பசி என்ன? பெண்ணே
பசி! உன்னை
ரசிப்பதற்கே வாய்ப்புகள்
அற்ற போது!!
நடுஇரவில் பசிக்கும் போது
உன்னைப் பற்றி
எழுத ஆரம்பித்து விடுகிறேன்!!
அதில் ஏனோ ருசி அதிகம்
என்பதால்!!!
எதிர் எதிரே அமர்ந்து
உன் விழியால்
நீ ஊட்டிய உணவிற்கு
பின் பசி என்பதே
எனக்கு இல்லை..
இப்போதெல்லாம்
பசியோடு படுத்ததும்
உறங்கி விடுகிறேன்!
உன் நினைவை
அனைத்துக் கொண்டு!
உன் மூச்சுக் காற்றை
நான் உள் வாங்கி
கொண்டு!!
பசி என்று
நான் சொன்னவுடன்
எப்போதும் தயாராக
வைத்து இருக்கிறாய்
எனக்கான உணவை-
உன் முத்தம்...
உயிரே இப்போதெல்லாம்
உன் உணவையும் எனக்கே
ஊட்டிவிட்டு என்
முத்தத்தை மட்டும் பெற்றுக்
கொள்கிறாய் ஏன்?
என் பசிக்கு தன் மார்போடு
சேர்த்து பால் ஊட்டியவள்
தாய் என்றால்; என்னை
உன் கண்ணோடு சேர்த்து
காதலை ஊட்டியவள் நீயும்
ஒரு தாய் தானே!!!
என் மீதான காதல்
மொத்தத்தையும் உன்
கண்களிலே வைத்து
இருக்கிறாயே!!!
சிரிக்கும் போதும்,
அழும் போதும்...
எதுவுமே நடக்காத போதும்
எல்லாமும் நடந்ததாய்
நினைத்துக் கொள்கிறேன்
உன் ஒற்றை முத்தத்தில்..
விடிந்து நான் எழுவதற்கு முன்
விவரமாய் குளித்து முடித்து
விடுகிறாய் - அடுத்த அனைப்பிற்கு.,
பட்டிக்காட்டில்
படிகளை கூட தாண்டாமல்
எப்படி கற்று தேர்ந்தாய்
இத்தனை வித்தைகளையும்
என்னை கவர....
பசி எடுத்தாலும்
எனக்காகவே
வீட்டினில் காத்துருக்கிறாய்
பின் எனக்கும்
பசி எடுக்க ஆரம்பித்து விடுகிறது...
நல்ல கவிதை அமைய
நான் வார்த்தைகளை
கோர்ப்பது இல்லை,
மாறாக உன் இதழ்களை
கோர்த்துக் கொள்கிறேன்
என் கண் இமைகளில்...
கள்வா!!
தீராத காதல் மோகத்தில்
நான் உன்னை கட்டி அனைத்தேன்,
ஏனோ கண்ணில் கண்ணீர்
வழிந்தோடியது;
நீ என்னோடு இருக்கும்போது
கண்ணீர் வடிவது விசித்திரமான ஒன்று தான்;
அது ஒரு வேலை உன் கை
விரல் தீண்டுவதற்கு என்
கண்கள் செய்த மாயமாக கூட
இருக்கலாம்...
நீயும் துடைத்து எனக்கு
துணையாக உன் முத்தத்தையும்
கொடுத்துச் சென்றாய் அன்று..
குறுஞ்செய்தியில் கூட
என் இதழ்களையே
குறி வைத்து அனுப்புகிறாயே
உன் முத்தத்தை...
சொட்டுச் சொட்டாக
மருந்துகள் இட்டேன்
என் கண்ணில்;
கண்ணே! நீ இருந்தால்
உன் ஒரு சொட்டு
முத்தம் போதாத? என்ன...