September 8, 2013

விதியின் விலாசம்

"காதல்" என்ற இல்லத்தில் குடியிருக்கிறோம், நாங்கள் இருவரும் " விதி" என்ற விலாசத்தில். அவள் விழிகளை பார்க்கும்போது, இந்த சூரியன் கூட மயங்கி ஒழிந்து கொள்வான் வெட்கத்தில், ஆம் அவளை கண்டதும் காதலித்தனா? என்று எனக்கு தெரியாது, அவள் கண்களை பார்க்கும் போதெல்லாம் அது என்னையே பிரதிபலித்ததால் என்னவோ காதலித்துவிட்டேன். அவள் விழியின் மெளன வார்த்தைகளால் வார்த்தைகள் அற்று நான் தவித்தேன். அந்நொடி இந்நாளில் கூட என் விழிகளில். காதல் என்ற காயம் பட்டது கத்தியை விட கூர்மையான அவள் விழியின் ஒளியால்.
அவள் செல்லும் இடமெல்லாம் நானும் சென்றேன் விழி ஒளி என்ற சூரிய ஒளியின் நிழலாக, வேறு வழியில்லாமல் காதலித்து விட்டாள் என் காதலி.
நடக்கின்ற பாதையெல்லாம் விரல் கோர்த்து நடந்தோம். நடக்கும் பாதை சரிதானா என்று தெரியாமல். நான் சற்று அதிகமாக அமைதியாக இருந்தாலும் என் விரல்களோ அவள் விரல்களை வருடிக் கொண்டே இருக்கும். உலகத்தில் காற்று எப்படி பூக்களை வருடுகிறதோ அவ்வாறே!!
கதைகள் நிறைய பேசும் இதழ்கள் அவளுக்கு மட்டும் சற்று அளவுக்கு அதிகமான அழகில். என்னோடு பயனிக்கும் நொடிகளில் கொஞ்சும் கொலுசின் ஒலியை போல் சிரித்துக் கொண்டே நடப்பாள். அவ்வாறு நடக்கும் போது சேர வேண்டிய இடம் வந்தாலும் பிரிய மனமில்லாமல் பிரிவோம் நாங்கள்.
என் மனதிற்கு இதமான பேச்சு அவள் அடிமனதில் இருந்தே எழும். அவ்வப்போது கொஞ்சம் தொட்டுப் பேசுவாள் என்னை அல்ல என் மனதினை. எதிர் எதிர் துருவங்களில் இருவரும் அமர்ந்து இருந்தாலும், சற்றே எதிர்பாராமல் பார்த்துக் கொண்டே இருக்கும் விழிகள் இருவருக்கும்.
அவள் என் அருகே அமரும் போது, என் கண்களை மூடிக் கொண்டு கை விரல்களை கட்டிப் போட்டாலும் அது தானாகவே அவள் இடையின் மீது அமர்ந்து கொள்கிறது. இதுவரை நாங்கள் இருவரும் பேசியதே இல்லை, அருகில் அமரும் போது மட்டும். ஆனாலும் என்னற்ற வார்த்தைகள் எங்கள் இல்லத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த ஒலிகள் தமிழ் எழுத்துகளில் இருக்கிறதா? என்று கூட எங்கள் இருவருக்கும் தெரியவில்லை, அது எங்களுக்கு தேவையும் இல்லை.
ஊடல் என்ற உணர்ச்சிகளை சற்று அதிகமாகவும், இருக்கமாகவும் கட்டிப் போட்டு வைத்து இருப்போம். அவ்வப்போது ஒரு சில அன்பான தொந்தரவுகளால்.
வெளியே வெளிச்சம் கொட்டிக் கிடந்தாலும், இந்த இருள் தான் எங்களுக்கு இருக்கமான ஒன்று. ஏன் என்றால் இருளில் கூட பிரகாசமாக தெரியும் விழிகள் இருவருக்கும் என்பதால். வேறு எதுவும் இங்கு சொல்வதற்கு இல்லை இந்த இருளில் மட்டும்.
என் உயிரும் உராய்ந்து போக நேரிட்டால் அது உன் மடியில் தான் உராய வேண்டும் என்று என் ஆசையை வெளிப் படுத்தினேன் அன்று. அழகான அவள் மடியில் என் தலையை சாய்த்து, என் முடிகளை கோதிக் கொண்டே, இந்த உடலும் உயிரும் வாழ்வது உன்னால் தான் அன்பே என்றால் அவள். அந்நேரங்களில் பனி மூட்டங்கள் போல் காட்சியளித்தோம் இருவரும். சட்டென்று அன்பான வெளிச்சம் வெளிபட, மின்னலாக மறைந்து போனம் இருவரும்.
