March 7, 2016

2016 கவிதைகள் 31 to 40

வெறுமை நீக்கும்
உன் பார்வை போதும்
இந்நாளை
நான் கடக்க.....  31

அழகான அமைதியை விட
ஆழமான அமைதி தான்
நம் முத்தத்தின் வாசல்...  32

ஒலி
எழுப்பும் பறவையாய்
என் காதல் காட்டில்
நீயே அலைந்து
திரிகிறாய்
என்னையே தேடி. .        33

தாயாக
நான் உன்னைப்
பார்த்த போதும்
ஒரு சேயாக
நீ
என்னைப் பார்க்கிறாய்...  34

கண்ணில் சேர்ந்திடும் 
ஆசைகள் 
கனவாய் கண்ணில் 
கரைவதை விட 
காதலாய் உன்னில் 
கரைய வேண்டும் 
என் உயிரே!!            35

பூவின் எண்ணங்களை 
பல வண்ணங்களாய் மாற்றி 
வண்ணத்துப் பூச்சியாய் 
என்னை வலம் வர 
வைத்து விட்டது 
இந்த காதல்.....     36

உன் பிரிவில் 
தத்தளிக்கும் 
அலைகள் அல்ல நான்
நான் ஒரு சிறிய மீன் 
என்னை கொத்தி 
தின்ன 
எப்போதும் காத்திருக்கிறது 
உன் நினைவுகள்...     37

உன் நினைவுகளும் 
அதன் நினைவுகளுமே 
என்னை நிதானமுடன் 
வாழச் சொல்கிறது...    38

அறை செல்ல 
விருப்பம் இல்லை 
உன் உரை கேட்டு 
நானும் வர நினைக்கிறேன் 
உன்னோடு 
இப்பாதையின் வழியே!    39

வலி முற்றிய காயம் 
என்று ஆன போதும் 
விழி அவ்வலியை 
எதிர் கொண்டு காத்திருக்கிறது 
ஒவ்வொரு இரவிலும்....  40

No comments:

Post a Comment