July 16, 2015

2015 கவிதைகள் 1021 to 1030

வேண்டாம் என
கண்ணம் நடிக்கிறது
இன்னும்
உன் முத்தம்
வேண்டும் என
என்
கண்கள் துடிக்கிறதே
என் காதலா!!         1021

காரணத்தின்
காரணம் அறிந்து
காரணமற்ற
இக்காதலில்
காதலும்
ஓர் காரணம்
காரணம் யாரும்
அறியாமல் இருக்க....  1022

நீ இன்றி
இருப்பதில்
ஓர் காரணம்
இன்னும்
ஒரே ஒரு காரணம்
நீ உயிரோடு
இருப்பதற்கு மட்டும்...    1023

நான் அறிந்த
விஷயம் ஒன்றில்
ஒரே ஒரு
விஷயம் சிறந்தது
என்றால்
இந்த  காதல் மட்டுமே...   1024

உன்னோடு
நனையும் மழையில்
மிகச் சிறப்பாய்
நானும்
நனைவேன்
உன்னையும்
என்னுள்
வழிய விடுவேன்....   1025

பாடலின் இசையில்
உன் இச் இச்
என்ற
இசையையே
நானும்
அதிகம் ரசிப்பேன்....  1026

பொத் தென
விழும் மழைத் துளியாய்
உன் இசையாலும்
உன் இச்-சாலும்
நானும்
உன் மேல் விழுவேன்...  1027

உன்னால்
எப்பொழுதும்
என் ராகம் தவறி விடுகிறது
இருந்தாலும்
இசையும் இதழும்
இன்னும் இசைக்கிறது...  1028

காலம் மறந்து
காமம் துறந்து
காதலின் இசையால்
உன்னை
காலம் முழுதும்
உறங்க வைக்க ஆசை...   1029

என்னை
எதிர் பார்த்து
உன்னோடு
இப்பொழுது
நம் உயிரும்
காத்திருக்கிறது
வாசற்படியில்...       1030

No comments:

Post a Comment