இந்த உலகத்தில் எந்த வாசனை திரவமாக நீங்கள் மாற ஆசைப் படுகிறேர்கள் என்று எவரேனும் என்னிடம் கேட்டால், அழகாக, இனிமையாக, ஆழமாக சொல்வேன் அவள் உபயோகிக்கும் சோப்பின் வாசனையாக. இன்று கூட நான் வேறு சோப்பு உபயோக படுத்தினாலும் என் மேனியெங்கும் அவள் உபயோகித்த சோப்பின் வாசனையே மலர்கிறது.மலர்ந்த பூக்களை கூட சூட தேவையில்லை, அப்படி ஒரு தனி வாசம் அவள் மேல். வாசனையை நுகர்ந்து கொண்டே என் வீட்டின் கண்ணாடியை பார்த்தேன். அப்போது தான் தெரிந்தது என் இதழ்களை பார்க்கும் போது அவளது இதழ் பிரதிபலித்தது. இது என்ன மாய பிம்பம் என்று என்னவளிடம் கேட்டேன். அவளோ, ஆம். நான் தான் உன்னை கண்ட மயக்கத்தில் என்னை மறந்து போய் என் இதழ்களை மட்டும் உனக்கு கொடுத்து விட்டேன், அடுத்த முறை வரும் போது திருப்பி கொடுத்துவிடு என்றாள். அவளுக்கு சொந்தமான என் இதழை சிரித்துக் கொண்டே ரசித்தேன், என் வீட்டு கண்ணாடியில்.
நானும் அவளிடம் கேட்டேன், இதழ் என்ற சொல்லுக்கு அர்த்தம் "இதமான" என்று தானே பொருள், அப்படியென்றால் உன் உடம்பில் எது இதழ்? என்று. ஆனால் அவளோ சிரித்துச் சென்றாள். என் சிந்தையெல்லாம் சிந்தனை மேலோங்க, மறுபடியும் கேட்டேன் பதில் எங்கே? என்று. அவளோ அடே முட்டாள் உன் இதழ் பட்ட இடமெல்லாம் இதமாக மாறுகிறது. இப்போதைக்கு உன் இதழ் எங்கு இருக்கிறதோ அதுதான் இதழ் என்று கூறினாள். மென்மையின் அர்த்தம் அவளது இதழ். மெல்லிய ரேகைகள் பதித்த இதழ். அது என் இதழ்களை பார்க்கும் போது சற்று அதிகமாகவே தெரியும்.
என் உடம்பில் ஊரும் ஊடலைக் கண்டேன் அவள் அருகில் அமரும் போது. ஆனாலும் இதுவரை வெளிப்பட்டது இல்லை.
வாடிய பூ முகம் வடிந்து இருந்தாலும், காளியம்மன் போல் கண்களை வைத்துக் கொள்வாள். நான் கிளம்புகிறேன் என்று சொன்னாள். அப்போது தான் அவள் உடம்பில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் கதறும் சத்தம் எனக்கு மட்டும் கேட்கும். அவள் விரல்களோ சற்று நடுக்கத்தோடு கேட்கும் எப்போது உன் கை விரல் பிடிப்பேன் என்று. அவள் கொலுசு ஒலியோ உன் காதோடு சேர்ந்து நானும் வருகிறேன் என்று. அவள் விழிகளோ அடுத்த நொடி எப்போது பார்போம் என்று. அவளது மனமோ சற்று அளவுக்கு அதிகமாக மெளனமாக அழும் கண்ணீர் துளியோடு.
நானும் சென்று வருவேன் வேறு வழி இல்லாமல். வழியெங்கும் அவள் சிந்தனையில்.
இப்படி ஒவ்வொரு முறையும் நடக்கிறது சதியால் எழுதப்பட்ட விதியால். அந்த விதி தான் எங்களை சேர்த்து வைக்கும் என்றால் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் அந்த "விதியின் விலாசத்தை" என்னவளோடு நான் சேர...
-Sun Muga-
14-10-2011

