October 25, 2014

கல்லூரி

படிக்கும்போது
எப்போதும்
முதல் மதிப்பெண்
நான் தான் எடுப்பேன்;
முதல் முறை முத்ததின்
மொத்த மதிப்பையும்
பெற வைத்தது நீயாக
மட்டுமே இருக்க
முடியும் இப்பொழுதும்..
பாடத்தை கவனிக்காமல்
எப்போதும் என்னையே
கவனிப்பாய்; நான் அப்போதும்
உன்னையே கவனிப்பேன்..
பரிட்சை பேப்பரில்
பிள்ளையார் சுழி போடுவதற்கு
பதில் உன் இதழையே
வரைய பழகி விட்டேன்
என் அன்பே!!
பாதியிலே பரிட்சையை முடித்து
வந்து பேனாவின் மொத்த
மையையும் உன் மீதே
தெளித்தேன் முத்தமாக...
தேர்வுகளில் நான் தேர்வு
ஆனது என்னவோ உன்
தோளில் சாய்ந்த பிறகு தான்..
கணக்கு பாடத்தை விட
உன் காதல் பாடமே
என்னை அதிகம்
படுத்துதடா!!!
வகுப்பறையின் பலகையில்
சூத்திரம் எழுதுவதற்கு பதில்
சூரியனே உன் பெயரையே
எழுதி வந்தேன் என்னையும்
அறியாமல்....
கல்லூரியின் கோடை
விடுமுறையில் கூட
உன்னால் எனக்கு
குளிர்கிறது என் அன்பே!!
ஆச்சரியத்தோடு நீயும்
கேட்டாய் எப்படி படிக்காமல்
பாஸ் ஆகிறாய் என்று;
நீ படித்ததை தான்
நான் வாங்கி கொண்டேனே
உன் இதழ் வழி,
நீ படித்தால் போததா என்ன?
பலமாய் சிரித்து,
"சீ" போ!!! என்று
வெட்கத்தோடு என்னை
மெதுவாய் தள்ளினாய்...
சுருக்கெழுத்தை இப்போதெல்லாம்
சுகமாய் முடித்துவிடுகிறேன்
பென்சிலை உன் கை விரலாய்
நினைத்துக் கொண்டு..
அய்யோ!! மாட்டிக்கொண்டேன்
என்று நான் நினைத்தேன்,
அப்புறம் தான் தெரிந்தது
நீ தான் என்னிடம்
மாட்டிக்கொண்டாய் என்று;
யாரும் இல்லாத வகுப்பறையில்
நீயும் நானும் இருக்கும்போது..
கல்லூரியின் கணினி
அறையில் கூட உன்
காதலே வேலை செய்கிறது
என் மடையா!!!
மழைக்காக கூட நான்
ஒதுங்கிராத நூலகத்தின்
பக்கம் உனக்காக
ஒடி வந்தேன்,
யாரோ ஒருவன் எழுதிய
புத்தகத்தை நீ
வாசித்துக் கொண்டு இருந்தாய்,
நானும் வாசித்து முடித்தேன்
உன் இதழில் பிரதிபலித்த
வார்த்தைகளின் மூலம்...
கல்லூரியின் கதவை
அடைக்கும் வரை
என்னுள்ளே அடங்கி
மீண்டும் அடம்பிடிப்பாய்
எப்போது பார்ப்போம் என்று..
-SunMuga-
26-10-2014 22.00

No comments:

Post a Comment