November 1, 2015

2015 கவிதைகள் 1301 to 1310

பிரகாரங்களை
சுற்றித் திரிவது ஏனோ?
பிரகாசமாய்
உன்னைச் சுற்றித்
திரிய தானே
என் அன்பே!!     1301

என் வானில்
என்றுமே
இரண்டு நிலா
ஒன்று நீ
இன்னொன்று
நம் உயிர்....     1302

வசந்தங்கள் வருவதுண்டு
வசதிகளும் வருவதுண்டு
தொடர்வது என்னவோ
தொலைவில் இருக்கும்
உன் காதல் மட்டுமே!!    1303

என்னை துரத்தாத
கனவுகள் இல்லை
கனவில் ஏனோ
நான் உன்னை
துரத்துவதும் இல்லை
என்ன பாக்கியம் அது!   1304

எந்த ஜாமத்திலும்
முடிவதில்லை
என் கனவுகள்
தொடங்கவே செய்கிறது
உன்னோடு
உன் நினைப்போடு!!    1305

கல்லைக் கட்டி
ஆற்றில் இறங்கினால்
உன் காதல் சக்தியை(பாரம்)
தாங்க முடியாமல்
ஆற்று நீர் வெளியேறுகிறது..  1306

என் உடலெங்கும்
இரவின் கோடுகள்
எப்பொழுது மாறும்
உன் இதழின் கோடுகளாய்.. 1307

உலகம் புரிந்த பின்
உன் உள்ளம்
புரிய ஆரம்பித்தது
உன் உள்ளம்
புரிய ஆரம்பித்த பின்
உள்ளம்
உலகத்தை வெறுக்க
ஆரம்பித்து விட்டது...   1308

இரவுக்கு இனிமை
உன் இதழின்
முத்தம் போல
வான் நிறைந்த
நட்சத்திரம் மட்டும் தான்...  1309

இன்பம் மற்றுத் திரியும்
இந்த காலத்திலும்
ஒரு பிடிப்பு
இருக்கிறதென்றால்
என்னை பின்
தொடரும்
உன் காதல் காலங்களால் தான்.. 1310

No comments:

Post a Comment