October 27, 2014

புடவை

எனக்கும் ஆசையடா!!
நான் உடுத்திய புடவையில்
உனக்கு ஒரு தொட்டில்
கட்டி தாலாட்டு பாட....

முன்பெல்லாம் கண்ணாடியை
பார்த்து புடவை கட்டுவேன்;
இப்போதெல்லாம்
என் புடவையை உன்
கண்களை காணாமல்
ஒழுங்காய் கட்ட முடிவதில்லை;

அன்பே!!
அம்மா அதிகமாக திட்டுகிறாள்,
ஒரு புடவை கட்ட
இரண்டு மணி நேரமா? என்று,
அவளுக்கு என்ன தெரியும்
நீ என்னோடு இருப்பது..

வீட்டில் அம்மா
இல்லாத நேரங்களில்
உன்னை கட்டி அனைத்து
அனைத்து நானும்
கற்றுக் கொண்டேன்
புடவை கட்ட....

என்னைப் புடவையில்
உன்னைத் தவிர
வேறு எவரும்
பார்த்து விட முடியாது,
புடவை என்ன? நூலால்
நெய்ததா? என்ன
உன் இதழால் அல்லவா!!!

ஒரு சில நாளில்
என் புடைவையின் மீதே
எனக்கு பொறாமை
எழத் தான் செய்கிறது
எனக்கான முத்தத்தை
புடவை பெரும் போது..

சமையல் அறையில்
வடியும் என் வேர்வையை;
உன் கை விரல் தீண்டிய
என் சேலை முந்தானையால்
தொடைத்துக் கொள்கிறேன்;
என்னையே நீ அனைப்பது போல நினைத்துக் கொண்டு..

நீ எப்போதடா மதம்
மாறினாய் ஒரு
கன்னத்தில் கொடுத்தால்
மறு கன்னத்திலும்
கேட்கிறாய் என் முத்தத்தை..

ஒரு வேலை என் உயிர்
பிரிந்தால், இறுதியாக
நீ வாங்கி ந்த புடவையில்
பிரிய வேண்டும், அதன் பின்
உறுதியாக நீ வாங்கி
கொடுத்த முதல் புடவையில்
என்னை நீ தூக்கி செல்ல
வேண்டும் கல்லறை நோக்கி...

-SunMuga-
28-10-2014 20.45 PM

No comments:

Post a Comment