Me + You = Lv

நினைக்க வேண்டிய காலங்களில்
நினைவை எட்டாத காரணத்தால்
நிஜத்தில் தவிக்கும் துயரம்-
நம் வாழ்க்கை!!
நம் விரல் கோர்த்து நடக்க வேண்டிய
தருணத்தில் நெருங்கி இருந்தும்
நண்பர்களாக விழகி
இருந்துவிட்டோம்!!
இன்று நெருங்கவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
நெருக்கத்தோடு நினைவுகளில் மட்டும் -
இருக்குமான இதயத்தோடு
தொலைவிலும் வாழ்கிறோம்!!
தொலைபேசியில் பேசும்போது
மனம் விட்டு பேசுகிறேன்-
அருகில் நீ இருக்கும்போது
மனதை தனியே தவிக்க விட்டு
தயங்குகிறேன்.
எழுதிய வார்த்தைகள் அனைத்தும்
நான் எழுதியவை தான்!
ஆனால் அவை உன்னால்
எழுதப் பட்டவை!
இவ் வரிகளுக்கு உயிர்
கொடுக்க நான் உயிர் விடலாம்
அதை விரும்பவில்லை இந்த  உயிர்
உன்னோடு வாழவும்
உன் உறவோடு சாகவும்
விரும்புகிறது!
விருப்பங்கள் என்றாவது நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு மட்டும் உயிர் வாழும் ; என் ஆத்மா - உன் உயிர் !
கவிதைகள் ;
உன் மனம் என்ன
கண்ணாடியோ!
நான் உன்னைப்
பார்க்கும் போதெல்லாம்
என்னை காட்டுகிறதே!
தூக்கமும் எதிரியானது இன்று -
நீ இங்கு நான் அங்கு என்பதால்!
ஓவியம் என்பது பேசாத "கவிதை"
உன் விழியைப் போல!!
கண்களால் ஓவியத்தை காணலாம்
இங்கு
உன் கண்களையே ஓவியமாக
பார்க்கிறேன்!!!
ரோஜாவைப் போல் என் காதலும்!
பார்த்துக் கொண்டே இருந்தேன்-
அது நீரில் இருக்கும்போது !!
உதிர்ந்துவிட்டது நான்
விரும்பி  எடுக்கும்போது!!
இதயம் துடிப்பது உன் நினைவால்
அதே இதயம் நடிப்பதோ உன் பிரிவால்!!
ஜனனம்! மரணம்!  இரண்டும்
ஒரு முறை தான் நிகழும்
எனவே என் பிள்ளையின்
ஜனனம்! என் மரணம்! இரண்டும்
உன் மடியில் தான்
நிகழ வேண்டும் என
விரும்பினேன்!!
மெல்லிய பார்வைக்குள்
மெதுவாக புதைந்தேன்!
மூச்சோடு மூச்சாக
கலந்தேன்!
மெளனத்தில் நுழைந்தேன்!
புன்னகையில் மலர்ந்தேன்!!
விரலோடு விரல் கோர்த்தேன்!!
மார்போடு தலை சாய்த்தேன் !!
அனைத்தும் கனவுகளில் மட்டும்!
இப்பொழுது காத்திருக்கிறேன்!
உன் பாதம் படுவதற்காக மண்ணாக!!
எனக்கும் ஆசை வந்தது
தூரங்கள் நீளலாமே என்று!!
உன்னோடு நடக்கையில்!
என்றும் உன் நினைவோடு
நிழலாக வாழும்
ஒரு பிரஜை...
-Sun-

