நான் எப்படி பட்டவன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். எதை யோசிக்கிறேன். எதை நினைக்கிறேன் என்றும் கூட. என்னைப் பற்றி அதிகம் யோசிக்க கூட இன்று நேரம் இல்லை. ஆனால் அன்று இருந்தது அதிக நேரம் அவளோடு கழிக்க. காலம் கழிந்துவிட்டது. என் கனவுகளையும் கலைத்துவிட்டது. கண்களால் பேசும் காலமும் கண்ணில் படாமல் எங்கோ ஒழிந்து கொண்டது. ஒழிந்து கொண்ட காலத்தை எண்ணி இன்றும் இதயம் துடிக்கிறது. என்னவோ நேற்று இரவு திடிரென்று இதயத்தில் வலி. ஆம் நெஞ்சுவலி. வேகமாக படுக்கை அறையில் இருந்து எழுந்தேன். உடையை மாற்றிக் கொண்டேன். வேகமாக நடக்கத் தொடங்கினேன் அந்த கடற்கரை நோக்கி. எனக்கு பிடித்தமான பாடல்களை கேட்ட படி. காலில் வலி ஏற ஏற நெஞ்சின் வலி குறைந்தது.ஆற அமர்ந்து பாடல்கள் கேட்டபடி காற்றைக் கையில் பிடித்து, கண்களை மூடிய படி ஒரு அரை மணி நேரம் கழித்தேன். மெல்ல அவளின் நினைவை என் நெஞ்சில் அசைபோட்டேன்.
-Sun Muga-
02-09-2013 21.20 PM
-Sun Muga-
02-09-2013 21.20 PM
No comments:
Post a Comment