என்னில்
எப்பொழுது உடையும்
உன் காதலின் நீர்க்குமிழி... 1221
உருகும் இரவில்
உன் உருவம் தேடுகிறது
என் இதயம்
உன் கவிதையின் வழி... 1222
நிலவை மிஞ்சும்
ஒளி என்ற
உன் பார்வை
என்னையும் கெஞ்ச வைக்கிறது
கொஞ்சமேனும்
உன்னை கொஞ்ச
வேண்டும் என்று.... 1223
கனவென்ற
கடவுச் சொல் தான்
நம் காதல்
இருப்பிடத்தின் திறவுகோல்.. 1224
நிசப்தம் நிரம்பிய
இரவுச் சாலையில்
நித்தம்
உனக்காய் காத்திருக்கிறேன்
என் கவிதையின் வழியே
பல வண்ண ஒளிகளை
வழியாய் வழிய விட்ட படி... 1225
மரணத்தின் வாயில் வரை
சென்ற போதும்
என் காதல்
உன் எண்ணத்தின்
கண்ணில் மின்னுவது
தான் என் பாக்கியம்... 1226
நம் மரணத்தின் பதிவு
நம் காதலின் பிரிவு தானே! 1227
இத்தனை காலம்
கடந்த பின்னும்
இன்னும்
நம் காதலின் நொடிகளை
நம் இருவரால்
கடக்க முடிவதில்லை... 1228
இரவை மீண்டும்
இரவாக்க வேண்டும்
உன்னோடு
இமையும், இதழும் மூடி... 1229
தூக்கம் வராத
இரவுகளில்
நான்
உன்னைப் பற்றி
எழுதுவதில்லை
உன்னைப் பற்றி
எழுதாத இரவில்
எனக்கு தூக்கமும்
வருவதில்லை.... 1230
No comments:
Post a Comment