October 30, 2014

இரவு

நம் பிரிவை நினைத்து
விரியும் இந்த இரவில்
நான் எப்படி கண்ணீர்
இல்லாமல் கடக்க முடியும்?
கனவே!! யாரும் அற்ற
என் அறையில்
இரவில் நான் உன்னோடு
உறங்க தான் நித்தம்
வணங்குகிறேன் அந்த
கடவுளையும் கண்ணீரோடு.,
ஏதோவொரு காரணம்
உன் பிரிவிற்கு,
இரவில் தான் புரிகிறது
அது நான் என்று.,
இரவுக்கு முன் பொழுதில் நீ
உச்சரித்த வார்த்தைகள் தான்
வளர்க்கிறது என் கனவுகளை
நித்தம் உன்னோடு.,
இரவில் எனக்காக நீ பாடும்
பாடல் தான் என்னை
பாடலாக வாழச் சொல்கிறது
உன் குரலில்....
என்னைவிட இரவின்
கொடுமையை நீ தான்
அதிகமாய் அனுபவித்து
இருப்பாய் என்று
எனக்கும் தெரியும்....
ஏனோ ஒரு சில
இரவில் உன்னை
இறுக்கமாக கட்டி அனைத்து
இறந்து விடவே தோன்றுகிறது..
அன்பே!!
உன் விழியின் பார்வையை
பார்த்தே இத்தனை இரவுகளை
கடந்து விட்டேன் என் விழியை
மூடிக் கொண்டு...
உறக்கம் வராத இரவுகளில்
வானின் நட்சத்திரங்களை
எண்ண தொடங்கிவிடுகிறேன்
உன் முத்தத்தை எண்ணுவதாய் நினைத்து....
உன் இதழ் குவித்து
காற்றின் வழியே
நீ கொடுத்த முத்ததின்
மூச்சுக் காற்றைத் தான்
பல வருடங்கள் தாண்டியும்
நான் சுவாசித்துக் கொண்டு
இருக்கிறேன்...
-SunMuga-
30-10-2014 23.00 PM

No comments:

Post a Comment