தனித்த இரவில்
எனக்கான இசையாய்
உன் முத்தங்களும்
எனக்கான வரியாய்
உன் கவிதைகளுமே
என்னோடு இருக்கிறது... 1201
இரவின் கருவில்
நீ
என்றுமே
என் குழந்தை தான்.... 1202
என் கவிதைகளுக்கு
வடிவம் கொடுக்கிறது
உன் கருவிழி
கருவிழி வாசிக்கும் போது
உயிரும் கொடுக்கிறது
அவ்வடிவங்களுக்கு.. 1203
மழை கூடிய
இரவெல்லாம்
என் மனதில்
இன்னும் பொழிகிறது
உன் முத்தம்.... 1204
தேவதை தேடும்
இரவு நான்
இரவில் நான் தேடும்
தேவதை நீ.... 1205
சிறகாய்
முத்தம் சுமந்து
என்னை வலம் வரும்
இரவு தேவதை நீ.... 1206
சிறகு விரித்து
இரவை சுற்றுகிறேன்
சிறகின் வர்ணங்களாய்
உன் முத்தம்
என்னை அழகூட்டும் போது.. 1207
இடம் மாறா இரவில்
உன் இதழை மீறாமல்
இன்னும் நகர்கிறது
என் இரவு.... 1208
ஒரு பகலுக்கும்
இன்னொரு இரவு
இருக்கிறதாம்
இரவாய்
நீ என்னுள்
இருப்பதை போல... 1209
என் நெஞ்சத்தின்
பசியை தீர்க்க
உன் ஆழப் பார்வை போதும்
என் ஆழப் பார்வையின்
பசியை தீர்க்க
உன் அழகான முத்தம்
வேண்டும்
இன்னும் ஆழமாக... 1210
No comments:
Post a Comment