October 29, 2014

மூன்றாம் பிறை

அன்பே!
உன்னை கவனிக்க
தவறும் அந்த மூன்று
நாட்கள் எனக்கு
எப்போதும் பிடிப்பதில்லை,
ஆனால் எனக்காக
பிறந்தவன் நீ,
எப்படியடா நீ இப்படி
மாறினாய்;
என்னை முத்தமிடவே
சமையல்அறை பக்கம்
ஒதுங்கியவன் நீ,
இப்போதெல்லாம்
நீயே சமைத்து
எனக்கு ஊட்டி விடுகிறாய்
என் வலியின் வேதனை
நீ உள்வாங்கிக் கொண்டு..
என் மீதான உன்
அன்பை கொஞ்சம்
குறைத்துக் கொள்
என் அன்பே!
உன்னதமான உன் அன்பால்
இப்போதெல்லாம் நான்காம்
நாளும் நீடிக்கிறதடா
என் மடையா!!
-SunMuga-
29-10-2014 21.00 PM

No comments:

Post a Comment