September 8, 2013

Me + You = Lv

நினைக்க வேண்டிய காலங்களில்
நினைவை எட்டாத காரணத்தால்
நிஜத்தில் தவிக்கும் துயரம்-
நம் வாழ்க்கை!!
நம் விரல் கோர்த்து நடக்க வேண்டிய
தருணத்தில் நெருங்கி இருந்தும்
நண்பர்களாக விழகி
இருந்துவிட்டோம்!!
இன்று நெருங்கவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
நெருக்கத்தோடு நினைவுகளில் மட்டும் -
இருக்குமான இதயத்தோடு
தொலைவிலும் வாழ்கிறோம்!!
தொலைபேசியில் பேசும்போது
மனம் விட்டு பேசுகிறேன்-
அருகில் நீ இருக்கும்போது
மனதை தனியே தவிக்க விட்டு
தயங்குகிறேன்.
எழுதிய வார்த்தைகள் அனைத்தும்
நான் எழுதியவை தான்!
ஆனால் அவை உன்னால்
எழுதப் பட்டவை!
இவ் வரிகளுக்கு உயிர்
கொடுக்க நான் உயிர் விடலாம்
அதை விரும்பவில்லை இந்த  உயிர்
உன்னோடு வாழவும்
உன் உறவோடு சாகவும்
விரும்புகிறது!
விருப்பங்கள் என்றாவது நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு மட்டும் உயிர் வாழும் ; என் ஆத்மா - உன் உயிர் !
கவிதைகள் ;
உன் மனம் என்ன
கண்ணாடியோ!
நான் உன்னைப்
பார்க்கும் போதெல்லாம்
என்னை காட்டுகிறதே!
தூக்கமும் எதிரியானது இன்று -
நீ இங்கு நான் அங்கு என்பதால்!
ஓவியம் என்பது பேசாத "கவிதை"
உன் விழியைப் போல!!
கண்களால் ஓவியத்தை காணலாம்
இங்கு
உன் கண்களையே ஓவியமாக
பார்க்கிறேன்!!!
ரோஜாவைப் போல் என் காதலும்!
பார்த்துக் கொண்டே இருந்தேன்-
அது நீரில் இருக்கும்போது !!
உதிர்ந்துவிட்டது நான்
விரும்பி  எடுக்கும்போது!!
இதயம் துடிப்பது உன் நினைவால்
அதே இதயம் நடிப்பதோ உன் பிரிவால்!!
ஜனனம்! மரணம்!  இரண்டும்
ஒரு முறை தான் நிகழும்
எனவே என் பிள்ளையின்
ஜனனம்! என் மரணம்! இரண்டும்
உன் மடியில் தான்
நிகழ வேண்டும் என
விரும்பினேன்!!
மெல்லிய பார்வைக்குள்
மெதுவாக புதைந்தேன்!
மூச்சோடு மூச்சாக
கலந்தேன்!
மெளனத்தில் நுழைந்தேன்!
புன்னகையில் மலர்ந்தேன்!!
விரலோடு விரல் கோர்த்தேன்!!
மார்போடு தலை சாய்த்தேன் !!
அனைத்தும் கனவுகளில் மட்டும்!
இப்பொழுது காத்திருக்கிறேன்!
உன் பாதம் படுவதற்காக மண்ணாக!!
எனக்கும் ஆசை வந்தது
தூரங்கள் நீளலாமே என்று!!
உன்னோடு நடக்கையில்!
என்றும் உன் நினைவோடு
நிழலாக வாழும்
ஒரு பிரஜை...
-Sun-

No comments:

Post a Comment