September 12, 2015

ஆயுள் ரேகை

காலம் வந்தால்
உதிர்ந்து விடும்
இலைகளுக்கு
எ(ஏ)து
ஆயுள் ரேகை...

கேள்விகள்

கண்ணீர் முட்டும்
கானக இரவில்
கண்ணீரை மீறி
கவிதையே
என் கண்ணையும்
நனைக்கும்...

எது
என் வாழ்க்கை?

எது
என் துயரம்?

எது
என் இரவு?

எது
என் விடியல்?

எது
என் பாதை?

எது
என் பயணம்?

என்ற கேள்விகளே
எது
நான் என்று
சொல்லக் கூடும்...

-SunMuga-
11-09-2015 22.26 PM

September 9, 2015

பணி

பணி நிமித்தமாக
இரவில்
தூங்க முடிவதில்லை,

இரவு முடிந்தும்
பணி
இன்னும் கண்களில்
முடியாமல் காத்திருக்கிறது

பணி
இப்போது
கண்களில் இருந்து
கண்ணீராக
கடமையை தவற விட்டு
இரவுக்காக
காத்துருக்கிறது....   

-SunMuga-
09-09-2015 22.40 PM

கடமை கண்ணியம்

என்
தீராக் காயங்களின்
மறுபக்கத்தில்
உன்
கடமையின்
கண்ணியம் தெரிகிறது,

கடமை மட்டுமே
தெரிந்த எனக்கு
என் கண்ணியத்தின்
தோல்வியாக
இன்னொரு பக்கம்
தெரிகிறது...

-SunMuga-
09-09-2015 22.30 PM

குறிப்புகள்

எந்த
குறிப்புகள் உன்னை
எனக்கு
மனிதன் என்று
அடையாளம் காட்டியது?

எழுதி வைத்த
அந்த குறிப்பை,
இப்போது
இந்த இரவில்
தேடிக்
கொண்டு இருக்கிறேன்!

நீ எப்போதோ!
கிழித்து
எறிந்து விட்டது தெரியாமல்..

-SunMuga-
09-09-2015 22.13 PM

மனிதன்

மனிதன் என்று
நான்
உன்னை நினைத்தால்
நீ மிதித்த
மண்ணும்
என்னைப் பார்த்து சிரிக்கும்
இவனா?
மனிதன் என்று.

மனிதன் என்று
நான்
உன்னைப் பார்த்தால்
நீ பார்க்கும்
கண்ணாடியும்
கண்ணீர் விடும்
இவனா?
மனிதன் என்று...

மனிதன் என்று
நான்
உன்னை நினைத்தால்
கழிவறையில்
நீ கழித்த மூத்திரத்தின்
வாடை
என் மனம் மீது அடிக்கும்
இவனா?
மனிதன் என்று...    

மனிதன் மடிந்தால்
புழுக்களுக்கு
உணவு அவன்..

நான் வாழும்
இந்த மண்ணில்
புழுவாக
என்னை உண்ணும் போது
நீ எப்படி
மனிதன் ஆவாய்....

-SunMuga-
09-09-2015 22.25 PM

September 8, 2015

2015 கவிதைகள் 1231 to 1240

சந்திக்க வேண்டிய
கண்களும்
காலங்களும்
இந்த அற்ப காலத்தை மீறி
உன்னைப் பற்றி
சிந்தித்துக்
கொண்டு இருக்கிறது...    1231

எந்த வடிவத்தில்
நீ
என்னுள் நிறைந்துள்ளாய்
என்று
யோசிக்கும் கனமொன்றில்
கண்ணீர் மட்டுமே விடை..   1232

காதல் விதை
கனிவது என்னவோ
காலத்தால் தான்
காலம் தவறி
விதைத்தது யார் தவறு!!   1233

ஆன்மா அலையுறும்
அந்தரத்தில் தொங்கும்
இரவு கயிற்றில்,
அருகே நீ இல்லாத போது.. 1234

வலி முற்றிய
இரவெல்லாம்
உன்னை அடையும்
வழி தெரியாமல்
நானும்
வழியெங்கும்
தவித்துக் கொண்டு
இருக்கிறேன்...   1235

ரசிக்க வேண்டிய
இரவுகளும்
ரசிக்க வேண்டிய
கவிதைகளும்
ரகசியமாய்
கரைந்து விடுகிறது
கவிதையின் வழியே
இரவாக...    1236

இன்னும்
இன்பம் குறைந்து
இரவை இடம் மாற
வைக்கிறது
இந்த துன்பம்
நிறைந்த காலம்...   1237

காலத்தை வெல்ல
காலையில் இருந்து
போராட்டம்
காதல் இருப்பதால்
இன்னும்
உயிர் இருக்கிறது
இரவில் வாழ....      1238

நிலவை
நீ சிரித்து
வசீகரத்தாய்
நிலவு இருளில் கலந்து
என் உடலில்
உன்னை தேடி அலைகிறது.. 1239

என் பயத்தை
சொல்லிவிட
பகிரங்க முத்தம்
பகிர்ந்து கொள்ள வேண்டுமோ!!  1240

September 7, 2015

எழுத முடியாத

எழுத முடியாத
இரவில்
உணர்ந்து கொள்கிறேன்
ஒரு பிணத்தின்
வாடை
என் மீது அடிப்பதாக...

