September 8, 2013

விதியின் விலாசம்

"காதல்" என்ற இல்லத்தில் குடியிருக்கிறோம், நாங்கள் இருவரும் " விதி" என்ற விலாசத்தில். அவள் விழிகளை பார்க்கும்போது, இந்த சூரியன் கூட மயங்கி ஒழிந்து கொள்வான் வெட்கத்தில், ஆம் அவளை கண்டதும் காதலித்தனா? என்று எனக்கு தெரியாது, அவள் கண்களை பார்க்கும் போதெல்லாம் அது என்னையே பிரதிபலித்ததால் என்னவோ காதலித்துவிட்டேன். அவள் விழியின் மெளன வார்த்தைகளால் வார்த்தைகள் அற்று நான் தவித்தேன். அந்நொடி இந்நாளில் கூட என் விழிகளில். காதல் என்ற காயம் பட்டது கத்தியை விட கூர்மையான அவள் விழியின் ஒளியால்.
அவள் செல்லும் இடமெல்லாம் நானும் சென்றேன் விழி ஒளி என்ற சூரிய ஒளியின் நிழலாக, வேறு வழியில்லாமல் காதலித்து விட்டாள் என் காதலி.
நடக்கின்ற பாதையெல்லாம் விரல் கோர்த்து நடந்தோம். நடக்கும் பாதை சரிதானா என்று தெரியாமல். நான் சற்று அதிகமாக அமைதியாக இருந்தாலும் என் விரல்களோ அவள் விரல்களை வருடிக் கொண்டே இருக்கும். உலகத்தில் காற்று எப்படி பூக்களை வருடுகிறதோ அவ்வாறே!!
கதைகள் நிறைய பேசும் இதழ்கள் அவளுக்கு மட்டும் சற்று அளவுக்கு அதிகமான அழகில். என்னோடு பயனிக்கும் நொடிகளில் கொஞ்சும் கொலுசின் ஒலியை போல் சிரித்துக் கொண்டே நடப்பாள். அவ்வாறு நடக்கும் போது சேர வேண்டிய இடம் வந்தாலும் பிரிய மனமில்லாமல் பிரிவோம் நாங்கள்.
என் மனதிற்கு இதமான பேச்சு அவள் அடிமனதில் இருந்தே எழும். அவ்வப்போது கொஞ்சம் தொட்டுப் பேசுவாள் என்னை அல்ல என் மனதினை. எதிர் எதிர் துருவங்களில் இருவரும் அமர்ந்து இருந்தாலும், சற்றே எதிர்பாராமல் பார்த்துக் கொண்டே இருக்கும் விழிகள் இருவருக்கும்.
அவள் என் அருகே அமரும் போது, என் கண்களை மூடிக் கொண்டு கை விரல்களை கட்டிப் போட்டாலும் அது தானாகவே அவள் இடையின் மீது அமர்ந்து கொள்கிறது. இதுவரை நாங்கள் இருவரும் பேசியதே இல்லை, அருகில் அமரும் போது மட்டும். ஆனாலும் என்னற்ற வார்த்தைகள் எங்கள் இல்லத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த ஒலிகள் தமிழ் எழுத்துகளில் இருக்கிறதா? என்று கூட எங்கள் இருவருக்கும் தெரியவில்லை, அது எங்களுக்கு தேவையும் இல்லை.
ஊடல் என்ற உணர்ச்சிகளை சற்று அதிகமாகவும், இருக்கமாகவும் கட்டிப் போட்டு வைத்து இருப்போம். அவ்வப்போது ஒரு சில அன்பான தொந்தரவுகளால்.
வெளியே வெளிச்சம் கொட்டிக் கிடந்தாலும், இந்த இருள் தான் எங்களுக்கு இருக்கமான ஒன்று. ஏன் என்றால் இருளில் கூட பிரகாசமாக தெரியும் விழிகள் இருவருக்கும் என்பதால். வேறு எதுவும் இங்கு சொல்வதற்கு இல்லை இந்த இருளில் மட்டும்.
என் உயிரும் உராய்ந்து போக நேரிட்டால் அது உன் மடியில் தான் உராய வேண்டும் என்று என் ஆசையை வெளிப் படுத்தினேன் அன்று. அழகான அவள் மடியில் என் தலையை சாய்த்து, என் முடிகளை கோதிக் கொண்டே, இந்த உடலும் உயிரும் வாழ்வது உன்னால் தான் அன்பே என்றால் அவள். அந்நேரங்களில் பனி மூட்டங்கள் போல் காட்சியளித்தோம் இருவரும். சட்டென்று அன்பான வெளிச்சம் வெளிபட, மின்னலாக மறைந்து போனம் இருவரும்.
