சந்திக்க வேண்டிய
கண்களும்
காலங்களும்
இந்த அற்ப காலத்தை மீறி
உன்னைப் பற்றி
சிந்தித்துக்
கொண்டு இருக்கிறது... 1231
எந்த வடிவத்தில்
நீ
என்னுள் நிறைந்துள்ளாய்
என்று
யோசிக்கும் கனமொன்றில்
கண்ணீர் மட்டுமே விடை.. 1232
காதல் விதை
கனிவது என்னவோ
காலத்தால் தான்
காலம் தவறி
விதைத்தது யார் தவறு!! 1233
ஆன்மா அலையுறும்
அந்தரத்தில் தொங்கும்
இரவு கயிற்றில்,
அருகே நீ இல்லாத போது.. 1234
வலி முற்றிய
இரவெல்லாம்
உன்னை அடையும்
வழி தெரியாமல்
நானும்
வழியெங்கும்
தவித்துக் கொண்டு
இருக்கிறேன்... 1235
ரசிக்க வேண்டிய
இரவுகளும்
ரசிக்க வேண்டிய
கவிதைகளும்
ரகசியமாய்
கரைந்து விடுகிறது
கவிதையின் வழியே
இரவாக... 1236
இன்னும்
இன்பம் குறைந்து
இரவை இடம் மாற
வைக்கிறது
இந்த துன்பம்
நிறைந்த காலம்... 1237
காலத்தை வெல்ல
காலையில் இருந்து
போராட்டம்
காதல் இருப்பதால்
இன்னும்
உயிர் இருக்கிறது
இரவில் வாழ.... 1238
நிலவை
நீ சிரித்து
வசீகரத்தாய்
நிலவு இருளில் கலந்து
என் உடலில்
உன்னை தேடி அலைகிறது.. 1239
என் பயத்தை
சொல்லிவிட
பகிரங்க முத்தம்
பகிர்ந்து கொள்ள வேண்டுமோ!! 1240
No comments:
Post a Comment