என் உயிரே
ஏன் அழுகிறாய்
அதுவும் என்னை நினைத்து
பாவம் செய்தவள்
நீ அல்ல,
நான் தான்
என்னை காயப்படுத்த
உன்னை அழவைக்கிறான்
போல அந்த இறைவன்... 1261
உன் நினைவின்
ஒவ்வொரு துளியில்
பெருகுகிறது
காதலின் கரையில்
கண்ணீரின் வெள்ளம்... 1262
உடல் வலித்த போதும்
உறக்கம் தொலைந்த போதும்
இதயம் ஏங்கி கொண்டு தான்
இருக்கிறது
உனக்கொரு கவிதை எழுத.. 1263
உன் நினைவின் சாரல்
என் ஜன்னலை நிரப்பும் போது
காகிதம் நனைகின்றன
என் கண்ணீரின்
ஒரு துளியில்.... 1264
இடி இசைத்தால்
உன் இடையை பிடித்துக் கொள்வேன்
உன் கொலுசின் ஒலி கூட
இடியாய் இசைக்கும் போது... 1265
இதயமே
இசையாய் என்னை சுற்றும்
ஒலி நீ!!
இதமாய்
என்னுள் வீசும்
ஒளியும் நீ!!! 1266
உன்னை விரும்பும்
இதயத்தில்
உன் நினைவும்
அது எழுப்பும் சத்தமும்
தான் என் காதுகளுக்கு
கேட்கிறது உயிரே!! 1267
சின்ன சின்ன
மழைத்துளிகள் கூட உதவுகிறது
உன் பெரிய
முத்த மழைக்கு... 1268
தூறலிடும் இரவெல்லாம்
தூக்கம் இல்லை
உன் துணை தேடி
உன் துணிகளில்
நான் புதையும் போது... 1269
மழையும் வேண்டும்
மழைக்கு
என் இதழுக்கு குடையாக
உன் இதழும் வேண்டும்.. 1270
No comments:
Post a Comment