எனது பிரபஞ்சம்
நீ என்று ஆன பின்பு
எனக்குள் ஒரு
ஆழ்ந்த அமைதி
தூர தெரியும்
ஒரு மாமலையை போல
நீ
எங்கு இருந்து பார்த்தாலும்
அப்பொழுது தானே
நானும் தெரிவேன்... 51
மயில் ஆட விரும்புகிறது
மழை துளி (காலம்)
ஏனோ
பொழிய மறுக்கிறது
பொறுமை இழந்த
மயிலும் அகவும் போது
நமக்கும்
பொறாமை பிறக்கிறது... 52
எனது உறக்கத்தின்
அடிஆழத்தில்
உன் குரல்
பாடிக்கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு இரவிலும்
நான் உறங்கி எழுந்து
உன் முகம் தேடும் போது
அதை நானே உணர்கிறேன்.. 53
நகரெங்கும்
அலைந்து திரிந்து
உன்னைப் பற்றி
யோசித்து கடக்கிறேன்
ஏதோவொரு
கவிதையில் வாழ்ந்து கொண்டு... 54
கடவுளிடம் கேட்டேன்
உன்னைப் பற்றி
கவிதை எழுத
ஒரு ஞானத்தை
அவன்
காதலை கானகமாய்
நிறைத்து
அதில்
கானகமாய்
உன்னை இணைத்து
எனக்கு கொடுத்துவிட்டான்... 55
இறகை
தழுவ வேண்டிய விரல்கள்
நழுவ விட்டு
இரவு முழுவதும்
தேடிக் கொண்டு இருக்கிறது
இறகு இரவாய்
கரைந்து போன பின்பும்.... 56
தொடர்ந்த
ஒரு மழையில்
உன் கைவிரல் போதும்
கவிதை எனக்கு எதுக்கு? 57
குளிர் பரவிய போது
தளிர் விடும்
கவிதைகளில்
உன் முத்தம்
பூத்திருக்கிறது.. 58
பிடித்த பாடல் என்றாலும்
பிடிக்காத பாடல் என்றாலும்
உன் குரலின்
இனிமை உணர்ந்து
நானும்
ரசித்து கொண்டே
பொத்தி விடுவேன்
உன் வாயை
விரல்களுக்கு பதில்
இதழால்.... 59
பூக்கள் நிறைந்து இருக்கும்
ஒவ்வொரு இடத்திலும்
உந்தன் வாசம்
ஏனோ
மல்லிகை போல
இந்த பூமி எங்கும்
கலந்திருக்கும்.. 60
No comments:
Post a Comment