சூடேறும்
பகலில் சுகமாய்
உன் நினைவு
என்னை
குளிர்விக்கிறது
என் சூரியனே!! 1011
பகலில் கூட
உன்னோடு உறங்கி
கானல் நீர் போல
உன்னோடு
உறகி விட ஆசை... 1012
வள்ளுவனுக்கு
மழை
என்றால் அமுது
எனக்கு
அம்மு
என்றால்
காதல் மழை.... 1013
நேரம் கூடிய
இரவு
உன்னை அனைத்து
என்னையும்
மறந்து
பிரிந்திடாத
என் இமையால்
அவ்வப்போது
நிகழத் தான் செய்கிறது
என் அன்பே!!! 1014
என் பெயர்
சொல்லி அழைப்பது
நீ
என்றால்
இப்பொழுது
சிரித்துக் கொள்கிறேன்
பிரியும்
உன் இதழை
என்னுள்
இழுத்துக் கொண்டு..... 1015
மனம் முழுதும்
உன் முகம்
இடம் மாறிய போதும்
இன்னும்
இன்னும்
கேட்கிறது
உன் குரல்
இந்த இரவை
கடந்தும்...... 1016
இப்போது ஒரு
பயனும் இல்லை
நீ இல்லாத போது
பிறந்த ஊருக்கு
பயணிப்பதில்.... 1017
காற்று
நிரம்பிய சங்கில்
சத்தம்
வெளிப்படுவதை போல
என் உயிரின்
சத்தத்தில்
உன் காதல் அடங்கியுள்ளது.. 1018
மழை மேகத்து
மின்னல்
நீ என்றால்
உன்னை கான
காத்திருக்கும்
ஒரு சிறு
இரவு நான்.... 1019
நீ இன்றி
நீர் இன்றி
என்னுள்
காதல் மழை
பொழியச் செய்யும்
வானம் நீ...... 1020
No comments:
Post a Comment