உற்சாகம் நிரம்ப
ஒரு கவிதை எழுத
வேண்டும்
உள் அர்த்தம் அனைத்தும்
உன் இதழை
அர்த்தமாக்க வேண்டும் ... 21
பருவ மொட்டின்
பாதம் பார்த்து
எத்தனை நாட்கள்
ஆன பின்னும்
கைகள் கண்களின்
வழியே தொட்டுக்கொண்டு
தான் இருக்கிறது.... 22
பசி என்று
உன் பார்வை பார்த்தேன்
நீ
உன் உதட்டை சுழற்டினாய்
சூடு பெருகிய
உன் இடையில் கை வைத்த
உடனே
உன் விழியை மூடி
கனவை சுழற்டி விட்டாய்
காலை வரை.. 23
காற்றும் கூட
வெப்பமாய்
கரைந்து விடுகிறது
உன் காதலின்
மூச்சால்
என் இடையில்.... 24
விழிப்பை
நிராகரிக்கும்
ஒரு கனவு வேண்டும்
காதலியே
உன் நினைவில்
நான் உறங்கும்
ஒவ்வொரு இரவிலும்.. 25
இலை போல
உன் நினைவை
தின்னும்
புழு நான்
காதல் மணலே
கடைசி வரை
என் வீடு..... 26
காதல் சிறகு விரிந்தும்
கனவில் கூட
பறக்க முடிவதில்லை
உன்னோடு... 27
ஜீவன் உள்ள கனவின்
வழி காதல் வாழ்க்கை
ஜீவிக்கிறது இந்த
உலகில்
நமக்கான உயிர்களை கொண்டு.... 28
வாழ்க்கை முழுதும்
நடுக்கம்
இருந்த போதும்
அதை தடுக்க
காதலோடு
உன் முத்தமும் தேவைப்படுகிறது... 29
என்னை மட்டும் அல்ல
என் இதழையும்
குளிர் விக்கிறது
உன் பார்வை... 30
No comments:
Post a Comment