இந்த உலகத்தில் எந்த வாசனை திரவமாக நீங்கள் மாற ஆசைப் படுகிறேர்கள் என்று எவரேனும் என்னிடம் கேட்டால், அழகாக, இனிமையாக, ஆழமாக சொல்வேன் அவள் உபயோகிக்கும் சோப்பின் வாசனையாக. இன்று கூட நான் வேறு சோப்பு உபயோக படுத்தினாலும் என் மேனியெங்கும் அவள் உபயோகித்த சோப்பின் வாசனையே மலர்கிறது.மலர்ந்த பூக்களை கூட சூட தேவையில்லை, அப்படி ஒரு தனி வாசம் அவள் மேல். வாசனையை நுகர்ந்து கொண்டே என் வீட்டின் கண்ணாடியை பார்த்தேன். அப்போது தான் தெரிந்தது என் இதழ்களை பார்க்கும் போது அவளது இதழ் பிரதிபலித்தது. இது என்ன மாய பிம்பம் என்று என்னவளிடம் கேட்டேன். அவளோ, ஆம். நான் தான் உன்னை கண்ட மயக்கத்தில் என்னை மறந்து போய் என் இதழ்களை மட்டும் உனக்கு கொடுத்து விட்டேன், அடுத்த முறை வரும் போது திருப்பி கொடுத்துவிடு என்றாள். அவளுக்கு சொந்தமான என் இதழை சிரித்துக் கொண்டே ரசித்தேன், என் வீட்டு கண்ணாடியில்.
நானும் அவளிடம் கேட்டேன், இதழ் என்ற சொல்லுக்கு அர்த்தம் "இதமான" என்று தானே பொருள், அப்படியென்றால் உன் உடம்பில் எது இதழ்? என்று. ஆனால் அவளோ சிரித்துச் சென்றாள். என் சிந்தையெல்லாம் சிந்தனை மேலோங்க, மறுபடியும் கேட்டேன் பதில் எங்கே? என்று. அவளோ அடே முட்டாள் உன் இதழ் பட்ட இடமெல்லாம் இதமாக மாறுகிறது. இப்போதைக்கு உன் இதழ் எங்கு இருக்கிறதோ அதுதான் இதழ் என்று கூறினாள். மென்மையின் அர்த்தம் அவளது இதழ். மெல்லிய ரேகைகள் பதித்த இதழ். அது என் இதழ்களை பார்க்கும் போது சற்று அதிகமாகவே தெரியும்.
என் உடம்பில் ஊரும் ஊடலைக் கண்டேன் அவள் அருகில் அமரும் போது. ஆனாலும் இதுவரை வெளிப்பட்டது இல்லை.
வாடிய பூ முகம் வடிந்து இருந்தாலும், காளியம்மன் போல் கண்களை வைத்துக் கொள்வாள். நான் கிளம்புகிறேன் என்று சொன்னாள். அப்போது தான் அவள் உடம்பில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் கதறும் சத்தம் எனக்கு மட்டும் கேட்கும். அவள் விரல்களோ சற்று நடுக்கத்தோடு கேட்கும் எப்போது உன் கை விரல் பிடிப்பேன் என்று. அவள் கொலுசு ஒலியோ உன் காதோடு சேர்ந்து நானும் வருகிறேன் என்று. அவள் விழிகளோ அடுத்த நொடி எப்போது பார்போம் என்று. அவளது மனமோ சற்று அளவுக்கு அதிகமாக மெளனமாக அழும் கண்ணீர் துளியோடு.
நானும் சென்று வருவேன் வேறு வழி இல்லாமல். வழியெங்கும் அவள் சிந்தனையில்.
இப்படி ஒவ்வொரு முறையும் நடக்கிறது சதியால் எழுதப்பட்ட விதியால். அந்த விதி தான் எங்களை சேர்த்து வைக்கும் என்றால் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் அந்த "விதியின் விலாசத்தை" என்னவளோடு நான் சேர...
-Sun Muga-
14-10-2011

No comments:

Post a Comment