என்னிடம்
கெஞ்சுவதை போலவே
என்னை
கொஞ்ச உன்னால்
மட்டுமே முடியும்
என் அன்பே.... 41
அவ்வானம் போல
இக்கரு தேகத்தை
எப்பொழுது
உடுத்திக் கொள்வாய்
உன் புடவையாக... 42
சிலை சொல்லும்
அழகின் கலையை
அதிகாலையில்
உன் சீலை சொல்லும்
என் கலையின் அழகை.... 43
இரவெல்லாம்
விலகிய அச்சம்
என் கூச்சத்தை கூட்டுகிறது
உன்னோடு விடிந்த விடியலில்... 44
என் கவலைகளும்
காத்திருக்கிறது
உன்னிடம் இருந்து
பிரியும் சிறு நொடியேனும்
கண்ணீரை உதிர்த்துக் கொள்ள.... 45
நான் கானுவது எல்லாம்
உன் கவிதையின்
வரியாய் போனால்
என் வாழ்க்கை
உன் கவிதையில்
புதைந்து உள்ளன
என்பது
எத்தனை உண்மை... 46
வேறு யோசனைகள் அற்று
உன்னை யோசிக்கும் போது
என் கண்களும்
யோசிக்கிறது
உன்னை எவ்வளவு தூரம்
இழந்து
இவ்வாழ்க்கையில் (உன்னோடு) இருக்கிறேன் என்று 47
வாசல் எங்கும்
புன்னகை மலர் தூவுவேன்
வாசம் மிகுந்த
மல்லிகையோடு
நீ நம் வாசலை அடையும் போது.. 48
மலையை முத்தமிடும்
பனியின் கலையை போல
என்னிலே
எதிரொளிக்கிறாய் நீ
ஒவ்வொரு அதிகாலையிலும்.. 49
உன் முத்தம் பெரும்
தருணம் ஒன்றில்
மலை மீது ஏறி
எனக்கான உலகை
ரசிக்கிறேன்
அதன் வழியே
இவ்வாழ்வை மட்டும்
ருசிக்கிறேன்.... 50
No comments:
Post a Comment