கிறேன்...
கதிரவனாக காலையில்
உன் முகத்தில் நான்
முழிக்க.....
-Sun Muga-
03-06-2013 21.26 PM
No comments:
Post a Comment