September 6, 2013

01-09-2013

நான் எப்படி பட்டவன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். எதை யோசிக்கிறேன். எதை நினைக்கிறேன் என்றும் கூட. என்னைப் பற்றி அதிகம் யோசிக்க கூட இன்று நேரம் இல்லை. ஆனால் அன்று இருந்தது அதிக நேரம் அவளோடு கழிக்க. காலம் கழிந்துவிட்டது. என் கனவுகளையும் கலைத்துவிட்டது. கண்களால் பேசும் காலமும் கண்ணில் படாமல் எங்கோ ஒழிந்து கொண்டது. ஒழிந்து கொண்ட காலத்தை எண்ணி இன்றும் இதயம் துடிக்கிறது. என்னவோ நேற்று இரவு திடிரென்று இதயத்தில் வலி. ஆம் நெஞ்சுவலி. வேகமாக படுக்கை அறையில் இருந்து எழுந்தேன். உடையை மாற்றிக் கொண்டேன். வேகமாக நடக்கத் தொடங்கினேன் அந்த கடற்கரை நோக்கி. எனக்கு பிடித்தமான பாடல்களை கேட்ட படி. காலில் வலி ஏற ஏற நெஞ்சின் வலி குறைந்தது.ஆற அமர்ந்து பாடல்கள் கேட்டபடி காற்றைக் கையில் பிடித்து, கண்களை மூடிய படி ஒரு அரை மணி நேரம் கழித்தேன்.  மெல்ல அவளின் நினைவை என் நெஞ்சில் அசைபோட்டேன்.
-Sun Muga-
02-09-2013 21.20 PM

பருவ நினைவுகள்

முதல் முதலில் நான்
எட்டிப் பார்த்த
ஜன்னல் அது
என் வீட்டில்
ஜன்னல் இல்லை.
வீட்டுக் கதவையே
ஜன்னலாக பாவித்து
எட்டிப் பார்த்தேன்.
கல்லூரி படிக்கும்
பெண்னை ரகசியமாக
கூட்டிச் செல்கிறாள்
அவள் அம்மா - என்
கண்ணில் படாமல்.
நான் பார்த்துவிட்டேன்
அந்த பெண்ணின்
கண்கள் என்னைப்
பார்த்தபோது.
எனக்கு தெரியவில்லை
அவள் பெயர், என்ன
படிக்கிறாள் என்று கூட.
இன்றும் கான ஆசை
ஆசுவாசமாக தேடி அலைந்த
அந்த கண்களை- அவள்
காத்திருக்கிறாளோ
இல்லையோ,
நான் காத்திருந்தேன்
ஒரு நாள் - அந்த ஒரு
நாள் ஆம் வாரத்தில்
ஒரு நாள் அவள் Colour
Dress போட,
எத்தனை அழகு,
உடையும் நான் பார்த்த
பிறகு அவளுள் பிறந்த அந்த
நடையும்.
இனி என் வாழ்வில்
நடக்க சாத்தியம் இல்லை.
-Sun Muga-
06-09-2013 20.02 PM

September 3, 2013

31-08-2013

கண்ணில் கண்ணீரோடு
என் கவிதை ஒன்று
வார்த்தைகளை
வடித்தது இன்று.
கவிதையே உனக்கு
ஆறுதல் சொல்ல
என் மனம் அலைகிறது.
ஆனால் ஆறாகி போன
கண்ணீரில் கரை
எங்கு இருக்கிறது
என்று தான் தெரியவில்லை.
-Sun Muga-
31-08-2013 22.00