-SunMuga-
07-09-2015 22.45 PM

September 3, 2015

2015 கவிதைகள்1221 to 1230

என்னில்
எப்பொழுது உடையும்
உன் காதலின் நீர்க்குமிழி... 1221

உருகும் இரவில்
உன் உருவம் தேடுகிறது
என் இதயம்
உன் கவிதையின் வழி...   1222

நிலவை மிஞ்சும்
ஒளி என்ற
உன் பார்வை
என்னையும் கெஞ்ச வைக்கிறது
கொஞ்சமேனும்
உன்னை கொஞ்ச
வேண்டும் என்று....  1223

கனவென்ற
கடவுச் சொல் தான்
நம் காதல்
இருப்பிடத்தின் திறவுகோல்.. 1224

நிசப்தம் நிரம்பிய
இரவுச் சாலையில்
நித்தம்
உனக்காய் காத்திருக்கிறேன்
என் கவிதையின் வழியே
பல வண்ண ஒளிகளை
வழியாய் வழிய விட்ட படி...  1225

மரணத்தின் வாயில் வரை
சென்ற போதும்
என் காதல்
உன் எண்ணத்தின்
கண்ணில் மின்னுவது
தான் என் பாக்கியம்...   1226

நம் மரணத்தின் பதிவு
நம் காதலின் பிரிவு தானே!  1227

இத்தனை காலம்
கடந்த பின்னும்
இன்னும்
நம் காதலின் நொடிகளை
நம் இருவரால்
கடக்க முடிவதில்லை...   1228

இரவை மீண்டும்
இரவாக்க வேண்டும்
உன்னோடு
இமையும், இதழும் மூடி...   1229

தூக்கம் வராத
இரவுகளில்
நான்
உன்னைப் பற்றி
எழுதுவதில்லை

உன்னைப் பற்றி
எழுதாத இரவில்
எனக்கு தூக்கமும்
வருவதில்லை....     1230

September 2, 2015

2015 கவிதைகள் 1211 to 1220

நீ இடும் புள்ளியின்
வழியே
கோலமாய்
நானும் உருவெடுப்பேன்
உன் இதயத்தில்...    1211

பேச்சுக்கே இடமில்லை
மூச்சுக் காற்று
உன்னை நினைக்கும் போது
கண்கள்
உன்னை அனைக்கும் போது.. 1212

ஒரு இரவும்
உன்னோடு
உறங்காத போதும்
உள்ளம் உறங்குவது
உன் முத்தத்தோடு
என் அன்பே!!      1213

காதலில்
தனித்து வீசும்
பெருங்கடலின் சோகம்
காற்றிலும்
இரவிலும்
இன்னும் அதிகமாக...  1214

முல்லை மலரும்
பொழுதுகளில் எல்லாம்
எல்லையற்ற
முத்தம் விரியும்.....    1215

சுடர் விழி கண்ணின்
ஒளியை கொண்டு
விரியும் முல்லைப் பூவில்
சூரியனின்
வாசம் வீசுகிறது..1216

வெறுமையில் அலையும்
உள்ளத்தை
என் பொறுமை கொண்டு
காக்க வைக்கிறேன் உயிரே
உன்னை நிச்சயம்
பார்ப்பேன்
என்ற நம்பிக்கையில்...   1217

உன் விரல் தழுவலின்
மறு உருவகம் தான்
இக்கவிதைகள் எனக்கு..  1218

இருளை தழுவும்
இரவை போல
நான் உன் இதழை
தழுவி வாழ்கிறேன்...   1219

மின்னி மறையும்
மின்னல் போல
உன்னை எண்ணி
நானும் என்
நாட்களை மறக்கிறேன்..   1220

2015 கவிதைகள் 1201 to 1210

தனித்த இரவில்
எனக்கான இசையாய்
உன் முத்தங்களும்
எனக்கான வரியாய்
உன் கவிதைகளுமே
என்னோடு இருக்கிறது...   1201

இரவின் கருவில்
நீ
என்றுமே
என் குழந்தை தான்....     1202

என் கவிதைகளுக்கு
வடிவம் கொடுக்கிறது
உன் கருவிழி
கருவிழி வாசிக்கும் போது
உயிரும் கொடுக்கிறது
அவ்வடிவங்களுக்கு..     1203

மழை கூடிய
இரவெல்லாம்
என் மனதில்
இன்னும் பொழிகிறது
உன் முத்தம்....          1204

தேவதை தேடும்
இரவு நான்
இரவில் நான் தேடும்
தேவதை நீ....          1205

சிறகாய்
முத்தம் சுமந்து
என்னை வலம் வரும்
இரவு தேவதை நீ....   1206

சிறகு விரித்து
இரவை சுற்றுகிறேன்
சிறகின் வர்ணங்களாய்
உன் முத்தம்
என்னை அழகூட்டும் போது..  1207

இடம் மாறா இரவில்
உன் இதழை மீறாமல்
இன்னும் நகர்கிறது
என் இரவு....     1208

ஒரு பகலுக்கும்
இன்னொரு இரவு
இருக்கிறதாம்
இரவாய்
நீ என்னுள்
இருப்பதை போல...   1209      

என் நெஞ்சத்தின்
பசியை தீர்க்க
உன் ஆழப் பார்வை போதும்
என் ஆழப் பார்வையின்
பசியை தீர்க்க
உன் அழகான முத்தம்
வேண்டும்
இன்னும் ஆழமாக...    1210