நடந்து நடந்து
பாதம் வலிக்கிறது
அதைவிட
நீ நடந்த
பாதையெங்கும்
உன் பாதம் தெரியும் போது
என் பாதைகள் வலிக்கிறது.. 1351
இருக்கும் போது
தெரியாத
உன் உணர்வு
இப்பொழுது வெறும்
குற்ற உணர்ச்சியாக
தெரிகிறது
இரவுகள் எல்லாம்... 1352
சண்டையிட்டாலும்
சமாதானக் கொடி
எப்பொழுதும்
பறக்க விடுவாய்
உன் புன்னகையின் வழி
முகத்திலும்
அகத்திலும்.... 1353
விரும்பிய பாதைகள்
இல்லாத போதும்
பயணம்
உன் நினைவோடு
தொடர்ந்து
கொண்டே இருக்கிறது
பயணத்தின் பலன்
என்னவாகும்
என்று அறியாமல்.... 1354
முடிவில்லா பயணம்
என்பதை விட
முடிந்த வரையான
பயணங்களே
இப்பொழுது போதும்
என்று தோன்றுகிறது.. 1355
மகளுக்காக ஓவியமும்
மகனுக்காக இசையும்
உனக்காக முத்தமும்
நித்தம்
இசைத்துக் கொண்டே
இருக்கிறேன்.... 1356
நீயின்றி
நான் இசைக்கும் இசையெல்லாம்
இன்னலின் ஸ்ருதியில்
மெளனமாகவே இருக்கும்.. 1357
தும்மலின் போது கூட
அம்மா என்று வாய் அசைத்தாலும்
அம்மு என்றே
மனதில் ஒலிக்கிறது.... 1358
உன் இடம் தேடி
வரும் கரும் மேகம் நான்
உன்னில் காதல்
மழை தூற்றுவேன்
மழையின் துளியாய்
முத்தத்தை கூட்டுவேன்... 1359
உன்னோடு காணும்
கனவில்
என் கருவிழியை மெருகூட்டுகிறேன்
உன்னையே
அது இன்னும்
அழகாக காட்ட.... 1360
No comments:
Post a Comment