தீராத காதல்
இருந்த போதும்
ஆறாத காயங்களை
ஏனோ மாற்றாதோ
இந்த வாழ்க்கை! 01
என்னுள் பிறக்கும்
கவிதையெல்லாம்
எங்கோ இருக்கும்
உன்னால் அல்ல
என்னுள் இருக்கும்
உன் நினைவால்..... 02
நீ அன்றி கடக்கும்
நாளில்
வார்த்தை அற்று நடக்கும்
ஒரு சராசரி கவிதை நான்... 03
காதல் பருவம்
கடந்த பின்னும்
பரவசம் இன்னும்
குறையாத காதல் நீ... 04
வாழ்வு ஒரு மின்மினி
காதல் அதன் வெளிச்சம்
உன் நினைவு தான்
அதன் சிறகு என் அன்பே!! 05
எத்தனை முறை
வடிந்த பின்னும்
கண்ணீரின்
ஈரம் காதலாக
குளிர்விக்கிறது என்னை.... 06
உன் குரல் கேட்காத
கொடிய நாளை
கேட்டுப் பார்
விடிய விடிய
கண்ணீர் சிந்திய
கதைகள் ஆயிரம் சொல்லும்.. 07
செல்லம் என்று
நான் உன்னை
சொல்லாத போதும்
உள்ளம் நிரம்ப
என்னை அழைக்கிறாய்
செல்லம் என
மிக செல்லமாக.... 08
வழியெங்கும்
அழகான பெண்கள்
கண்கள் ஏனோ
உன்னை எதிர் பார்க்கிறது
நமக்கு எதிரான
விதி இருந்த போதும்... 09
தவிப்புகள் இருந்த போதும்
காலை முதல்
காத்திருக்கிறேன்
மாலை வர
உன்னை கான நேரம் வர
உன் குரலை கேட்க
ஒரு அழைப்பு வர 10
No comments:
Post a Comment