சூரியன்

இமயம் போல்
இதயம் கொண்டவனே
இறகு போன்ற
இதழையும் உண்டவனே
நீ உதித்த தினம்
இன்று என் சூரியனே.
வருடங்கள் வளர வளர
உன் வயது ஏறினாலும்
என்னை அனைத்து
உன் வயதை
குறைத்துக் கொண்டவனே.
உனக்காக வாழ்ந்தேன்.
உன்னோடு எழுந்தேன்.
நீ என் உயிர் .
உயிரிலும் என்
உணர்வு நீ.
நீ மட்டும் தளிர்.
தளராமல் நான் இருப்பேன்.
தைரியம் சொல்.
முத்தத்தின் வழியாக
நான் வாழ.
நீ வாழ நான்
வேண்டுகிறேன்
நான் வேண்டுமென்று
நீ வாழ்கிறாய்.
என்ன ஒரு வாழ்க்கை?
ஆம் ஒரு வாழ்க்கை
தான். நம் இருவருக்கும்.
இதழ் கோர்த்தப்படி,
கனவுகளை சுமந்தபடி,
எழுந்து பார்த்தால்
கண்ணீர் கசிந்தபடி.
இன்று
காதல் கரைந்த நாள்,
கண்ணீர் பெருகிய நாள்,
வாழ்வை பிரட்டிய நாள்,
மீத நாட்களை மிரட்டிய நாள்.
கொடுமையான நாள்.
ஆம் இன்று என் பிறந்த நாள்.
-Sun Muga-
30-08-2013 9.00 PM

September 1, 2013

அழிசோடை

சிக்கி தவிக்கும்
அறிவு இவனுள்
அதிக அன்பு
கொண்டவன்
ஆனால் அன்பால்
அறிவை இழந்தவன்.

எத்தனையோ அனுபவம்
இவன் மனதில்
தெளிவான (தேவையில்லாத)
பேச்சு .

கோபம் கொள்வான்.
கோபம் கொள்ள வைப்பான்.

இவன் மனம் இவன்
மட்டுமே அறிவான்.

என் நண்பர்களில்
சிறந்த நண்பர்களில்
இவனும் ஒருவன்.

ஆனால் இவனின் தனித்தன்மை
என்னை இவன் மீது அதிகம்
ஈடுபடுத்திக் கொண்டது.

கோபம் கொள்ள காரணம்
தேடுவான்.
ஒரு நாளில் நானே
தேடி இருக்கிறேன்
இவன் யார்? எதற்கு
எடுத்தாலும் கோபம்
கொள்கிறானே என்று.

ஒரு வேளை அது தான்
அன்போ?

கோபத்தை வெளிப்படுத்தவும்
தைரியம் வேண்டும்.
ஆக இவன் தைரியசாலியோ?

எங்க எந்த Topic பேசினாலும்
ஒரு உதாரணம் சொல்கிறானே.
ஒரு வேளை புத்திசாலியோ ?

மனதில் பெரும்
பங்கு பாசம் இருக்கிறதே
ஒரு வேளை
பொறுப்பானவனோ?

தினம் ஒரு வேடம்.
யாரை வேட்டையாடுகிறான்?
ஒரு வேளை
அவளோ?

கல்லூரி படிக்கும் போது எத்தனை கேலி, விளையாட்டுத்தனமான பேச்சு, பாட்டு.

நாம் பட்ட கஷ்டங்கள் இன்று நினைவுகள் அந்த பெங்களூரு காம்ப்.

மூடியபனியில் விளையாடிய நொடிகள், த்யரி எப்படா முடியும்ன்னு தூங்கிய பொழுதுகள், அந்த கயிறு நீ துணிச்சலுடன் ஏறும் போது நான் பார்த்த பார்வைகள், புல் புதரில் புதைந்து லெமன் ஜீஸ் குடிச்சதும், வீட்டுக்கு போன் பேசிட்டு லேட்டா வந்து punishment வாங்குனதுன்னு, அங்கு நாம் கழித்த பொழுதுகள் இன்னும் எத்தனையோ என் நினைவுகளில்.

இன்னும் கண்கள் கண்டு கொண்டே இருக்கிறது அங்கு எடுத்த போட்டோ வழியாக.

என்னை பொறுத்தவரை
நீ ஒரு வைரம்
என்னால் உன்னை
பட்டை தீட்ட முடியாது.
எனக்கு அந்த அளவிற்கு
அறிவும் இல்லை.
உன்னை நீயே
பட்டை தீட்டிக் கொள்
என் மீதான பற்றையும்
அப்படியே அதனுள்
புதைத்து வைத்துக் கொள்.

உன்னை மீறி
இன்னொருவன் உன்னுள்ளே
இருக்கிறான்.

-Sun Muga-
01-09-2013 23.17 PM