எதிர் பாரா
இரவின் வெளியில்
எதிர் வரும்
கண்ணீரின் காலடி
தடங்களில் ஒசை
எதிர் பார்த்த படியே
நம்
இருவருக்கும் கேட்கிறது... 1281
வெள்ளம் புகுந்த
ஊர்களில் எல்லாம்
வெள்ளத்தின் அடையாளமாய்
வீடுகள் இல்லை
என் உள்ளத்தில்
புகுந்த
உன் அன்பு வெள்ளத்தால்
நான்
இந்த மனித உலகிலே இல்லை.. 1282
நாய் என்று
அவள் உணர்த்திய போது
பேய் என்று
கனவு துரத்திய போது
என் சேய் சுமந்த
நீயும் சொன்னாய்
நான்
உன் காதலன் என்று... 1283
கடவுளுக்கும்
கருணை
இருப்பதை
உன் இதழால்
நான் கண்டேன்
காதலுக்கும்
கண் இருப்பது
உன்னில்
நான் கண்டேன்... 1284
தனிமை மாறாத
இரவெல்லாம்
என் காதலின்
கனவுகள் எல்லாம்
இளைத்து கொண்டு
இருப்பது ஏனோ?? 1285
குழந்தைப்
பாட்டு பாடி
மகிழ்வுறும்
நாள் ஒன்று
எனக்கு வாய்த்தால்
அதுவே
என் வாழ்க்கை
கனவுகளின்
விடுதலை என்பேன்... 1286
மரணம் என்ற
வார்த்தை
உருக்கொழைத்த போதும்
நீ எனக்காய்
மரணிக்க
துணிந்தவள்
என்று எண்ணும் போது
வார்த்தைகள் அற்று
ஒரு கவிதை வளர்கிறது... 1287
மழை மீது இருக்கும்
ஈர்ப்பு விசைகளை மீறி
உன் காதலின் மீது இருக்கும்
ஈடுபாடே
என்னை அதிகம்
ரசிக்க வைக்கிறது
இந்த இரவு மழையை.. 1288
மின்னல்கள் எழும்
ஜன்னல்களின் சத்தத்தில்
நடுச்சாமம் வரை
நீண்டு பெருகிய
மழையில்
நானும் நீயும்
நனைந்தோம்
வேர்வைகள்
வழிய விட்ட படி.... 1289
சாலையில் தேங்கிய
தண்ணீரெல்லாம்
தன் பாதை பார்த்து
ஓடுவதை போல
மழை விட்ட பிறகும்
காதலின் தூறல்கள்
உன்னை நோக்கி ஓடுகிறது.. 1290
No comments:
Post a Comment