September 1, 2013

அழிசோடை

சிக்கி தவிக்கும்
அறிவு இவனுள்
அதிக அன்பு
கொண்டவன்
ஆனால் அன்பால்
அறிவை இழந்தவன்.

எத்தனையோ அனுபவம்
இவன் மனதில்
தெளிவான (தேவையில்லாத)
பேச்சு .

கோபம் கொள்வான்.
கோபம் கொள்ள வைப்பான்.

இவன் மனம் இவன்
மட்டுமே அறிவான்.

என் நண்பர்களில்
சிறந்த நண்பர்களில்
இவனும் ஒருவன்.

ஆனால் இவனின் தனித்தன்மை
என்னை இவன் மீது அதிகம்
ஈடுபடுத்திக் கொண்டது.

கோபம் கொள்ள காரணம்
தேடுவான்.
ஒரு நாளில் நானே
தேடி இருக்கிறேன்
இவன் யார்? எதற்கு
எடுத்தாலும் கோபம்
கொள்கிறானே என்று.

ஒரு வேளை அது தான்
அன்போ?

கோபத்தை வெளிப்படுத்தவும்
தைரியம் வேண்டும்.
ஆக இவன் தைரியசாலியோ?

எங்க எந்த Topic பேசினாலும்
ஒரு உதாரணம் சொல்கிறானே.
ஒரு வேளை புத்திசாலியோ ?

மனதில் பெரும்
பங்கு பாசம் இருக்கிறதே
ஒரு வேளை
பொறுப்பானவனோ?

தினம் ஒரு வேடம்.
யாரை வேட்டையாடுகிறான்?
ஒரு வேளை
அவளோ?

கல்லூரி படிக்கும் போது எத்தனை கேலி, விளையாட்டுத்தனமான பேச்சு, பாட்டு.

நாம் பட்ட கஷ்டங்கள் இன்று நினைவுகள் அந்த பெங்களூரு காம்ப்.

மூடியபனியில் விளையாடிய நொடிகள், த்யரி எப்படா முடியும்ன்னு தூங்கிய பொழுதுகள், அந்த கயிறு நீ துணிச்சலுடன் ஏறும் போது நான் பார்த்த பார்வைகள், புல் புதரில் புதைந்து லெமன் ஜீஸ் குடிச்சதும், வீட்டுக்கு போன் பேசிட்டு லேட்டா வந்து punishment வாங்குனதுன்னு, அங்கு நாம் கழித்த பொழுதுகள் இன்னும் எத்தனையோ என் நினைவுகளில்.

இன்னும் கண்கள் கண்டு கொண்டே இருக்கிறது அங்கு எடுத்த போட்டோ வழியாக.

என்னை பொறுத்தவரை
நீ ஒரு வைரம்
என்னால் உன்னை
பட்டை தீட்ட முடியாது.
எனக்கு அந்த அளவிற்கு
அறிவும் இல்லை.
உன்னை நீயே
பட்டை தீட்டிக் கொள்
என் மீதான பற்றையும்
அப்படியே அதனுள்
புதைத்து வைத்துக் கொள்.

உன்னை மீறி
இன்னொருவன் உன்னுள்ளே
இருக்கிறான்.

-Sun Muga-
01-09-2013 23.17 PM

No comments:

Post a Comment