March 6, 2016

2016 கவிதைகள் 11 to 20

இருள் நிறையும்
நேரமெல்லாம்
உன் அருள்
என்னுள் நிறைந்துள்ளது
என் கவிதையே!!!         11

காதலை வளர்த்து
கண்களில்
நான் கண்ணீரை
வளர்த்தாலும்
காதலா
காதலாக
நீ இருக்கும் வரை
அதன் ஈரம்
என்னை தொடவதில்லை...  12

உன் அன்பின் முத்தம்
அதிகமான நொடியில்
உன் மடியில் கிடக்கும்
வரம் மட்டும் வேண்டும் நித்தம்
..  13

செய்யும்  செயலில்
சேர்ந்தே ஈடுபட
விதி செய்ய வேண்டும்
அந்த இரவு...     14

பெரும்பாலான இரவில்
உன் விழியை ரசித்த படி
ரகசியமாக கடந்து விட
வேண்டும் அந்த இரவை.. 15

பொறுமை
உனக்கு மட்டும் அல்ல
உன் இதழுக்கும் தான்...   16

இமை மூடி இரவை
கடந்தால்
இரவுகள் அனைத்தும்
எனக்கான கடவுள்கள்...  17

காகிதம் நிரப்புகிறது
உன் காதல் முத்தத்தின்
முதல் நினைவுகள்...   18

சந்தோசம் மிகுந்த இரவை
விட
உன் நினைவில் பாயும்
இரவை நானும்
கேட்கிறேன்
அந்த இறைவனிடம்...  19

கடந்து வந்த காலமெல்லாம்
காதலின் சுவடுகள்
நிறைந்து இருந்தாலும்
காதலியாய்
நீ என்னோடு நடக்க
முடியாத விதி தான்
என்னை அழச் செய்துவிடுகிறது
ஏதோவொரு இரவின்
காலத்தில்..    20

No comments:

Post a Comment